கிராப்டோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராப்டோனைட்டு
Graftonite
இரும்பு மாங்கனீசு கால்சியம் பாசுப்பேட்டு வகை கிராப்டோனைட்டு கனிமம், பெலர்மோ சுரங்கம் வடக்கு குரோட்டன், நியு ஆம்சையர்
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடு(Fe2+,Mn,Ca)3(PO4)2
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு

கிராப்டோனைட்டு (Graftonite) என்பது (Fe2+,Mn,Ca)3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமத்தை இரும்பு(II),மாங்கனீசு, கால்சியம் பாசுப்பேட்டு கனிமம் என்று வகைப்படுத்துகிறார்கள். மடிப்புகளாகவும் மணிகளாகவும் பழுப்பு, செம்பழுப்பு, இளஞ்சிவப்பு நிறங்களில் ஒற்றைச் சாய்வு கொண்ட முப்பட்டக அமைப்பில் இக்கனிமம் தோன்றுகிறது. கண்ணாடி போல மிளிர்வும், 5 என்ற மோவின் கடினத்தன்மை எண் அளவும், 3.67 முதல் 3.7 என்ற ஒப்படர்த்தியும் கிராப்டோனைட்டின் இயற்பியல் பண்புகளாகும்.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான நியூ ஹாம்சயர்நியூ ஆம்சையர் மாநிலத்தின் கிராப்டன் மாகாணத்தில் அமைந்திருக்கும் கிராப்டன் நகர மெல்வின் மலை இக்கனிமத்தின் அமைவிடமாக கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராப்டோனைட்டு&oldid=2584625" இலிருந்து மீள்விக்கப்பட்டது