கிரிசா ஒசநகரா நாகராஜேகவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரிசா ஒசநகரா நாகராஜெகவுடா (Girisha Hosanagara Nagarajegowda, மாற்று ஒலிப்பெயர்ப்பு: கிரிஷா ஹொசநகரா நாகராஜெகவுடா, கன்னடம்:ಗಿರೀಶ ಹೊಸನಗರ ನಾಗರಾಜೇಗೌಡ, பிறப்பு 26 சனவரி 1988), இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் விளையாட்டு வீரர் ஆவார். 2012 மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஆடவர் உயரம் தாண்டுதலில் இறுதிப்போட்டியில் 1.74மீ உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிகழ்வில் பதக்கம் ஒன்றை வென்ற முதல் இந்தியர் இவரே ஆவார்.[1] இவருக்கு பெங்களூரைச் சேர்ந்த "சமர்த்தனம்", என்ற அரசுசாரா அமைப்பு ஆதரவளித்து வருகிறது. இந்திய அரசும் ஆதரவு அளித்துள்ளது.[2] நாகராஜெகவுடா மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இந்தியாவின் ஒன்பதாவது பதக்கம் பெற்ற வீரராகவும் [3] இந்த விளையாட்டுக்களில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மூன்றாவது வீரராகவும்[4] விளங்குகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]