கிரிட்டு புதர் தவளை
| கிரிட்டு புதர் தவளை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
கிரிட்டு புதர் தவளை (Raorchestes griet) என்பது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும். விலங்கியல் வகைப்பாட்டியல்படி, இந்த இனத்தின் தவளை, இராகோபோரிடே என்ற குடும்பத்தின் கீழுள்ள, இராவோர்செசுடெசு என்ற பேரினத்தில் அமைந்துள்ளது.[1] இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள, பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே இது காணப்படுகிறது.[2][3] T இதன் குறிப்பிட்ட பெயரான "கிரிட்டு" என்பது, இச்சிற்றினத்தை விவரித்த விஞ்ஞானியான பிராங்கி போசுய்ட்டு என்பவரின் துணைவியார் கிரீட் டெகாக்கின் (Griet Decock) நினைவாக இடப்பட்டுள்ளது.[4][3]
வளரியல்பு
[தொகு]முதிர்ந்த ஆண் தவளைகள் 20 முதல் 22 மிமீ நீளம் கொண்டவை ஆகும்.[2][5] ஒரே ஒரு மாதிரியின் அடிப்படையில், முதிர்ந்த பெண் தவளைகளின் மூக்கு-குத (snout–vent) நீளம் 22 மிமீ ஆகும்.[5] இதன் மூக்குப் பகுதி வட்டவடிவமானது. செவிப்பறை தெளிவாகத் தெரிவதில்லை. ஆனால் செவிப்பறைக்கு மேலுள்ள மடிப்பு (supratympanic fold) தெளிவாகக் காணப்படுகிறது. விரல்களில் நன்கு வளர்ச்சியடைந்த வட்டத் தட்டுகள், தோல் விளிம்புகள் உள்ளன, ஆனால், விரல்களுக்கு இடையே சவ்வுகள் இல்லை. கால் விரல்களிலும் வட்டத் தட்டுகள், ஆரம்ப நிலையிலான, முழுமையற்ற சவ்வுகள் உள்ளன. மூக்குப் பகுதியின் தோலில் சிறிய கொம்பு போன்ற முட்கள் உள்ளன; மேலும், கண்களுக்கு இடையே, முக்கோண வடிவில் அமைந்த கொம்பு போன்ற மேடுகள் காணப்படுகின்றன. உடலின் மேற்புறத் தோலும், சிறிய கொம்பு போன்ற முட்களால் மூடப்பட்டுள்ளது.[2] உடலின் மேற்புறம் வெளிர் சாம்பல்-பழுப்பு, வெளிர் பழுப்பு-சாம்பல் அல்லது வெளிர் சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறக் குறிகள் காணப்படலாம்.[5]
வாழிடமும், அதன் பாதுகாப்பும்
[தொகு]இந்த இனமானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 முதல் 2000 மீட்டர் உயரத்தில், தனிமைப்படுத்தப்பட்ட காட்டுப் பகுதிகளுக்கு அருகிலுள்ள, சாலை ஓரத் தாவரங்களிலோ அல்லது காடுகளுக்கு அருகிலுள்ள தோட்டங்களிலோ காணப்பட்டுள்ளது.[6][5] இது இரவுநேர விலங்கு.[5] இது மரங்களில் வாழும் இயல்புடையது; எனவே, மரம் வெட்டும் நடவடிக்கைகளால் இதன் வாழ்விடத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆண் தவளைகள் தரையிலிருந்து இரண்டு மீட்டர் உயரம் வரையிலான பகுதிகளில் ஒலி எழுப்பித் தங்கள் இருப்பை வெளிப்படுத்துகின்றன.[5] இவை யூகலிப்டஸ் மரங்களில் காணப்பட்டுள்ளன. இருப்பினும், வணிக அடிப்படையில் வளர்க்கப்படும் தைல மரத் தோட்டங்களில், மற்ற தவளைகளைப் போல இவற்றால் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கருதவில்லை.[7]இவ்வகைத் தவளைகள், குறிப்பிட்ட சில பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் காணப்படலாம்; ஆனால், காடழிப்பால் ஏற்படும் வாழ்விடத் துண்டாடல், இவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு மேற்கொள்ளப்படும், வருடாந்திர யாத்திரைகளின்போது வரும் பயணிகளாலும், இத்தவளைகளுக்கு இடையூறு ஏற்படலாம். புதர் தவளைப் பேரினத்தைச் சேர்ந்த, மற்ற தவளைகளைத் தாக்கும் (Batrachochytrium dendrobatidis) எனும் பூஞ்சை தொற்றுக்குள்ளாக்குவதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். எனவே, இந்த இனத்தையும் தவளைகளையும், கைட்ரிடியோமைகோசிஸ் எனும் பூஞ்சை நோய் பாதிக்கக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர். மேலும், பருவநிலை மாற்றமும், இத்தவளைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.[6] இத்தவளைகளின் பரவல் எல்லைக்குள், பல பாதுகாக்கப்பட்ட பூங்காக்கள், சரணாலயங்கள் அடங்கும். அவற்றுள் மேகமலை வனவிலங்கு சரணாலயம், இரவிக்குளம் தேசிய பூங்கா, கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம், ஆனைமலை புலிகள் காப்பகம், பெரியார் புலிகள் காப்பகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raorchestes griet (Bossuyt, 2002)". indiabiodiversity.org (in ஆங்கிலம்). Retrieved 15 August 2026.
{{cite web}}: Text "Species" ignored (help) - 1 2 3 Bossuyt, Franky (2002). "A new species of Philautus (Anura: Ranidae) from the Western Ghats of India". Journal of Herpetology 36 (4): 656–661. doi:10.2307/1565937. https://archive.org/details/sim_journal-of-herpetology_2002-12_36_4/page/n121.
- 1 2 Beolens, Bo; Watkins, Michael & Grayson, Michael (2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. p. 84. ISBN 978-1-907807-42-8.
- ↑ Frost, Darrel R. (2018). "Raorchestes griet (Bossuyt, 2002)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 29 June 2018.
- 1 2 3 4 5 6 Biju, S. D.; Bossuyt, Franky (2009). "Systematics and phylogeny of Philautus Gistel, 1848 (Anura, Rhacophoridae) in the Western Ghats of India, with descriptions of 12 new species". Zoological Journal of the Linnean Society 155 (2): 374–444. doi:10.1111/j.1096-3642.2008.00466.x.
- 1 2 3 IUCN SSC Amphibian Specialist Group (2023). "Griet Bush Frog: Raorchestes griet". The IUCN Red List of Threatened Species. 3.1. p. e.T58849A166107068. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T58849A166107068.en. 58849. Retrieved March 14, 2024.
- ↑ Keith Lui (October 14, 2008). Kellie Whittaker; Michelle S. Koo (eds.). "Raorchestes griet (Bossuyt, 2002)". AmphibiaWeb. University of California, Berkeley. Retrieved August 20, 2023.
