கிரிபாஸ்
கிரிபாசுக் குடியரசு Republic of Kiribati Ribaberiki Kiribati | |
|---|---|
| குறிக்கோள்: Te Mauri, te Raoi ao te Tabomoa "உடல்நலம், அமைதி, செழிப்பு" | |
| நாட்டுப்பண்: | |
| தலைநகரம் | தரவா[1] 1°28′N 173°2′E / 1.467°N 173.033°E |
| ஆட்சி மொழி(கள்) |
|
| இனக் குழுகள் (2020 census) |
|
| சமயம் (2020 கணக்கெடுப்பு) | |
| மக்கள் | கிரிபட்டி மக்கள் |
| அரசாங்கம் | ஒற்றையாட்சி சனாதிபதி நாடாளுமன்றக் குடியரசு |
• அரசுத்தலைவர் | தனெத்தி மாமாவு |
| சட்டமன்றம் | பிரதிநிதிகள் அவை |
| விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• விடுதலை கிடைத்தது | 12 சூலை 1979 |
• தராவா உடன்படிக்கை | 20 செப்டம்பர் 1979 |
| பரப்பு | |
• மொத்தம் | 811.19[3] km2 (313.20 sq mi) (172-ஆவது) |
| மக்கள் தொகை | |
• 2021[5] மதிப்பீடு | 121,388 (192-ஆவது) |
• 2024 கணக்கெடுப்பு | 119,438[4] |
• அடர்த்தி | 149.64/km2 (387.6/sq mi) |
| மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2023 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| மொ.உ.உ. (பெயரளவு) | 2023 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| ஜினி (2019) | 27.8[7] தாழ் |
| மமேசு (2023) | மத்திமம் · 140-ஆவது |
| நாணயம் | அவுஸ்திரேலிய டொலர் ($)[9] (AUD) |
| நேர வலயம் | ஒ.அ.நே+12, +13, +14 |
| வாகனம் செலுத்தல் | இடது |
| அழைப்புக்குறி | +686 |
| இணையக் குறி | .ki |
கிரிபாஸ் அல்லது கிரிபட்டி (Kiribati, /ˈkɪr.ɪ.bæs/ (ⓘ)),[10][11] என்பது மத்திய அமைதிப் பெருங்கடலில் ஓசியானியாவின் பகுதியான மைக்குரோனீசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். அதிகாரபூர்வமாக கிரிபாசுக் குடியரசு என அழைக்கப்படுகிறது.[12][13][3] இந்நாடு 32 பவளத் தீவுகளையும் மற்றும் பிற தீவுகளையும், ஒரு தொலைதூர உயர்ந்த பவளத் தீவான பனாபாவையும் கொண்டுள்ளது.[14] இதன் மொத்த நிலப்பரப்பு 811 சதுரகிமீ (313 சதுர மைல்) ஆகும்,[15] இது 3,441,810 சதுரகிமீ (1,328,890 சதுர மைல்) பெருங்கடலில் பரவியுள்ளது. மேற்கில் பனாபாவிலிருந்து கிழக்கில் கிரித்திமத்தி வரையிலான நாட்டின் தீவுகளின் பரவல் நிலநடுக் கோடு மற்றும் 180வது நெடுக்குவரையைத் தாண்டிச் செல்கிறது. பன்னாட்டு நாள் கோடு கிரிபட்டியைச் சுற்றிச் சென்று கிழக்கு நோக்கி வெகுதூரம் நகர்ந்து, கிட்டத்தட்ட 150°மேற்கை அடைகிறது. இது ஹவாய்க்குத் தெற்கே உள்ள கிரிபட்டியின் கிழக்குத் தீவுகளான தெற்கு இலைன் தீவுகளை கில்பர்ட்டுத் தீவுகளுடன் அதே நாளில் கொண்டு வந்து பூமியின் மிகவும் தொடக்க நேர மண்டலத்தில் (ஒசநே+14) வைக்கிறது.
கிரிபட்டியின் மக்கள்தொகை 2020 கணக்கெடுப்பின்படி 119,000 ஆகும். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தலைநகர் தரவாவில் வாழ்கின்றனர்.[16] கணிசமான எண்ணிக்கையிலான உள்ளூர் மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் நியூசிலாந்தில் குடியேறி வருகின்றனர். வரலாற்று ரீதியாக, சொலமன் தீவுகளில் உள்ள கிசோ, வாகினா தீவுகளில் அதிக மக்கள்தொகை மீள்குடியேற்றம் மூலமாகவும், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் கலப்புத் திருமணம் மூலமாகவும் புலம்பெயர் சமூகங்கள் உருவாக்கப்பட்டன. அண்மைக்காலத் தொழிலாளர் குடியேற்றத்தால் வளர்ந்து வரும் கிரிபட்டி புலம்பெயர் சமூகங்களைக் கொண்ட மற்றொரு நாடு ஆத்திரேலியா ஆகும்.[17]
கில்பர்ட்டு தீவுகள், 1892-இல் பிரித்தானியர்களால் ஒரு காப்பரசாக இணைக்கப்படும் வரை, அரசியல் ரீதியாக ஒன்றுக்கொன்று, தன்னாட்சி பெற்றவையாக இருந்தன; அப்போது அவற்றிற்கு பீனிக்சு அல்லது லைன் தீவுகளுடன் எந்த அரசியல் தொடர்பும் இருக்கவில்லை. கிரிபாசு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்று, 1979-இல் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மாறியபோது, 1979 இல் இந்தக் காப்பரசு முடிவுக்கு வந்தது.[18] இறையாண்மை கொண்ட கிரிபாசு நாட்டில் கில்பர்ட்டு தீவுகள், பீனிக்சு, லைன் தீவுகள், பனாபா ஆகியவை அடங்கும்.[19] தலைநகர் தராவா,[20][21] இது அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும், தொடர்ச்சியான தரைவழிப் பாதைகளால் இணைக்கப்பட்ட பல தீவுகளையும் கொண்டுள்ளது. இவை தராவா பவளத்தீவின் பாதிப் பகுதியை உள்ளடக்கியது. விடுதலைக்கு முன்பு நாடு பாஸ்பேட்டை ஏற்றுமதி செய்தது, ஆனால் பனாபாவில் உள்ள சுரங்கம் கிட்டத்தட்டத் தீர்ந்து போனதால் அதன் ஏற்றுமதி நடைபெறுவதில்லை. பனாபா மக்களின் வாரிசுகள் பெரும்பாலும் பிஜியில் உள்ள ராபி தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்கின்றனர், ஆனால் கிரிபாசு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.
போக்குவரத்து
[தொகு]
வான்வழிப் போக்குவரத்திற்கு, கிரிபாசின் பெரிய தீவில் ஒரே ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து பிஜியின் நந்தி நகரத்திற்கு வானூர்திகள் செல்கின்றன. தரைவழிப் போக்குவரத்திற்கு ஒரு சாலை உள்ளது.
பண்பாடு
[தொகு]மனேபா என்ற கட்டிடம் உள்ளது. இது அரசு அலுவலகமாகவும், தேவாலயமாகவும், சமூகக்கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் சமூகமாகவே வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிரிபாஸ் மொழியில் இறைவனுக்கான துதி பாடுகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டில் பன்றி வளர்க்கின்றனர். மீன்பிடித்தலையும், உழவுத்தொழிலையும் செய்கின்றனர். கவா என்ற செடியில் இருந்து பெறப்படும் சாற்றை மதுவிற்கு மாற்றாக அருந்துகின்றனர்.
மக்கள்
[தொகு]தலைநகரான தெற்கு டராவாவில், 51,000 பேர் வாழ்கின்றனர். இது சதுர கி.மீக்கு 5,000 பேர் என்ற அளவில் உள்ளது..
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About Kiribati – Kiribati For Travellers – Kiribati National Tourism Offic - "The capital of Kiribati is Tarawa, an atoll in the Gilbert Islands."".
- ↑ 2.0 2.1 Kiribati Census 2020. Retrieved 21 June 2022.
- ↑ 3.0 3.1 "Kiribati profile – Facts". BBC News. 23 May 2013. http://www.bbc.com/news/world-asia-pacific-16431215/.
- ↑ "2024 Census". Kiribati National Statistics Office – Ministry of Finance & Economic Development. Retrieved 17 August 2024.
- ↑ "Kiribati | Data". data.worldbank.org. Retrieved 2022-11-25.
- ↑ 6.0 6.1 "World Economic Outlook database: April 2023". April 2023. Retrieved 20 July 2023.
- ↑ "Gini Index coefficient". த வேர்ல்டு ஃபக்ட்புக். Retrieved 24 September 2024.
- ↑ "Human Development Report 2023/2024" (in ஆங்கிலம்). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 6 May 2025. Retrieved 6 May 2025.
- ↑ கிரிபட்டி டாலர் அதிகாரபூர்வ நாணயம் அல்ல.
- ↑ Wells, John, ed. (2008). Longman Pronunciation Dictionary (3rd ed.). Pearson Longman. ISBN 978-1-4058-8118-0.
- ↑ "Kiribati". Encyclopædia Britannica. "Kiribati: definition of Kiribati in Oxford dictionary (British & World English)". Oxford University Press. Archived from the original on 27 May 2016. Retrieved 31 December 2014.
- ↑ Kiribati. The World Factbook.
- ↑ Publications Office — Interinstitutional style guide — Annex A5 — List of countries, territories and currencies. Europa (web portal). Retrieved 28 January 2016.
- ↑ Goldberg, WM (2016). Atolls of the world: Revisiting the original checklist (Atoll Research Bulletin no. 610).
- ↑ "Kiribati: 2011 Article IV Consultation-Staff Report, Informational Annexes, Debt Sustainability Analysis, Public Information Notice on the Executive Board Discussion, and Statement by the Executive Director for Kiribati". International Monetary Fund Country Report No. 11/113. 24 May 2011. Retrieved 4 October 2011.
- ↑ Pacific Community and Kiribati National Statistics Office. (2022). Kiribati census atlas. https://nso.gov.ki/population/kiribati-census-atlas-2022/
- ↑ Dixon, Keith (2021). Acclimatising to higher ground: The realities of life of a Pacific atoll people. Sidestone.
- ↑ "Kiribati Independence Day". islandsbuisness.com. 19 March 2025.
- ↑ Macdonald, Barrie Keith (2001). Cinderellas of the Empire: Towards a History of Kiribati and Tuvalu. Canberra: (ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் Press, (first published 1982). ISBN 982-02-0335-X.
- ↑ "About Kiribati – Kiribati For Travellers – Kiribati National Tourism Office" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-14.
- ↑ "Tarawa Island – Kiribati For Travellers – Kiribati National Tourism Office" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-14.
வெளி இணைப்புகள்
[தொகு]- Map of Kiribati from World Maps
- Kiribati National Tourism Office
- Parliament of Kiribati பரணிடப்பட்டது 6 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
- Kiribati National Climate Change Portal பரணிடப்பட்டது 2 பெப்ரவரி 2012 at the வந்தவழி இயந்திரம்
- Chief of State and Cabinet Members (archived 6 May 2009)
- Kiribati. த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை.
