கிரிகோர் மெகிதாரியன்
| கிரிகோர் மெகிதாரியன் Krikor Mekhitarian | |
|---|---|
2008 ஆம் ஆண்டில் கிரிகோர் மெகிதாரியன் | |
| முழுப் பெயர் | கிரிகோர் சேவக் மெகிதாரியன் |
| நாடு | பிரேசில் |
| பிறப்பு | 15 நவம்பர் 1986 சாவோ பாவுலோ, பிரேசில் |
| பட்டம் | பேராதன் (2010) |
| பிடே தரவுகோள் | 2562 (திசம்பர் 2021) |
| உச்சத் தரவுகோள் | 2589 (சூலை 2015) |
கிரிகோர் மெகிதாரியன் (Krikor Mekhitarian) என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர். 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பிடே அமைப்பு 2010 ஆம் ஆண்டு சதுரங்க கிராண்டு மாசுட்டர் பட்டத்தை இவருக்கு வழங்கியது. இரண்டு முறை பிரேசில் நாட்டு சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை கிரிகோர் மெகிதாரியன் வென்றுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஆர்மீனிய வம்சாவளியைச் சேர்ந்த பிரேசிலிய தாய்க்கும் லெபனான் தந்தைக்கும் பிறந்த இவர், ஏழு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார்.[1]
சதுரங்க வாழ்க்கை
[தொகு]கிரிகோர் மெகிதிரியன் எட்டு மாதங்களுக்குள் தனது கிராண்டுமாசுட்டர் பட்டத்தை அடைந்தார். 2009 ஆம் ஆன்டில் நடைபெற்ற 26ஆவது பிரேசிலிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் தனது முதல் கிராண்டுமாசுட்டர் பட்டத்திற்கான விதிமுறையைப் பெற்றார். 7.5/11 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இரண்டாவது விதிமுறையை 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற லா லகுனா போட்டியில் எட்டாவது இடத்தையும் 6/9 மதிப்பெண்ணையும் பெற்று அடைந்தார். இறுதி விதிமுறையை 2010 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் உருமேனியாவில் நடைபெற்ற பன்னாட்டு சதுரங்க விழாவில் 9ஆவது இடத்தைப் பிடித்து நிறைவு செய்தார். அங்கு 8/11 புள்ளிகள் ஈட்டினார்.[2][3]
டாடா எஃகு சதுரங்கப் போட்டியின் சி குழுவில் 2013 ஆம் ஆண்டில் பங்கேற்று, 8/13 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தைப் பிடித்தார்.
2016 சதுரங்க ஒலிம்பியாடு புறக்கணிப்பு
[தொகு]2016 ஆம் ஆண்டு சதுரங்க ஒலிம்பியாடு போட்டி அசர்பைசானின் பக்கூவில் நடைபெற்றது. போட்டியை நடத்தும் நாட்டோடு ஆயுத மோதலில் ஈடுபட்டிருந்த ஆர்மீனியா, தனது பிரதிநிதிகள் குழு ஆபத்தில் இருப்பதாகக் கூறி நிகழ்வைப் புறக்கணித்தது.[4] ஆர்மீனிய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்ததால், அப்போதைய பிரேசிலிய சதுரங்க வெற்றியாளரான கிரிகோர் மெகிதாரியன், ஆர்மீனிய அணியை ஆதரிப்பதற்கும் அசர்பைசானில் ஆர்மீனியர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்ப்பதற்கும் ஒரு வழியாக இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்தார்.[5][6]
அணி சதுரங்க முடிவுகள்
[தொகு]ஐந்து சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் கிரிகோர் மெகிதாரியன்பிரேசிலைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் [7] [8] [9] [10]
- 39ஆவது சதுரங்க ஒலிம்பியாடு: காண்டி மான்சிசுக்கு, 2010 - பலகை 4, 3.5/8 (+1 =5 -2)
- 40ஆவது சதுரங்க ஒலிம்பியாடு: இசுதான்புல், 2012 - காத்திருப்பு, 3/6 (+1 =4 -1)
- 41ஆவது சதுரங்க ஒலிம்பியாடு: துரோம்சோ, 2014 - பலகை 3, 6.5/10 (+5 =3 -2)
- 43ஆவது சதுரங்க ஒலிம்பியாடு: பத்தூமி, 2018 - பலகை 4, 5.5/8 (+4 =3 -1)
- 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு: சென்னை, 2022 - பலகை 3, 7.5/11 (+7 =1 -3)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Martirosyan, Vera (30 January 2013). "Fighting spirit plays a crucial role in Armenian chess players' victories- Krikor Sevag Mekhitarian". sport.news.am. http://sport.news.am/eng/news/18426/fighting-spirit-plays-a-crucial-role-in-armenian-chess-players-victories--krikor-sevag-mekhitarian.html.
- ↑ International Chess Festival Eforie - June 17 to 27, 2010
- ↑ International Chess Festival Eforie Nord 2010 - Ranking
- ↑ "Armenian chess team not to participate in World Chess Olympiad in Baku". armenpress.am (in ஆங்கிலம்). 2016-07-25.
- ↑ Seto, Guilherme (2016-07-27). "Brasileiro larga Olimpíada de xadrez em repúdio à violência no Azerbaijão". Folha de S.Paulo. Retrieved 2023-02-03.
- ↑ "Campeão Brasileiro abre mão de compor equipe brasileira na Olimpíada de Xadrez no Azerbaijão". Estação Armênia (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). 2016-03-30. Retrieved 2023-02-03.
- ↑ Krikor Mekhitarian Olimpbase. Accessed 29 July 2014
- ↑ Brazil team performance Tromso 2014 Chess-Results.com. Accessed 16 August 2014
- ↑ Brazil team performance Batumi 2018 Chess-Results.com. Accessed 12 August 2022
- ↑ Brazil team performance Chennai 2022 Chess-Results.com. Accessed 12 August 2022
வெளி இணைப்புகள்
[தொகு]- கிரிகோர் மெகிதாரியன் player profile and games at Chessgames.com
- Krikor Mekhitarian player profile at 365Chess.com
- Interview with Krikor Sevag Mekhitarian at Chessdom.com