கிரிந்திர நாத் கோகோய்
கிரிந்திர நாத் கோகோய் | |
|---|---|
| பொதுப்பணித்துறை அமைச்சர் | |
| பதவியில் 28 திசம்பர் 1957 - 1962 | |
| துணை அமைச்சர், அசாம் அரசு | |
| பதவியில் 1952 - 1957 | |
| அசாம் சட்டப் பேரவை உறுப்பினர் | |
| பதவியில் 1951 - 1967 | |
| முன்னையவர் | தொகுதி உருவாக்கம் |
| பின்னவர் | பிரமோத்து கோகோய் |
| தொகுதி | சிவசாகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | இரண்யலதா கோகோய் |
| பிள்ளைகள் | பிரனாப் குமார் கோகோய்
பிரதீமா கோகைன் பிரவின் குமார் கோகோய் |
| பணி | அரசியல்வாதி |
கிரிந்திர நாத் கோகோய் (Girindra Nath Gogoi) என்பவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். அசாம் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், பொதுப்பணித் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். முன்னாள் சபாநாயகர் மற்றும் அமைச்சர் பிரணாப் குமார் கோகோயின் தந்தையாகவும் இவர் அறியப்படுகிறார்.[1][2]
அரசியல்
[தொகு]1952 ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில், கோகோய் சிவசாகர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டார். 11613 வாக்குகளைப் பெற்று அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.[3] விசுணு ராம் மேதியின் அமைச்சரவையில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]
1957 ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில், கோகோய் 11638 வாக்குகளைப் பெற்று சிப்சாகர் தொகுதிக்கான இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
1962ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில், 12282 வாக்குகளைப் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] பொதுப்பணித் துறைக்கான இணை அமைச்சரானார்.
1967 ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில், கோகோய் 9735 வாக்குகளைப் பெற்று, பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் புரோமோத் கோகோயிடம் தோல்வியடைந்தார்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கோகோய் மறைந்த இரண்யலதா கோகோயை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். பிரணாப் குமார் கோகோய் (19 ஆகத்து 1936 - 3 பிப்ரவரி 2020) சிவசாகரின் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும், சபாநாயகராகவும் இருந்தார்.
மகள் பிரதிமா கோகைன் கானா காந்தா கோகைன் என்ற பொறியாளரை மணந்தார்.
இவர்களின் இளைய மகன் பிரவின் குமார் கோகோய் ஓர் அறிஞர் மற்றும் கல்வியாளர். அசாம் அரசாங்கத்தில் இவர் கல்வித் துறையில் பல்வேறு முக்கியப் பணிகளை வகித்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Assembly, Assam (India) Legislature Legislative (1963). Debates; Official Report (in ஆங்கிலம்).
- ↑ 2.0 2.1 "Assam Legislative Assembly - Member". 2021-10-05. Archived from the original on 2021-10-05. Retrieved 2022-03-09.
- ↑ "🗳️ Girindranath Gogoi winner in Sibsagar, Assam Assembly Elections 1951: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". LatestLY (in ஆங்கிலம்). Retrieved 2022-03-09.
- ↑ "Gogoi ministry" (PDF). shodhganga.inflibnet.ac.in/. Retrieved 2018-11-05.
- ↑ "🗳️ Girindranath Gogoi winner in Sibsagar, Assam Assembly Elections 1957: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". LatestLY (in ஆங்கிலம்). Retrieved 2022-03-09.
- ↑ "🗳️ Girindra Nath Gogoi winner in Sibsagar, Assam Assembly Elections 1962: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". LatestLY (in ஆங்கிலம்). Retrieved 2022-03-09.
- ↑ "🗳️ P.C. Gogoi winner in Sibsagar, Assam Assembly Elections 1967: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". LatestLY (in ஆங்கிலம்). Retrieved 2022-03-09.