கிரிசிகர் லோக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரிசிகர் லோக் கட்சி (விவசாயிகள் கட்சி), இந்தியாவில் உள்ள ஐதராபாத் இராச்சியத்தில் செயல்பட்ட அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 195ஆம் ஆண்டில் ஏப்ரல்-சூன் ஐதராபாத் மாநில பிரஜா கட்சியிலிருந்து ஆச்சார்யா கொகினேனி ரங்க நாயுகுலு பிரிந்தபோது உருவாக்கப்பட்டது.

கிரிசிகர் லோக் கட்சி 1951 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 1952ஆம் ஆண்டில் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களை வென்றது.[1]

1952ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது புத்தூரிலிருந்து ஆர். பி. வி. சுந்தர்சன வர்மாவை எதிர்த்து கிரிஷிகர் லோக் கட்சியின் சார்பில் ஜி சிவய்யா போட்டியிட்டு 15741 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தியத் தேசிய காங்கிரசின் ஆர். பி. வி. சுந்தர்சன வர்மா 25959 வாக்குகள் பெற்றார். ஜி சிவய்யா 10218 வாக்குகள் பெற்றார்.[2]

ரங்கா பின்னர் சுதந்திராக் கட்சியின் நிறுவனர்-தலைவராக ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "STATISTICAL REPORTS OF ASSEMBLY ELECTIONS OF STATES WHICH ARE NO LONGER IN EXISTENCE AFTER REORGANIZATION". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 28 December 2018.
  2. "Details of Assembly By- Elections since 1952". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 28 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிசிகர்_லோக்_கட்சி&oldid=3625228" இலிருந்து மீள்விக்கப்பட்டது