கிரான்ட் பூங்கா (சிகாகோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரான்ட் பூங்கா (Grant park, முன்னதாக லேக் பார்க்) சிகாகோ நகரில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா. இதன பரப்பளவு 319 ஏக்கர்கள் அல்லது 1.29 சதுர கிமீ. சிகாகோவின் நடுவில் இருக்கும் இப்பூங்காவில் மில்லெனியம் பூங்கா, பக்கிங்ஹாம் நீர்வீழ்ச்சி, சிகாகோவின் கலை நிறுவனம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. அமெரிக்க குடியரசுத் தலைவரும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தளபதியுமான யுலீசசு எசு. கிரான்ட்டின் நினைவாகல் இப்பூங்கா பெயரிடப்பட்டது. இதன் வடக்கில் ரான்டொல்ப் தேருவும் தெற்கில் ரூஸ்வேல்ட் சாலையும் மேற்கில் மிச்சிகன் அவென்யூ மற்றும் கிழக்கில் மிச்சிகன் ஏரியும் உள்ளன. இப்பூங்கா சிகாகோவின் முற்றம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது

வரலாறு[தொகு]

சிகாகோ நகர் உருவாக்கத் திட்டப்பணிகள் மிச்சிகன் அவென்யு பகுதிகளை பிரிக்காமல் காலியாக விட்டன. அரசு மிச்சிகன் அவென்யு பகுதி மக்களுக்காக அந்நிலங்கள் காலியாக வைக்கப்படும் என்று உறுதியளித்தது. 1890இல் டியர்போர்ன் கோட்டை சிகாகோவுடன் இணைக்கப்பட்டபோது இந்த நிலங்கள் "பொதுச்சொத்து. என்றென்றும் கட்டடங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்."[1] என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 29, 1844 ஆம் நாள் சிகாகோ நகராட்சி இப்பகுதியை பூங்காவிற்கு என்று ஒதுக்கி இதற்கு லேக் பார்க் என்று பேரிட்டது.

கிரான்ட் பார்க், சிகாகோ அருங்காட்சியகத்தில் இருந்து மன்ரோ துறைமுகம் மற்றும் சிகாகோ ஸ்கைலைன் 2004

நிகழ்வுகள்[தொகு]

2007இல் சிகாகோ பாட்டுக்கச்சேரி
  • 1911இல் பன்னாட்டு வான்பயணவியல் சந்திப்பு இங்கே நடந்தது.
  • 1968இல் சிகாகோ காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இங்கே சண்டை நடந்தது.
  • 1979இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இங்கே தொழுகை நடத்தினார்.
  • 2008இல் அமெரிக்க குடியரசுத் தலைவர்-தெரிவு பராக் ஒபாமா தனது தேர்தல் வெற்றி பற்றிய பேச்சை இங்கு ஆற்றினார்
  • வருடம் முழுவதும் இப்பூங்கா பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
  • “டேஸ்ட் ஓப் சிகாகோ” ஒரு பெரிய சாப்பாட்டு திருவிழா மற்றும் பாட்டுக்கச்சேரியாகும். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்.[2]

அம்சங்கள்[தொகு]

பக்கிங்ஹாம் நீர்விழ்ச்சி கிரான்ட் பார்க்கின் நடுவில் அமைந்துள்ளது
சிகாகோவின் அருங்காட்சியகம் ‘’’கிரான்ட் பார்க்கின்’’’ தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது]
பெட்ரில்லோ மியூசிக் ஷெல் பல பாட்டுக்கச்சேரிகளை நடத்துகிறது.
கிரான்ட் பார்க்கில் பருவ நடுதல்
Beaux Arts கார்டன் மிச்சிகன் அவென்யூவில்
மியூசிக் கார்டன்
காங்கிரஸ் பார்க்வேயில் லின்கனின் சிலை
வடகிழக்கு கிரான்ட் பார்க்கில் கார்டன்

பக்கிங்ஹம் நீர்விழ்ச்சி[தொகு]

கிரான்ட் பார்க்கின் நடுவில் இருப்பது உலகின் பெரிய நீர்விழ்ச்சிகளில் ஒன்றான பக்கிங்ஹாம் நீர்விழ்ச்சியாகும்.[3] ரோகோகோ கல்யாண கேக் பாணியில் கட்டப்பட்ட இந்த நீர்விழ்ச்சி 1927 ஆம் ஆண்டு கேடி பக்கிங்ஹாமின் கேடி ஸ்டர்ஜெஸ் என்பவர் சிகாகோ நகரத்திற்கு பரிசாக தந்தார். இந்நீர்விழ்ச்சி ஏப்ரில் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 20 நிமிட இடைவெளியில் தண்ணீரை வெளியேற்றுகிறது. அம்மாதங்களில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை மற்றுமே இயங்கும்.

மில்லெனியம் பூங்கா மற்றும் ரிச்சர்ட் ஜ. டெலி பூங்கா கிரான்ட் பூங்காவின் வடக்கு பக்கமாக உள்ளன

குறிப்புகள்[தொகு]

  1. Macaluso, p. 12
  2. "Chicago's Largest Festivals". ChicagoBusiness. Crain Communications, Inc. 2007. 2007-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-08-08 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Chicago Park District". 2006-03-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-28 அன்று பார்க்கப்பட்டது.