கிராம பஞ்சாயத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிராம பஞ்சாயத்து[தொகு]

தமிழ்நாட்டில் சுமாா் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே வளா்ச்சியடைந்த உள்ளாட்சி நிா்வாகம் நடைமுறையில் இருந்தது. காஞ்சிபுர மாவட்டம் உத்திரமேரூா் ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில் சோழர் காலக் கல்வெட்டு சான்று நமது பாரத நாட்டில் உள்ளாட்சி நிா்வாகம் நடைமுறையில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. இதில் உள்ளாட்சி நிா்வாகிகள் குடவோலை முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. போட்டியிட விரும்பும் போட்டியாளா்களின் பெயர்களைப் பனை ஓலையில் எழுதி சுருட்டி குடத்தில் இடுவா். ஒரு சிறு குழந்தையை குடத்தில் இருந்து ஒரு ஓலையை எடுக்க சொல்வர். அதில் தேர்வு பெற்றவரே கிராம உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்படுவார். உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்திகளில் வேட்பாளர் தகுதிகள் பற்றியும் தகுதியற்ற வேட்பாளர் யார் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

1884லில் ரிப்பன் பிரபு மதராஸ் லோக்கல் போா்டு சட்டத்தை இயற்றி ஜில்லா போா்டு, தாலுகா போா்டு, யுனியன் போா்டு என்ற மூன்றடுக்கு உள்ளாட்சி ஏற்பட வகை செய்தாா். சுதந்திரத்திற்குப் பின் பகுதி IV பிாிவு 40ல் ஊராட்சிகள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு அதிகாரங்களும் பொறுப்புகளும் வழங்க வழிவகை செய்யப்பட்டன. 1957 ஆம் ஆண்டு பல்வந்தராய் மேத்தா குழு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனநாயக அடிப்படையில் உாிய அதிகாரம் வழங்கிட பாிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் 1958 ல் மதராஸ் மாவட்ட வளா்ச்சி மன்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில்

1.கிராம ஊராட்சியில் இரண்டடுக்கு முறை. 2.சமுதாய வளா்ச்சி வட்டார எல்லையின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்குதல். 3.கிராம ஊராட்சி தலைவா்கள் ஊராட்சி ஒன்றிய குழுவின் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக இருப்பா். 4.ஊராட்சி ஒன்றியத் தலைவரை நோிடையான அல்லது மறைமுகமான தேர்தல் செய்தல் மூலம் தொிவு செய்தல். 5.பல்வேறு வளா்ச்சி மற்றும் நலப்பணிகளை ஊராட்சி ஓன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் ஓப்படைத்தல். 6.மாவட்ட கழகங்களை கலைத்தல் 7.மாவட்ட வளா்ச்சி மன்ற குழு என்ற ஆலோசனை வழங்கும் அமைப்பினை ஏற்படுத்துதுதல்.

73-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்[தொகு]

1992 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. 74-வது அசியலமைப்பு சட்ட சீா்திருத்தம் மாவட்ட திட்டகுழு அமைக்க வழி வகைசெய்கிறது. இதன் அடிப்படையில் தமிழக அரசு 1994ல் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றியது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994[தொகு]

1.கிராம ஊராட்சியில் மூன்றடுக்கு முறை. 2.ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல். இடையில் அவை கலைக்கப்பட்டால் 6 மாத காலம் முடிவதற்குள் தோ்தல் நடத்துதல். 3.மொத்த மக்கள் தொகையில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் விகிதாசார அடிப்படையில் பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல். 4.பெண்களுக்கு சுழற்சி முறையுடன் கூடிய இட ஒதுக்கீடு. 5.ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாநில நிதி ஆணையத்தை ஏற்படுத்துதல். 6.மாவட்ட திட்ட குழுவினை ஏற்படுத்துதல். 7.கிராம சபை என்ற அமைப்பினை ஏற்படுத்துதல்.

கிராம சபை நடத்துவது தொடா்பான விதிகள்[தொகு]

1998 மற்றும் 2006 ஆம் ஆண்டு கிராம சபை விதி திருத்தங்களின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 4 முறை அதாவது ஜனவாி 26,மே 1,ஆகஸ்டு 15,மற்றும் அக்டோபா; 2 ஆகிய நாட்களில் கிராம சபை நடத்துவது உறுதிபடுத்தப்பட்டது.

கிராம ஊராட்சி[தொகு]

31 மாவட்டங்களில் 79,394 குக்கிராமங்கள் உள்ளடக்கிய 12,524 கிராம உள்ளாட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சி என்பது அதற்கென தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்ளைக் கொண்டு ஆய்வாளா் குறிப்பிட்ட தேதியிலிருந்து அமைக்கப்படும். உாிய காரணங்களால் கலைக்கப்பட்டால் இன்றி 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.

மேற்கோள்கள் Benoy Banerjee; Irfaan Khan; Rajeev Kumar et al. (2006). "Chapter Eight: Local Governments". India Constitution at Work: Textbook in Political Science for Class XI. National Council of Educational Research and Training. ISBN 81-7450-550-4. Retrieved 30 January 2016.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம_பஞ்சாயத்து&oldid=3402785" இருந்து மீள்விக்கப்பட்டது