உள்ளடக்கத்துக்குச் செல்

கிராந்தி வெங்கட ரெட்டி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராந்தி வெங்கட ரெட்டி நாயுடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1885-06-18)18 சூன் 1885
நரசாபுரம் மண்டலம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1 சூன் 1967(1967-06-01) (அகவை 81)
இந்தியா
அரசியல் கட்சிநீதிக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்வெங்கட லட்சுமிi
பிள்ளைகள்4 மகன்கள் மற்றும் 1 மகள்
வாழிடம்நரசாபுரம் மண்டலம்

கிராந்தி வெங்கட ரெட்டி நாயுடு (Grandhi Venkata Reddy Naidu) (1885-1967) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் ஆந்திர மாநில சட்டசபையின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார். ஆந்திரா புதிய மாநிலமாக உருவானபோது, அதன் முதல் முதல்வராக நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் இருந்தார். கிராந்தி வெங்கட ரெட்டி நாயுடு அவரது அமைச்சரவையில் பணியாற்றினார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

கிராந்தி வெங்கட ரெட்டி நாயுடு ஒரு பிரபலமான தெலகா நாயுடு குடும்பத்தில் 1885 சூன் 18 அன்று இந்தியாவின் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தில் பிறந்தார். இவரது தந்தை நரசிம்மராவ் நரசாபுரத்தில் ஒரு நில பிரபு ஆவார். இவரது தாத்தா வெங்கட்ட ரெட்டி நாயுடு ஒரு கிராம அலுலராக இருந்தார். (சிர்கா 1840). முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமான கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவைப் பின்பற்றுபவராக இருந்தார்.

கிராந்தி சென்னை பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் சட்டப் பட்டங்களைப் பெற்றார். மேலும் 1918இல் வழக்குறைஞராக பணியில் சேர்ந்தார்.[2] பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்ந்தார். முப்பது ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய பிறகு, இவர் தனது பிறப்பிடமான நரசாபுரத்திற்கு மாறினார்.

தொழில்

[தொகு]

கிராந்தி தனது ஆரம்பகால இளமைக் காலத்தை இந்திய சுதந்திர இயக்கத்தில் கழித்தார். பின்னர் இவர் நீதிக் கட்சியில் சேர்ந்தார். கோதாவரி மாவட்டத்திலும், மேற்கு கோதாவரி மாவட்டத்திலும் நீதிக் கட்சித் தலைவராக இருந்தார். 1955இல் நரசாபுரத்திலிருந்து காங்கிரசு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மேலும்,ஆந்திர மாநிலத்தின் முதல் சட்ட அமைச்சரானார். இவர் சொத்துகள், சட்ட அதிகாரிகள், சிறைச்சாலைகள் மற்றும் துணை நீதிமன்றங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திர பல்கலைக்கழகத்தில் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினராக இருந்தார். பல்வேறு மாநில அரசாங்க செயல்களில் வரைவுக் குழு உறுப்பினராக இருந்தார். இவர் வரதட்சணை தடைச் சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார். இது 1956 செப்டம்ரில் சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் விசாலந்திராவில் துணை நீதிமன்றங்களையும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பள்ளிகளையும் நிறுவினார்.

வகித்த பதவிகள்

[தொகு]
  • 1922 - நரசாபுரம் வட்ட வாரியத்தின் தலைவர் (இவர் ஐந்து முறை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்)
  • 1936 - கோதாவரி மாவட்ட வாரியத்தின் தலைவர். மேற்கு கோதாவரி மாவட்டம் உருவான பின்னர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாரியத்தின் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.
  • 1930 - சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்
  • 1955 - ஆந்திர அரசு சட்டமன்ற உறுப்பினர்
  • 1955-1957 - சட்ட அமைச்சர், ஆந்திர அரசு

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

விசாகப்பட்டணம் மாவட்டத்தின் விஜயநகரத்தின் ராஜாவுக்கு சேவையில் இருந்த மருத்துவர் சாபா மங்கையா நாயுடுவின் மகள் கிராந்தி வெங்கட லட்சுமி என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அதாவது கேசவ ராமம் மூர்த்தி (வழக்கறிஞர்), வெங்கட நரசிம்மராவ் (வழக்கறிஞர்), வெங்கடேசுவர ராவ் (விவசாயம்), சூர்ய பிரகாச ராவ் (அரசு சேவை). இவரது பேரன் நீதிபதி கிராந்தி பவானி பிரசாத். இவரது மற்றொரு பேரன் கிருட்டிணா கிராந்தி மருத்துவர் (அமெரிக்கா) மற்றும் ஐதராபாத்தி ஜூபிலி ஹில்ஸில் கிராந்தி லா சேம்பர்ஸ் என்ற சட்ட நிறுவனத்தை நிறுவினார்.

குறிப்புகள்

[தொகு]
  1. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/28789/9/09_chapter%204.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-06-18. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.
  3. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1955/StatRep_AP_1955.pdf