கிரிமியப் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிமியப் பாலம்
Crimean Bridge
2018 ஏப்ரல் 18 இல் கிரிமியப் பாலம். துசுலா தீவு இதன் நடுவில் காணப்படுகிறது.
அதிகாரப் பூர்வ பெயர் கிறீம்ஸ்கி மொஸ்த்
(Крымский мост)
போக்குவரத்து ஏ290 நெடுஞ்சாலையின் நான்கு வழித்தடங்கள்

தொடர்வண்டி இரண்டு வழித்தடங்கள்

தாண்டுவது கெர்க் கெர்ச் நீரிணை
இடம் கெர்ச் நகரம், கிரிமியா மூவலந்தீவு மற்றும் தமன் நகரம், உருசியா
வடிவமைப்பு வளைவுப் பாலம்
மொத்த நீளம் தொடருந்துப் பாலம்: 18.1 கிமீ
நெடுஞ்சாலை: 16.9 கிமீ
அதிகூடிய அகல்வு 227 மீ[1]
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து ஒரு நாளைக்கு 40,000 வாகனங்கள் வரை[2]
கட்டியவர் ஸ்த்ரோய்காஸ்மொந்தாசு
திறப்பு நாள் 16 மே 2018[3]
சுங்கத் தீர்வை இலவசம்[4]

கிரிமியப் பாலம் (Crimean Bridge,[5] உருசியம்: Крымский мост, ஒ.பெ கிரீம்ஸ்கி மொஸ்த், கெர்ச்சீன்ஸ்கி மொஸ்த்), அல்லது கெர்ச் நீரிணைப் பாலம், உருசியாவினால் கட்டப்பட்ட இரண்டு சமாந்தரப் பாலங்களாகும். இது கிரிமியாவின் (உக்ரைனுக்குச் சொந்தமான கிரிமியாவை உருசியா கைப்பற்றி வைத்துள்ளது). கெர்ச் நகரத்தையும் மற்றும் உருசியாவின் தமன் நகரத்தையும் கடல் வழியாக 18 கிலோ மீட்டர் நீளத்தில் இணைக்கும் கடல்பாலம் ஆகும்.

இப்பாலங்களூடாக நெடுஞ்சாலைப் போக்குவரத்தும், தொடர்வண்டிப் போக்குவரத்தும் நடைபெறுகின்றன. 18.1 கிமீ நீளமான இப்பாலம் உருசியாவிலும்,[6] ஐரோப்பாவிலும் மிக நீளமான பாலமாகும்.[6][7][8][9]

1903 இலேயே இப்பாலம் அமைப்பதற்கான பேச்சுக்கள் இருந்து வந்திருந்த போதிலும், 2014 ஆம் ஆண்டிலேயே கிரிமியா உருசியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. 2015 சனவரியில், பல பில்லியன் செலவிலான ஒப்பந்தம் அர்க்காதி ரொத்தன்பர்கின் ஸ்த்ரோகாஸ்மொந்தாசு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.. 2015 மே மாதத்தில் இதற்கான அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின. நெடுஞ்சாலைக்கான பாலம் 2018 மே 16 இல் திறந்து வைக்கப்பட்டது.[3] தொடர்வண்டிப் பாதை 2019 ஆரம்பத்தில் முடிவடையவிருக்கிறது.[10]

குண்டு வீச்சால் பாலம் சேதம்[தொகு]

உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பின் போது, 8 அக்டோபர் 2022 அன்று இப்பாலத்தின் மீது வெடிகுண்டுகள் வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் உருசியாவிற்கும், கிரிமியாவிற்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேதங்கள் இருந்தபோதிலும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த 10 மணி நேரத்திற்குப் பிறகு சாலை போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்த சேதத்திற்கு யார் காரணம் என தெரியவில்லை. ஆனால் இதற்கு உக்ரைன் மீது உருசியா குற்றம் சாட்டுகிறது.[11]

பின்னணி[தொகு]

கெர்ச் ஜலசந்தியில் 19 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிமியா பாலம் மாஸ்கோவிற்கும் கிரிமியன் தீபகற்பத்திற்கும் இடையிலான ஒரே நேரடி போக்குவரத்து இணைப்பாகும். 2018 ஆம் ஆண்டில் உருசிய அதிபர் புதினால் இப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த பாலம் கிரிமியாவிற்கு எரிபொருள், உணவு மற்றும் பிற பொருட்களை வழங்குவதற்கு பாலம் முக்கியமானதாகும். கிரிமியா பகுதியில் செவஸ்தோபோல் துறைமுகம் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Проектировщик моста в Крым — РБК: «Мы нашли оптимальное решение»". РБК. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
  2. "О проекте". Archived from the original on 2020-08-07. பார்க்கப்பட்ட நாள் 2018-06-03.
  3. 3.0 3.1 "Автодорожная часть Крымского моста открылась для движения автомобилей" (in ru). ТАСС. http://tass.ru/ekonomika/5203942. பார்த்த நாள்: 2018-05-16. 
  4. "Сколько будет стоить проезд по Крымскому мосту? - КерчьИНФО — новости Керчи". 12 May 2018. Archived from the original on 19 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூன் 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "Crimea Bridge: A Real Exclusive, and more to come!!". Thethruthspeaker.co. 28 October 2017. Archived from the original on 1 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 13-12-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  6. 6.0 6.1 "Bridge connects Crimea to Russia, and Putin to a Tsarist dream" (in en). South China Morning Post. http://www.scmp.com/news/world/russia-central-asia/article/2146158/bridge-connects-annexed-crimea-russia-and-putin-dream. 
  7. "Рекорд России и Европы: как строили Крымский мост" (in ru). NTV. http://www.ntv.ru/novosti/2018129/. பார்த்த நாள்: 16 May 2018. 
  8. CNN, Nathan Hodge,. "Russia's bridge to Crimea: A metaphor for the Putin era". CNN. https://www.cnn.com/2018/05/15/europe/russia-crimea-bridge-intl/index.html. 
  9. News, A. B. C. (2018-05-15). "Putin inaugurates bridge by driving a truck across to seized peninsula Crimea". ABC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-17. {{cite web}}: |last= has generic name (help)
  10. "Crimean bridge will open to car traffic in May, well ahead of schedule". RT International. 20 மார்ச் 2018. https://www.rt.com/business/421822-crimea-bridge-car-traffic/. பார்த்த நாள்: 10 April 2018. 
  11. Blast on bridge to Crimea hurts Russian supply lines

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிமியப்_பாலம்&oldid=3928896" இலிருந்து மீள்விக்கப்பட்டது