கிரிஸ்டல்நாக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரிஸ்டல்நாக்ட்
வேறு பெயர்கள் உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு , கிரிஸ்டல் நைட்
பங்கேற்றவர்கள் ஸ்ட்ரோமப்டேலுங்
செருமானிய பொதுமக்கள்
நிகழ்விடம் நாசி செர்மனி மற்றும் ஆஸ்திரியா
காலம் 9–10 நவம்பர் 1938

கிரிஸ்டல்நாக்ட் (Krystallnacht)கிரிஸ்டல் நைட் (Crystal Night) அல்லது உடைந்த கண்ணாடி சில்லுகளின் இரவு (the night of Broken Glass) எனப்பொருள்படும் இச்சம்பவம் நாசி ஜெர்மனியில் 1938 , நவம்பர் 9 இரவு முதல் நவம்பர் 10 ந்தேதி விடியற்காலை வரை நடந்த ஒரு கொடூரச்சம்பவத்தைக் குறிக்கும் சொல்லாகும். இவ்விரவில்தான் 91 யூதர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 25000 த்திலிருந்து 30000 பேர் வரை கைது செய்யப்பட்டு நாசி கைதிகள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். இது நவம்பர் நிகழ்வு என்றும் ஜெர்மனியில் கூறப்படுகிறது. நாசி இட்லரின் யூதபகைமைக் கொள்கையின் காரணமாக இந்நிகழ்வுகள் நடந்தேறின. இந்த ஒரு இரவில் 200 சினகோக் (Synagogues) என அழைக்கப்படும் யூத தொழுகைக் கூடங்கள் அழிக்கப்பட்டன. அவர்களுடைய உடைமைகள் மற்றும் செல்வங்கள் சூறையாடப்பட்டன. அவர்கள் சுயத்தொழில் புரிபவராயிருந்தாலும் யூதாரல்லாவதவரின் கீழ்தான் அந்தத் தொழில் புரியவேண்டும் என கட்டளைகள் இடப்பட்டன. இந்த இனப்படுகொலை நிகழ்வு இந்த இரவில் தான் நடைபெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்டல்நாக்ட்&oldid=1828364" இருந்து மீள்விக்கப்பட்டது