உள்ளடக்கத்துக்குச் செல்

கிராபி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராபி மாகாணம்
Krabi Province
กระบี่
இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக
போடா தீவு கடற்கரை, ஆ நாங், பி பி தீவுகள், மாயா பே கடற்கரை, ஆ லுக் சதுப்புநிலக் காடுகள், கிராபி பன்னாட்டு வானூர்தி நிலையம்.

கொடி

சின்னம்
குறிக்கோளுரை:
கிராபி. வாழ்வதற்கு ஒரு நல்ல இடம். அன்பான மக்கள்.
กระบี่ เมืองน่าอยู่ ผู้คนน่ารัก
      கிராபி மாகாணம்       தாய்லாந்து
      கிராபி மாகாணம்       தாய்லாந்து
ஆள்கூறுகள்: 8°03′28″N 98°55′01″E / 8.05778°N 98.91694°E / 8.05778; 98.91694
நாடு தாய்லாந்து
மாகாணம்கிராபி மாகாணம்
நிலப்பகுதிமத்திய தாய்லாந்து
தலைநகரம்கிராபி
உருவாக்கம்1916
பரப்பளவு
 • மொத்தம்5,323 km2 (2,055 sq mi)
 • பரப்பளவு தரவரிசை42-ஆவது
ஏற்றம்
50 m (160 ft)
மக்கள்தொகை
 (2024)[2]
 • மொத்தம்▼4,83,855
 • தரவரிசை57-ஆவது
 • அடர்த்தி91/km2 (240/sq mi)
  அடர்த்தி தரவரிசை50-ஆவது
மனிதச் சாதனை குறியீடு[3]
 • HAI (2022)0.6160 
69-ஆவது
மொத்த உள்நாட்டு உற்பத்தி [5]
 • மொத்தம்฿90 பில்லியன்
(US$2.8 பில்லியன்) (2019)
நேர வலயம்தாய்லாந்து நேரம் +7
அஞ்சல் குறியீடு
81xxx
தொலைபேசி075
ஐஎசுஓ 3166 குறியீடுTH-81
வாகனப் பதிவுขอนแก่น
இணையதளம்krabi.go.th

கிராபி மாகாணம் (ஆங்கிலம்: Krabi Province; தாய்: กระบี่) என்பது தாய்லாந்தின் 76 மாகாணங்களில் (சாங்வாட் - Changwat) ஒன்றாகும். தாய்லாந்தின் தெற்குப் பகுதியில், அந்தமான் கடற்கரையில்[6] அமைந்துள்ளது. பாங் நிகா விரிகுடாவிற்கு (Phang Nga Bay) மேற்கே அமைந்துள்ள இந்த மாகாணத்தின் தலைநகரம் கிராபி நகரம் ஆகும்.

தாய்லாந்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த மாகாணம்; சுற்றுலாத் துறை வருவாயில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன், ஆண்டிற்கு சுமார் அறுபது இலட்சம் பார்வையாளர்களை ஈர்க்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் இங்கு வருகை தருகின்றனர். கோ இலந்தா (Ko Lanta) மற்றும் கோ பி பி (Ko Phi Phi) உள்ளிட்ட இதன் கடற்கரைகளும் தீவுகளும் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்களையும் பாறை உறைவிடப் படிவுகளையும் கொண்டுள்ளன.

கிராபி மாகாணத்தின் அண்டை மாகாணங்கள்:

புவியியல் அமைப்பு

[தொகு]

கிராபி மாகாணம், 'மொகோட்டேசு' என்று அழைக்கப்படும் தனித்துவமான சுண்ணக்கல் அமைப்புகளால் வகைப்படுத்தப் படுகிறது. இவை உள்நாட்டிலும் கடற்கரை பகுதிகளிலும் பரவிக் காணப்படுகின்றன. இந்த புவியியல் அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள பாறை ஏறுபவர்களை ஈர்க்கின்றன. குறிப்பாக பிரா நாங் தீபகற்பத்தில் (Phra Nang Peninsula) உள்ள டன் சாய் கடற்கரை மற்றும் ரெய்லி கடற்கரைக்கு அவர்களை வரவழைக்கின்றன. கிராபியின் 154 தீவுகளில், 'தி பீச்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளமாக கோ பி பி லே தீவு அங்கீகரிக்கப் பட்டது.

அதன் மூலம் கோ பி பி லே தீவு (Ko Phi Phi Le) முக்கியத்துவம் பெறுகிறது. மற்ற முக்கிய தீவுகளில் பி பி தீவுகளின் ஒரு பகுதியான கோ பி பி டான் தீவு; மற்றும் தெற்கே அமைந்துள்ள பெரிய தீவான கோ லந்தா ஆகியவை அடங்கும். கிராபியின் கடலோரப் பகுதி 2004 திசம்பர் 26 சுனாமியால் பெரும் சேதத்தை சந்தித்தது.

பாறை ஓவியங்கள்

[தொகு]

கிராபியின் சுண்ணக்கல் அமைப்புகளின் மூலமாக பல இயற்கைக் குகைகள் உருவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தொங்குபாறைகள் மற்றும் வளர் பாறைகள் போன்ற குகைப்படிக அமைப்புகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக, ஆவோ லூக் மாவட்டத்தில் உள்ள தாம் சாவ் லே மற்றும் தாம் பி உவா டோ குகைகளில் மனிதர்கள், விலங்குகள் மற்றும் வடிவியல் வடிவங்களை சித்தரிக்கும் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் உள்ளன.

1986-ஆம் ஆண்டில், லாங் ரோங் ரீன் குகையில் கல் கருவிகள், மண்பாண்டங்கள் மற்றும் எலும்புகள் உட்பட 40,000 ஆண்டுகள் பழைமையான மனித கலைப்பொருட்களை கண்டு எடுக்கப்பட்டன இது தென்கிழக்கு ஆசியாவில் தொடக்ககால மனிதக் குடியேற்றங்களில் ஒன்றாகக் அறியப்படுகிறது. மேலும் இந்தக் குகைகள், பறவைக் கூடு கூழ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உண்ணக்கூடிய உழவாரன் பறவைக் கூடுகளுக்கு (Edible bird's nest) முதன்மைப் புகலிடமாக உள்ளன.[7]

வரலாறு

[தொகு]

இந்த மாகாணம் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. லாங் ரோங்ரியன் பாறை (Lang Rongrien) தற்போதைய காலத்திற்கு 37,000 முதல் 27,000 ஆண்டுகளுக்கு முந்தைய படிவுகளைக் கொண்டுள்ளது.[8]:267 தாய்லாந்தில் அறியப்பட்ட 155-க்கும் மேற்பட்ட பாறை ஓவியத் தலங்களில், கிராபி மற்றும் அதன் அண்டை பகுதியான பாங் நிகாவில் 28 பாறை ஓவியங்கள் சுமார் 5,000 முதல் 3,000 ஆண்டுகளுக்கு[8]:271 முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என அறியப்பசுகின்றன.

குவான் லுக் பாட்டில் (Khuan Luk Pat) இருந்து[9]:251 கண்டெடுக்கப்பட்ட ஒரு வெண்கல முத்திரையில் இரு பாய்க்கப்பல்கள் செதுக்கப்பட்டு உள்ளன. இவை பொது ஆண்டு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

வேளாண்மை

[தொகு]
கிராபி மாகாணத்தில் கோ நிகாய் கடற்கரை

கிராபியின் வேளாண்மை முக்கியமாக ரப்பர் மற்றும் செம்பனை எண்ணெய் உற்பத்தியை மையமாகக் கொண்டுள்ளது. செம்பனை எண்ணெய் தோட்டங்கள் மட்டுமே சுமார் 1,568 சதுர கி.மீ. (605 சதுர மைல்)[10] பரப்பளவைக் கொண்டுள்ளன. இது மாகாணத்தின் வேளாண்மை நிலத்தில் 52 விழுக்காடு ஆகும். செம்பனை எண்ணெய் மற்றும் ரப்பர் தோட்டங்கள் இணைந்து கிராபியின் சாகுபடி நிலத்தில் 95 விழுக்காட்டைப் பிடித்துள்ளன.

இதில் சிறு குறு வேளாண் நிலங்களும்[11] பெரிய அளவிலான தொழில்முறை தோட்டங்களும் கலந்துள்ளன. கிராபியின் மொத்த காடுகளின் பரப்பளவு சுமார் 915 சதுர கி.மீ. (353 சதுர மைல்) ஆகும். இது மாகாணத்தின் மொத்த பரப்பளவில் 17.2 விழுக்காட்டைக்[12] குறிக்கிறது.

மாகாண நிருவாகம்

[தொகு]
கிராபி மாகாணத்தின் 8 மாவட்டங்கள்

கிராபி மாகாணம் 8 மாவட்டங்களாக (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் மேலும் 53 துணை மாவட்டங்கள் (தம்போன்) 374 கிராமங்கள் (மூபான்) என பிரிக்கப்பட்டுள்ளது.

  1. முயெங் கிராபி
  2. காவோ பானோம்
  3. கோ இலந்தா
  4. குளோங் தோம்
  5. ஆவோ லுக்
  6. பிளாய் பிரயா
  7. இலாம் தாப்
  8. நுவா குளோங்

உள்ளூர் அரசாங்கம்

[தொகு]

26 நவம்பர் 2019 அன்றைய நிலவரப்படி[13] கிராபி மாகாணத்தில் 1 மாகாண நிருவாக அமைப்பு (Provincial Administration Organisation - PAO); மற்றும் 13 நகராட்சி (Municipal) பகுதிகள் உள்ளன.

கிராபி மாநகரம் மாநகர தகுதியை (City Status - Thesaban Nakhon) கொண்டுள்ளது. மேலும் 12 துணைமாவட்ட நகராட்சிகளும் (Thesaban Tambon) உள்ளன. நகராட்சி அல்லாத பிற பகுதிகள் 48 துணைமாவட்ட நிர்வாக அமைப்புகளால் (Subdistrict Administrative Organisations - SAO) நிருவகிக்கப் படுகின்றன.

மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022

[தொகு]
உடல்நலம் கல்வி வேலைவாய்ப்பு வருமானம்
29 31 65 60
வீட்டுவசதி குடும்பம் போக்குவரத்து பங்கேற்பு
40 76 26 66
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2022) குறியீட்டில் 0.6160 என்ற மதிப்புடன் சற்று "தாழ்ந்த" நிலையில் உள்ள கிராபி மாகாணம், தாய்லாந்து நாட்டின் தரவரிசையில் 60-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]

நிலைவகைப்பாடு
  1 - 13உயர்வு
14 - 29சற்று உயர்வு
30 - 45சராசரி
46 - 61சற்று குறைவு
62 - 77குறைவு

தேசியப் பூங்காக்கள்

[தொகு]

தாய்லாந்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மண்டலம் 5 (நக்கோன் சி தாமரத் மாகாணம்) பகுதியின்கீழ் உள்ள நான்கு தேசிய பூங்காக்கள்; மற்றும் பிற 16 தேசியப் பூங்காக்கள் இணைந்து இப்பகுதியை உருவாக்குகின்றன.

ஆட் நொப்பாரத் தாரா-மு கோ பி பி தேசியப் பூங்கா (Hat Noppharat Thara–Mu Ko Phi Phi National Park) என்பது ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகும். 1983 அக்டோபர் 6 அன்று நிறுவப்பட்ட இந்தப் பூங்கா, பவளப் பாறைகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) வகை II பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது 388 சதுர கி.மீ. (150 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது; அத்துடன். முயெங் கிராபி மாவட்டத்தை உள்ளடக்கியது. 2024-ஆம் ஆண்டில் இங்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 19,10,047[14] ஆகும்.

ஆட் நொப்பாரத் தாரா-மு கோ பி பி தேசியப் பூங்கா
மு கோ இலந்தா தேசிய பூங்கா

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
  2. ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025. , year 2024, provincial level, Excel File, >no.81
  3. 1 2 "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024. , page 18{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. ↑ <ref name='HAI 2565'>"ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 2 March 2024. , page 14{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
  6. ↑ "Andaman Sea". Google Maps. Retrieved 2018-12-15.
  7. ↑ กลุ่ม "เล็ก สตูล" คว้ารังนกกระบี่. Thairath. 2015-10-16.
  8. 1 2 Rotchanarat, Sorathach (2019). "The Past and Present of Sea People: A Link between Prehistoric Pictographs and Ritual Performance of the Chao Le". In Amara Srisuchat; Wilfried Giessler (eds.). Ancient Maritime Cross-cultural Exchanges: Archaeological Research in Thailand (PDF) (in ஆங்கிலம்). Bangkok: Fine Arts Department, Ministry of Culture. pp. 264–285. ISBN 978-616-283-434-9. Archived (PDF) from the original on 2 September 2026. Retrieved 3 September 2026.
  9. ↑ Ploymukda, Sira (2019). "Shipwreck of the Ancient Trans-oceanic Trades from the Andaman Sea to the Gulf of Thailand". In Amara Srisuchat; Wilfried Giessler (eds.). Ancient Maritime Cross-cultural Exchanges: Archaeological Research in Thailand (PDF) (in ஆங்கிலம்). Bangkok: Fine Arts Department, Ministry of Culture. pp. 248–263. ISBN 978-616-283-434-9. Archived (PDF) from the original on 2 September 2026. Retrieved 3 September 2026.
  10. ↑ Atthakor, Ploenpote (20 August 2016). "Govt needs to get fired up over renewables". Bangkok Post. http://www.bangkokpost.com/opinion/opinion/1066584/govt-needs-to-get-fired-up-over-renewables.
  11. ↑ World Wildlife Fund Greater Mekong Program (WWF-GMP); South East Asian-Global Change System for Analysis, Research and Training organisation (SEA-START) (December 2008). Climate Change Impacts in Krabi province, Thailand. A study of environmental, social, and economic challenges (PDF). Retrieved 4 October 2016.
  12. ↑ "ตารางที่ 2 พี้นที่ป่าไม้ แยกรายจังหวัด พ.ศ.2562" [Table 2 Forest area Separate province year 2019]. Royal Forest Department. 2019. Retrieved 6 April 2021. , information, Forest statistics Year 2019
  13. ↑ "Number of local government organizations by province". dla.go.th. Department of Local Administration (DLA). 26 November 2019. Retrieved 10 December 2019. , 1 Krabi, 1 PAO, 1 Town mun., 12 Subdistrict mun., 48 SAO.
  14. ↑ "สถิตินักท่องเที่ยวที่เข้าไปอุทยนห่งชาติ ปีงบประมาณ พ.ศ. 2567" [Statistics of tourists visiting national parks in fiscal year 2024]. Department National Parks, Wildlife and Plant Conservation. Retrieved 6 September 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிமூலத்தில் Krabi Province கிராபி மாகாணம் பற்றிய ஆக்கங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராபி_மாகாணம்&oldid=4661945" இலிருந்து மீள்விக்கப்பட்டது