உள்ளடக்கத்துக்குச் செல்

கிராவ் மகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராவ் மகா
Krav Maga
(קרב מגע)
கிராவ் மகா சின்னம்
நோக்கம்கலப்பு
தோன்றிய நாடுஇசுரேல் இசுரேல்
செக்கோசிலோவாக்கியா செக்கோசிலோவாக்கியா
(தற்போது சிலோவாக்கியா)
அங்கேரி அங்கேரி
உருவாக்கியவர்இமி லிச்டென்பெல்ட்
Parenthoodகபப், பல தற்காப்புக் கலைகள்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை

கிராவ் மகா (Krav Maga, எபிரேயம்: קרב מגע‎), ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை. இசுரேலில் வளர்ந்த இது தாக்குதல் நுட்பங்கள், மற்போர், மடக்கிப்பிடித்தல் ஆகிய நுட்பங்களைக் கொண்டது.[1] இது நடைமுறை தேவையை நோக்காகக் கொண்ட, மிகவும் பயனுள்ளதும், மூர்க்கமான பதில் தாக்குதல் முறை கொண்டதாகும். கிராவ் மகா வீதிச் சண்டை நுட்ப முறையிலிருந்து இமி லிச்டென்பெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1930களின் நடுப்பகுதியில் பிராத்திஸ்லாவாவிலிருந்த பாசிஸ குழுக்களிடமிருந்து யூத பகுதியை பாதுகாக்க, அவருக்குத் தெரிந்த குத்துச்சண்டை மற்றும் மற்போர் நுட்பங்களை பயிற்றுவித்தார்.[2] 1940களின் பிற்பகுதியில் இவர் இசுரேலுக்கு குடியேறி, தற்போது இசுரேலிய பாதுகாப்பு படையாக மாற்றம் பெற்றோருக்கு போர்ப் பயிற்சிகளை வழக்கினார். அக்காலத்தில் கிராவ் மகா என அழைக்கப்படும் சண்டைக் கலையை மேம்படுத்தினார். இது பொது மக்களுக்கு, காவற்துறைக்கு, இராணுவத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.[3]

அச்சுறுத்தலை செயலிழக்கச் செய்தல், ஒரே தடவையில் தாக்குதல், தற்காப்பினை மேற்கொள்ளல், மூர்க்கம் என்பன கிராவ் மகாவின் தத்துவங்களாகும்.[4] கிராவ் மகா சாதாரண, சிறப்பு இசுரேலிய பாதுகாப்பு படையால் பாவிக்கப்படுகிறது. சில மாற்றங்கள் செய்யப்பட்டு சட்ட அமுலாக்கல் மற்றும் புலனாய்வு பிரிவுகளான மொசாட், சின் பெட்டினால் பாவிக்கப்படுகிறது. இசுரேலுக்கு வெளியிலும் இது பலதரப்பட்ட சிறப்பு காவற்துறை, இராணுவ, புலனாய்வு படைகளான சிஐஏ, எப்பிஐ, போன்றவற்றால் பாவிக்கப்படுகிறது.[5][6] சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் வேறுபட்ட கிராவ் மகாவை கற்பிக்கின்றன.[7][8][9]

சொல்லிணக்கம்

[தொகு]

கிராவ் மகா எனும் எபிரேயச் சொல்லின் அர்த்தம் கைக்கு கை சண்டை என்பதாகும்.

அடிப்படை கொள்கைகள்

[தொகு]
"கிராவ் மகா" பயிற்சி, இசுரேல், 1955

சண்டையை மிகவும் முன்னதாகவே முடித்துவிட வேண்டும் என்பது கிராவ் மகாவின் அடிப்படை கொள்கை. ஆகவே எல்லா தாக்குதல்களும் உடலின் பலவீனமான பகுதிகளை (முகம், கழுத்து, இடுப்புக்கு கீழ்பகுதி, முழங்கால்) நோக்கியதாக இருக்கும். ஏனென்றால் அங்கு எந்தவித விளையாட்டுக்குரிய விதிமுறைகள் இல்லை.

பொதுவான அடிப்படை கொள்கைகளாவன:

  • மிக விரைவாக பதில் தாக்குதல் நடத்துதல் (அல்லது தாக்குதலை விரைவாக ஆரம்பித்தல்)
  • உடலின் மிக பலவீனமான பகுதிகளில் தாக்குதல் (கண்கள், தொண்டை, தாடை, இடுப்புக்கு கீழ்பகுதி, முழங்கால்)
  • முறியடிக்க முடியாத பதில் தாக்குதல்கள் மூலம் மிக விரைவாக செயற்படா நிலையை உருவாக்கல். தேவைப்பட்டால் நிலை குலையச் செய்தல் அல்லது மூட்டுக்களை உடைத்தல்
  • சுற்றுப்புறம் பற்றிய தெளிவை கொண்டிருத்தல். இதன் மூலம் தப்புதலுக்கான வழியைத் தேடல், மேலதிகமாக தாக்கக் கூடியவர்களை அறிதல், தாக்கவோ அல்லது பாதுகாக்கவோ தேவையான பொருட்களை கண்டு கொள்ளலாம்.
கிராவ் மகா பட்டி நிறங்கள்
வெள்ளை
மஞ்சள்
செம்மஞ்சள்
பச்சை
நீலம்
பளுப்பு
கறுப்பு

கிராவ் மகா நுட்பங்கள்

[தொகு]
  • கை நுட்பங்கள்
  • கால் நுட்பங்கள்
  • தலை தாக்குதல்கள்
  • பாதுகாப்பு நுட்பங்கள்
  • எறிதல், வீழ்த்துதல்
  • நிலத்தில் சண்டை
  • துப்பாக்கி, கத்தி, தடி பாதுகாப்பு

தற்போதைய பாவனை

[தொகு]

இசுரேலிய பாதுகாப்பு படை வீரர்களால் காவற்துறையினர் உட்பட்டோரால்பாவிக்கப்படுகிறது.[9][10] கிராவ் மகா பயிலுதல் அவர்களில் அடிப்படை பயிற்சிகளில் ஒன்று. இசுரேலிய சிறப்பு காவற்துறையினர், புலனாய்வுத்துறையினர் உட்பட்ட சகல தேசிய பாதுகாப்பு கடமைகளில் உள்ள எல்லோருக்கும் இது பயிற்றுவிக்கப்படுகிறது. இதைத்தவிர பொதுமக்களுக்கும் உலகிலுள்ள பல சட்ட அமுலாக்கல் மற்றும் இராணுவத்தினருக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது. டெல் அவீவிலுள்ள கிராவ் மகா சங்கம் உலகில் சிறந்த மெய்ப்பாதுகாவலர்களை பயிற்றுவிக்கிறது.

கிராவ் மகாவை பாவிக்கும் நிறுவனங்களும் படைகளும்[5][6]

[தொகு]
கிராவ் மகா பயிற்சி பெறும் அமெரிக்க ஈரூடக படைவீரர்

முக்கிய ஊடகங்களில்

[தொகு]

கிராவ் மகா சில முன்னோடி ஊடகங்களில் இடம்பிடித்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Contact combat". Telegraph (Calcutta, India). 2009-01-28. http://www.telegraphindia.com/1090128/jsp/entertainment/story_10446686.jsp. பார்த்த நாள்: 2010-05-20. 
  2. Hodsdon, Amelia (2005-02-09). "Get your kicks with Israeli tricks". Guardian (London). http://www.guardian.co.uk/world/2005/feb/09/israel.theeditorpressreview. பார்த்த நாள்: 2010-01-01. 
  3. "The mother of all fightbacks". Daily Telegraph (London). 2005-10-22. http://www.telegraph.co.uk/education/3352222/The-mother-of-all-fightbacks.html. பார்த்த நாள்: 2010-05-20. 
  4. "All change on the buses". பிபிசி. http://news.bbc.co.uk/1/hi/uk/47442.stm. பார்த்த நாள்: 2010-01-03. 
  5. 5.0 5.1 Tactical Survival - About Tactical Krav Maga
  6. 6.0 6.1 http://www.kravmagaeu.com/index.php/history[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Inside Israel". Black Belt Magazine இம் மூலத்தில் இருந்து 2010-05-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100511021512/http://www.blackbeltmag.com/archives/141. பார்த்த நாள்: 2009-12-31. 
  8. "Choke! Gouge! Smash!". டைம். 1998-05-04 இம் மூலத்தில் இருந்து 2010-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101021094242/http://www.time.com/time/magazine/article/0,9171,988284,00.html. பார்த்த நாள்: 2010-01-01. 
  9. 9.0 9.1 Ryan, Rosalind. "J.Lo's fitness fad and Salma's 'sweaty' hobby". Daily Mail (London). http://www.dailymail.co.uk/health/article-134671/J-Los-fitness-fad-Salmas-sweaty-hobby.html. பார்த்த நாள்: 2010-01-01. 
  10. "Fight Club". Haaretz. http://www.haaretz.com/hasen/pages/ShArt.jhtml?itemNo=477975&contrassID=2&subContrassID=1&sbSubContrassID=0&listSrc=Y. பார்த்த நாள்: 2010-01-02. 
  11. Benroth, Nicholas. "Krav Maga training gives Airmen the combat edge". Archived from the original on 12 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. 12.0 12.1 Kaufman, David (2010-11-26). "Krav Maga: Israeli Self-Defense Goes Global". Time இம் மூலத்தில் இருந்து 2012-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120124152133/http://www.time.com/time/world/article/0,8599,2032483,00.html. பார்த்த நாள்: 25 January 2012. 

மேலதிக வாசிப்பு

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Krav Maga
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராவ்_மகா&oldid=3537235" இலிருந்து மீள்விக்கப்பட்டது