கிராமப்புற வீட்டுக் குடிநீர் வழங்கும் திட்டம்
கிராமப்புற வீட்டுக்குடிநீர் வழங்கும் திட்டம் அல்லது ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், இந்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் சாம்பல் நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் மறுசுழற்சி செய்தல் மற்றும் மறுபயன்பாடு போன்ற கட்டாயக் கூறுகளாக தொடர்ந்து நீர் வழங்குவதற்கான ஆதார நிலைத்தன்மை நடவடிக்கைகளை இந்த திட்டம் செயல்படுத்தும்.[1]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2019 ஆகத்து 15 அன்று குடியரசு தின விழா உரையின்பொழுது, 2024க்குள் இந்தியா முழுவதுமுள்ள கிராம்ப்புற வீடுகளுக்கு 3.60இலட்சம் கோடி வரவுசெலவு திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கும் குறிக்கோள் குறித்து உரையாற்றினார். இதில் மத்திய அரசின் பங்கு 2.08இலட்சம் கோடி ஆகும்.[2] இது மத்திய அரசு-யூனியன்பிரதேசம் இடையே 100:0 விகிதாச்சாரத்திலும், மத்திய அரசு -வடகிழக்கு மாநிலங்கள்/இமயமலை மாநில அரசுகள் இடையே 90:10% விகிதாச்சாரத்திலும், மத்திய அரசு - மற்ற மாநில அரசுக்கிடையே 50:50% விகிதாச்சாரத்திலும் செலவினை பகிர்ந்துகொள்ளவும் நிர்ணயிக்கப்பட்டது.[3]
வரலாறு
[தொகு]1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "துரிதப்படுத்தப்பட்ட கிராமப்புற குடிநீர் வழங்கும் திட்டத்தின்" கீழ் கிராமப்புற நீர் விநியோகத்திற்காக மத்திய அரசின் உதவி மாநிலங்களுக்கு தொடங்கியது.[4]
2009ம் ஆண்டு இந்த திட்டம் "தேசிய கிராமப்புற குடிநீர்"(NRDWP) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இது மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பங்கேற்கும் திட்டமாக மாற்றப்பட்டது. NRDWP இன் நோக்கங்களில் ஒன்று "அனைத்து வீடுகளும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை முடிந்தவரை அணுகவும், ஐக்கிய நாடு அமைப்புகளுடன் இணைந்து 2030 ஆம் ஆண்டளவில் இலக்கை அடைய முன்மொழியப்பட்டது.[5]
ஆனால் இப்போது, ஜல் ஜீவன் மிஷன் (ஜேஜேஎம்) மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. DDWS இல் உள்ள தகவலின்படி, 31.3.2019 நிலவரப்படி, கிராமப்புற குடும்பங்களில் 18.33% மட்டுமே, அதாவது, நாட்டில் மொத்தமுள்ள 17.87 கோடி கிராமப்புற குடும்பங்களில் 3.27 கோடி குடும்பங்கள் மட்டுமே குழாய் நீர் இணைப்பு பெற்றுள்ளன.
புள்ளிவிவரம்
[தொகு]மாநிலம் | மொத்தவீடுகள் | 2022 ஆகத்து 11 அன்று குடிநீர் இணைப்பு பெற்றவீடுகள் | 2019 ஆகத்து 15% | 2022 ஆகத்து 11 அன்று % | 100% இலக்கு அடைய நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு |
---|---|---|---|---|---|
கோவா | 2,63,013 | 2,63,013 | 75.697 | 100.00 | 2021 |
தெலுங்கானா | 53,86,962 | 53,86,962 | 29.113 | 100.00 | 2021 |
அ&நி. தீவுகள் | 62,037 | 62,037 | 46.016 | 100.00 | 2024 |
புதுச்சேரி | 1,14,908 | 1,14,908 | 100.00 | 2021 | |
டாமன் டையூ | 85,156 | 85,156 | 100.00 | ||
அரியானா | 30,96,792 | 30,96,792 | 57.038 | 100.00 | 2023 |
பஞ்சாப் | 34,40,065 | 34,37,781 | 48.794 | 99.93 | 2022 |
குசராத் | 91,77,459 | 88,93,308 | 71.003 | 96.90 | 2023 |
பீகார் | 1,66,96,426 | 1,59,41,495 | 1.895 | 95.48 | 2021 |
இமாச்சல் பிரதேசம் | 17,27,518 | 16,38,361 | 44.151 | 94.84 | 2023 |
மணிப்பூர் | 4,51,566 | 3,28,215 | 5.740 | 72.68 | 2022 |
மகாராட்டிரம் | 1,45,69,898 | 1,02,74,001 | 33.245 | 70.52 | 2024 |
சிக்கிம் | 1,31,880 | 90,722 | 53.340 | 68.79 | 2022 |
அருணாச்சல் பிரதேசம் | 2,20,323 | 1,48,509 | 10.347 | 67.41 | 2023 |
மிசோரம் | 1,34,028 | 87,634 | 6.865 | 65.38 | 2023 |
உத்திரகாண்ட் | 14,94,418 | 9,66,347 | 8.721 | 64.66 | 2022 |
ஆந்திரபிரதேசம் | 95,69,202 | 58,43,813 | 32.127 | 61.07 | 2024 |
சம்முகாசுமீர் | 18,35,190 | 10,62,682 | 31.357 | 57.91 | 2023 |
கருநாடகம் | 1,01,18,270 | 54,20,296 | 24.226 | 53.57 | 2023 |
திரிபுரா | 7,41,945 | 3,92,655 | 3.302 | 52.92 | 2023 |
தமிழ்நாடு | 1,24,82,920 | 65,21,456 | 17.432 | 52.24 | 2023 |
லடாக் | 42,757 | 21,882 | 3.307 | 51.18 | 2022 |
ஒடிசா | 88,57,396 | 44,62,044 | 3.510 | 50.38 | 2024 |
நாகலாந்து | 3,77,286 | 1,76,944 | 3.679 | 46.90 | 2024 |
மத்தியபிரதேசம் | 1,20,08,025 | 51,67,767 | 11.269 | 43.04 | 2024 |
கேரளம் | 70,68,652 | 29,96,743 | 23.542 | 42.39 | 2023 |
மேகலயா | 6,30,258 | 2,47,298 | 0.722 | 39.24 | 2023 |
அசாம் | 65,49,090 | 24,51,232 | 1.700 | 37.43 | 2024 |
மேற்கு வங்காளம் | 1,60,01,698 | 46,28,725 | 1.341 | 28.93 | 2024 |
சத்தீசுகர் | 50,06,062 | 13,29,757 | 6.387 | 26.56 | 2024 |
இராச்சுத்தான் | 1,05,68,805 | 27,85,086 | 11.109 | 26.35 | |
ஜார்கண்ட் | 61,21,549 | 13,54,486 | 5.639 | 22.13 | 2024 |
உத்திரப்பிரதேசம் | 2,64,27,705 | 41,34,675 | 1.953 | 15.65 | 2022 |
மொத்தம் | 19,14,59,259 | 9,98,12,782 | 16.90 | 52.13 | 2024 |
03 செப் 2023 அன்றைய நிலவரப்படி[6]:
மாநிலம் | மொத்தவீடுகள் | 2023 செப் 03 அன்று குடிநீர் இணைப்பு பெற்றவீடுகள் | 2019 ஆகத்து 15% | 2023 செப் 03 அன்று % | 100% இலக்கு அடைய நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு |
---|---|---|---|---|---|
கோவா | 2,63,013 | 2,63,013 | 75.697 | 100.00 | 2021 |
தெலுங்கானா | 53,86,962 | 53,86,962 | 29.113 | 100.00 | 2021 |
அ&நி. தீவுகள் | 62,037 | 62,037 | 46.016 | 100.00 | 2024 |
புதுச்சேரி | 1,14,969 | 1,14,969 | 100.00 | 2021 | |
டாமன் டையூ | 85,156 | 85,156 | 100.00 | ||
அரியானா | 30,41,314 | 30,41,314 | 57.038 | 100.00 | 2023 |
குசராத் | 91,18,449 | 91,18,449 | 71.003 | 100.00 | 2023 |
பஞ்சாப் | 34,25,723 | 34,25,723 | 48.794 | 100.00 | 2022 |
இமாச்சல் பிரதேசம் | 17,08,727 | 16,08,727 | 44.151 | 100.00 | 2023 |
பீகார் | 1,66,30,175 | 1,60,30,353 | 1.895 | 96.39 | 2021 |
மிசோரம் | 1,33,060 | 1,22,516 | 6.865 | 92.088 | 2023 |
அருணாச்சல் பிரதேசம் | 2,30,138 | 2,04,306 | 10.347 | 88.78 | 2023 |
சிக்கிம் | 1,31,880 | 1,14,837 | 53.340 | 87.08 | 2022 |
லடாக் | 42,482 | 35,353 | 3.307 | 83.22 | 2022 |
உத்திரகாண்ட் | 14,92,407 | 12,08,491 | 8.721 | 80.98 | 2022 |
மகாராட்டிரம் | 1,46,73,136 | 1,16,11,238 | 33.245 | 79.13 | 2024 |
நாகலாந்து | 3,69,204 | 2,86,621 | 3.679 | 77.63 | 2024 |
மணிப்பூர் | 4,51,566 | 3,47,368 | 5.740 | 76.93 | 2022 |
தமிழ்நாடு | 1,25,49,351 | 91,63,609 | 17.432 | 73.02 | 2023 |
ஆந்திரபிரதேசம் | 95,54,841 | 67,14,878 | 32.127 | 70.28 | 2024 |
சம்முகாசுமீர் | 18,67,940 | 12,90,469 | 31.357 | 69.09 | 2023 |
கருநாடகம் | 1,01,16,802 | 69,87,335 | 24.226 | 69.07 | 2023 |
திரிபுரா | 7,44,514 | 5,07,200 | 3.302 | 68.12 | 2023 |
ஒடிசா | 88,62,636 | 56,71,022 | 3.510 | 63.99 | 2024 |
உத்திரப்பிரதேசம் | 2,62,60,006 | 1,56,40,605 | 1.953 | 59.56 | 2022 |
சத்தீசுகர் | 49,92,762 | 29,17,656 | 6.387 | 58.44 | 2024 |
மத்தியபிரதேசம் | 1,12,33,044 | 64,83,009 | 11.269 | 57.71 | 2024 |
மேகலயா | 6,51,566 | 3,71,886 | 0.722 | 57.08 | 2023 |
அசாம் | 68,53,225 | 37,67,950 | 1.700 | 54.98 | 2024 |
கேரளம் | 70,81,714 | 35,75,426 | 23.542 | 50.49 | 2023 |
இராச்சுத்தான் | 1,06,65,441 | 46,15,786 | 11.109 | 43.28 | |
ஜார்கண்ட் | 61,44,104 | 25,27,969 | 5.639 | 41.14 | 2024 |
மேற்கு வங்காளம் | 1,73,49,036 | 65,18,630 | 1.341 | 37.57 | 2024 |
இலட்சத்தீவுகள் | 13370 | 1382 | 10.34 | ||
மொத்தம் | 19,23,12,219 | 12,99,33,502 | 16.90 | 67.56 | 2024 |
சான்றுகள்
[தொகு]- ↑ https://jaljeevanmission.gov.in/
- ↑ https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807827
- ↑ https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807827
- ↑ https://jalshakti-ddws.gov.in/sites/default/files/JJM_note.pdf
- ↑ https://www.thehindubusinessline.com/data-stories/data-focus/jal-jeevan-mission-less-than-half-of-rural-households-have-access-to-piped-water-supply/article65186436.ece
- ↑ https://kurinjinet.blogspot.com/2023/09/3-2023_3.html