உள்ளடக்கத்துக்குச் செல்

கிராந்தி கவுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராந்தி கவுடு
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு11 ஆகத்து 2003 (2003-08-11) (அகவை 22)
குவாரா, மத்தியப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை ஆட்டக்காரர்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 156)11 மே 2025 எ. இலங்கை
கடைசி ஒநாப2 நவம்பர் 2025 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்26
ஒரே இ20ப (தொப்பி 88)12 சூலை 2025 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்26
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2023/24–முதல்மத்தியப் பிரதேச பெண்கள் விளையாட்டு அணி
2025–முதல்உபி வாரியர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது ப இ/20 பது (அ) இருபது20
ஆட்டங்கள் 4 1 16 12
ஓட்டங்கள் 4 0 17 8
மட்டையாட்ட சராசரி 5.66
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 4 ஆஇ 12 5 ஆஇ
வீசிய பந்துகள் 161 18 647 186
வீழ்த்தல்கள் 9 0 25 8
பந்துவீச்சு சராசரி 17.55 19.36 33.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/52 6/52 4/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 4/– 3/–
மூலம்: CricketArchive, 6 ஆகத்து 2025

கிராந்தி கவுடு (Kranti Goud-பிறப்பு ஆகத்து 11,2003) என்பவர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்ட போட்டிகளில் மத்தியப் பிரதேசத்தையும், பெண்கள் பிரீமியர் லீக்கில் உ. பி. வாரியர்சு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] 2025 மகளிர் துடுபாட்ட உலகக் கோப்பையினை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக கவுடு இருந்தார்.

உள்நாட்டு போட்டி பங்கேற்பு

[தொகு]

கவுடு மத்தியப் பிரதேச பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக உள்நாட்டு துடுப்பாட்டங்களில் விளையாடுகிறார்.[2] வங்காளத்திற்கு எதிரான மூத்த மகளிர் ஒருநாள் போட்டியில் இறுதிப் போட்டியில் இவர் 4 பேரை ஆட்டத்தில் வீழ்த்தினார்.[2] இவர் மத்தியப் பிரதேசத்தின் 23 வயதுக்குட்பட்ட அணிக்காகவும் விளையாடியுள்ளார்.[2]

திசம்பர் 2024இல் நடந்த மூன்றாவது பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தில், கவுடை உத்தரப் பிரதேச வாரியர்சு உரிமையாளர் ₹ 10 லட்சத்திற்கு வாங்கினார்.[3] 2023ஆம் ஆண்டில் இசிசி வோங்கிற்கு அடுத்ததாக நான்கு வீழ்த்தல்களை வீழ்த்திய இரண்டாவது இளைய துடுப்பாட்ட வீரர் ஆனார்.[4][5] இவரது முதல் பெண்கள் பிரீமியர் லீக் போட்டி வீழ்த்தலில் மெக் லேனிங் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.[6]

பன்னாட்டு போட்டி

[தொகு]

ஏப்ரல் 2025 இல், இலங்கை முத்தரப்பு தொடரில் கஷ்வீ கௌதமுக்கு பதிலாக தேசிய அணியில் கவுடு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8][9] இவர் மே 11 அன்று போட்டியினை நடத்திய இலங்கைக்கு எதிராக முத்தரப்பு தொடரின் இறுதிப் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[10] பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இ20 தொடருக்கான அணியில் இடம் பெற்றார்.[11][12][13] கவுடு, சூலை 12 அன்று இந்த தொடரில் தனது இ20 போட்டியில் அறிமுகமானார்.[14][15] செசுடர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், தொடர் 1-1 என்ற நிலையில் இருந்த நிலையில், இவர் தனது முதல் ஐந்து வீரர்களை வீழ்த்தி, இந்தியா 13 ஓட்ட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.[16][17] இவர் 6/52 புள்ளிவிவரங்களுடன் திரும்பினார். மேலும் 21 வயது மற்றும் 345 நாட்களில், பெண்கள் ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இளைய இந்திய வீரராக ஆனார். இதன் மூலம் ஜுலன் கோசுவாமி சாதனையை முறியடித்தார்.[18]

நிலையான செயல்திறன்களுக்குப் பிறகு, 2025 மகளிர் துடுப்பாட்ட உலகக் கோப்பை அணியில் கவுடு சேர்க்கப்பட்டார்.[19] அக்டோபர் 5 அன்று, கொழும்பில் பாக்கித்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில், இவர் மூன்று வீரர்களை வீழ்த்தி தனது அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இந்தப் போட்டியின ஆட்ட நாயகன் விருதினையும் இவர் பெற்றார்.[20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kranti Gaud". WPL. Retrieved 17 May 2025.
  2. 1 2 3 "How Kranti Goud's need for speed found her a place with the UP Warriorz". ESPNcricinfo. Retrieved 17 May 2024.
  3. "How Kranti Goud's need for speed found her a place with the UP Warriorz". ESPNcricinfo. Retrieved 17 May 2024.
  4. "Henry's onslaught, Harris and Goud's dream spells get Warriorz off the mark". ESPNcricinfo. Retrieved 17 May 2025.
  5. "Stats - Henry smashes joint-fastest fifty in the WPL, Harris third to take a hat-trick". ESPNcricinfo. Retrieved 17 May 2025.
  6. "WPL 2025: UP Warriorz's Kranti Goud outpaces odds to make a mark". Sportstar. Retrieved 19 May 2025.
  7. "Kranti Goud Added To India's Tri-Series Squad, Kashvee Ruled Out Injured". News18. Retrieved 17 May 2025.
  8. "Injured Kashvee Gautam ruled out; Kranti Goud gets first India call-up for ODI tri-series". Sportstar. Retrieved 17 May 2025.
  9. "Kashvee Gautam ruled out of tri series due to injury, to be replaced by Kranti Goud". India Today. Retrieved 17 May 2025.
  10. "India hand debuts to Kashvee Gautam, NS Charani after opting to bowl first in tri-series opener". India TV. Retrieved 17 May 2025.
  11. "MP's Kranti, Shuchi earn India call-up for Eng tour". The Times of India. Retrieved 17 May 2025.
  12. "Team India (Senior Women) squads for the England tour announced". BCCI. Retrieved 15 May 2025.
  13. "India unveil power-packed squads for England tour". ICC. Retrieved 15 May 2025.
  14. "5th T20I (N), Birmingham, July 12, 2025, India Women tour of England". ESPNcricinfo. Retrieved 13 July 2025.
  15. "Muzumdar: Shafali in contention for ODI World Cup 'without a doubt'". ESPNcricinfo. Retrieved 13 July 2025.
  16. "Harmanpreet ton, Goud six-for guide India to series win". Cricbuzz. Retrieved 22 July 2025.
  17. "England well beaten as India take ODI series win". BBC Sport. Retrieved 23 July 2025.
  18. Kishore, Shashank (24 July 2025). "Goud's emergence and Harmanpreet's century the big plusses for in-form India". ESPNcricinfo. Retrieved 6 October 2025.
  19. "MP pacer Kranti selected to Indian team for Women’s World Cup cricket". The Times of India. 20 August 2025. https://timesofindia.indiatimes.com/city/bhopal/mp-pacer-kranti-selected-to-indian-team-for-womens-world-cup-cricket/articleshow/123394993.cms.
  20. "Goud times roll for India's newest new-ball star". ESPNcricinfo. 5 October 2025. https://www.espncricinfo.com/story/ind-vs-pak-goud-times-roll-for-india-s-newest-new-ball-star-1505819.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராந்தி_கவுடு&oldid=4398918" இலிருந்து மீள்விக்கப்பட்டது