கிராது கோயில்கள்
கிராது கோயில்கள் | |
---|---|
![]() கிராதுவின் சிவன் கோயில் | |
இந்தியாவின் இராஸ்தான் மாநிலத்தில் பார்மேர் நகரத்தில் கிராது கோயில்களின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | இராஜஸ்தான் |
மாவட்டம்: | பார்மேர் |
அமைவு: | பார்மேர் |
ஆள்கூறுகள்: | 25°45′10″N 71°05′52″E / 25.7528°N 71.0977°E |
கோயில் தகவல்கள் |
கிராது கோயில்கள் (Kiradu temples), மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள பார்மேர் நகரத்திற்கு அருகில் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 5 கோயில்களின் தொகுப்பாகும். இக்கோயில்கள் 11-12ஆம் நூற்றாண்டுகளில் சாளுக்கியர்களின் ஆளுமைக்குட்பட்ட சோலாங்கி வம்ச சிற்றரசுகளால் நிறுவப்பட்டது. தற்போது இக்கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]இக்கோயில்கள் பார்மேர் நகரத்திற்கு மேற்கே 39 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்சல்மேர் நகரத்திற்கு தெற்கே 172 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கோயில்கள்
[தொகு]தற்போது இக்கோயில்களின் விமானங்கள் மற்றும் மண்டபங்களின் கூரைகள் சிதிலமடைந்துள்ளது. கோயில் தூண்கள் விலங்குகள் மற்றும் மனித சிற்பங்களைக் கொண்டுள்ளது. கோயில் மண்டபங்கள் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில்கள் சாளுக்கிய சோலாங்கிகளின் கட்டிட கலைநயத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.[1]
விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் மண்டபத் தூண்கள் நன்கு செதுக்கப்பட்டுள்ளது. மூன்று சிவன் கோயில்களின் கருவறைகள் சிதையாமல் உள்ளதுடன், படிக்கிணறும் கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]இந்திய வரலாற்று ஆய்வாளர் கௌரிசங்கர் ஹிராசந்த் ஓஜா[2], கிராது கோயில்களின் கிபி 1153-1178 காலத்திய கல்வெட்டுகளின்படி, கிராது கோயில்கள் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக்கருதுகிறார்.[1].
ஆப்கானிய மன்னர் கோரின் முகம்மதுவால், கிராது கோயில்கள் சிதைக்கப்பட்டதும், சாளுக்கிய சோலாங்கிப் பேரரசர் இரண்டாம் பீமன் ஆட்சி காலத்தில் (கிபி 1178ஆம் ஆண்டில்) கிராது கோயில்கள் செப்பனிட்ட செய்திகளை, கிராது கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
விஷ்ணு கோயில் மண்டபம்
-
மண்டபத் தூண்
-
தூணில் விளக்கம்
-
சோமேஸ்வரர் கோயில், 1897
-
சிவன் கோயில்களில் ஒன்று
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- Asoke Kumar Majumdar (1956). Chaulukyas of Gujarat. Bharatiya Vidya Bhavan. கணினி நூலகம் 4413150.
- Ashok Kumar Srivastava (1979). The Chahamanas of Jalor. Sahitya Sansar Prakashan. கணினி நூலகம் 12737199.
- Govind Sadashiv Ghurye (1968). Rajput Architecture. Popular Prakashan. ISBN 978-81-7154-446-2.
- John Stratton Hawley (2014). Krishna, The Butter Thief. Princeton University Press. ISBN 978-1-4008-5540-7.
- Michell, George (1990), The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu, 1990, Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140081445