கிராண்ட் ஹயாத் மும்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராண்டு ஹயாத் மும்பை
Grand Hyatt Mumbai
விடுதி சங்கிலிஹயாத்
பொதுவான தகவல்கள்
இடம்இந்தியா
முகவரிமேற்கு விரைவுவழிச்சாலை, சான்டாகுரூஸ் (கிழக்கு), மும்பை - 400055, இந்தியா
திறப்பு2004
மேலாண்மைஹயாத் ஓட்டல்ஸ் கார்ப்பரேசன்
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை6
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)லோஹன் அசோசியேட்ஸ், சிக்காகோ
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை508
தொகுப்புகளின் எண்ணிக்கை39
வலைதளம்
mumbai.grand.hyatt.com

கிராண்ட் ஹயாத் மும்பை ஓட்டல், மும்பையின் சாண்டாகுரூஸ் பகுதியில் உள்ள மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு, அருகே அமைந்துள்ள மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும்.[1] இதன் வடிவமைப்பு சிக்காகோவின் லோஹன் அசோஸியேட்ஸால் செய்யப்பட்டது. இது 10 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. கிராண்ட் ஹயாத் மும்பை ஹோட்டல் 2004ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு 547 விருந்தினர் அறைகளும், 111 சேவை அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உள்ளன.

அமைப்பு[தொகு]

இது உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 3.2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது மாவட்டத்தின் வணிக ரீதியான பகுதியில் பாந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ்க்கு அருகில் அமைந்துள்ளது.[2] இதனருகே மாவட்டத்தின் பல பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. இதன் விருந்திற்கான பகுதி மட்டும் 30,000 சதுர அடியில் அமைந்துள்ளது. 790 சதுர மீட்டர் அளவிலான சந்திப்பு, மாநாடு அளவிலான பெரிய இடம், அத்துடன் ஏழு பெரிய சந்திப்பு அறைகள், மாதிரி முற்செயல்பாட்டு அறைகள் உள்ளிட்டவையும் உள்ளன. அத்துடன் உணவுவகைகளில் பல நாடுகளின் வகைகள் பரிமாறப்படுகின்றன. அந்தந்த வகுப்பு அறைகளுக்குத் தகுந்தாற்போல் வசதிகளும், பொது வசதிகளும் அளிக்கப்படுகின்றன.[3]

விருதுகள்[தொகு]

  • வேர்ல்டு லக்சூரி ஹோட்டல் விருதுகள் – சிறந்த லக்சூரி பிஸினஸ் ஹோட்டல் இன் ஏசியா 2013
  • பிஸினஸ் டெஸ்டினேஷன் டிராவல் விருதுகள் 2013 - சிறந்த லக்சூரி ஹோட்டல் இன் இந்தியா 2013
  • டிரிப் அட்வைஸர் – செர்டிஃபிகேட் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது 2012 மற்றும் 2013
  • ஸ்மார்ட் டிராவல் ஏசியா – ஹாட் 25 கான்ஃபெரன்ஸ் ஹோட்டல் 2011
  • இந்தியன் ஹாஸ்பிடாலிட்டி எக்ஸெலன்ஸ் விருதுகள் – ஹோட்டல் ஆஃப் த இயர் 2010-2011
  • கோல்டன் ஸ்டார் விருதுகள் – ஹோட்டல் ஆஃப் த இயர் 2010-2011
  • கோல்டன் ஸ்டார் விருதுகள் – லக்சூரி பிஸினஸ் ஹோட்டல் ஆஃப் த இயர் 2010-2011
  • வேர்ல்ட் டிராவல் விருதுகள் – இந்தியாவின் முன்னணி கான்ஃபெரன்ஸ் ஹோட்டல் 2007
  • ஸ்டார் அச்சிவெர்ஸ் விருதுகள் - லக்சூரி பிஸினஸ் ஹோட்டல் ஆஃப் த இயர் 2007
  • ஸ்டார் அச்சிவெர்ஸ் விருதுகள் – சிறந்த ஜெனரல் மேனஜர் ஆஃப் த இயர் 2007
  • ஸ்டார் ஆஃப் த இன்டஸ்ட்ரி விருதுகள் – லக்சூரி பிசினஸ் ஹோட்டல் ஆஃப் த இயர் 2006

உணவு மற்றும் குளிபானங்களுக்கான விருதுகள்[தொகு]

  • டைம்ஸ் ஃபுட் கைடு விருதுகள் – சீனா ஹவுஸ் – சிறந்த சீன உணவு விடுதி பிரிவு – வடக்கு மும்பை 2013[4]
  • டைம்ஸ் ஃபுட் கைடு விருதுகள் – செலினி – சிறந்த இத்தாலி உணவு விடுதி – வடக்கு மும்பை 2013
  • டைம்ஸ் நைட்லைஃப் விருது – சீனா ஹவுஸ் லாஃக் – சிறந்த ஆட்டத்துடன் கூடிய பார் வகை – வடக்கு மும்பை – 2013
  • மவுத்ஷட்.காம் – மும்பையின் சிறந்த பிரியாணி – 2012
  • கோல்டன் ஸ்டார் விருதுகள் – 55 கிழக்கு – மோஸ்ட் அட்மியர்ட் ரெஸ்டாரென்ட் F&B அண்ட் ரீடெய்லர் ஆஃப் த இயர் 2011-2012
  • டைம்ஸ் ஃபுட் கைடு விருது – சீனா ஹவுஸ் – சிறந்த சீன உணவு விடுதி வகை – வடக்கு மும்பை 2011-2012
  • டைம்ஸ் ஃபுட் கைடு விருது – செலினி – சிறந்த இத்தாலி உணவு விடுதி வகை – வடக்கு மும்பை 2011-2012
  • டைம்ஸ் நைட்லைஃப் விருது – சீனா ஹவுஸ் லாஃக் – சிறந்த ஆட்டத்துடன் கூடிய பார் வகை – வடக்கு மும்பை 2011-2012

வசதிகள்[தொகு]

சுமார் 30 முதல் 1300 வரையிலான விருந்தினர்கள் தங்குமளவிற்கு இந்த ஹோட்டல் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு தங்குபவர்களின் பொருளாதாரக் கட்டணங்களைப் பொருத்து அறை வசதிகள் மாறுபடுகின்றன. இருப்பினும் மேற்கூறிய ஹோட்டல் வசதிகளுடன் சில முக்கிய வசதிகளும் இங்கு செய்து தரப்படுகின்றன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.[5][6] ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் இங்குள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. "Grand Hyatt Mumbai". CNTraveler.com. Archived from the original on 2014-09-01. பார்க்கப்பட்ட நாள் 2014-12-24.
  2. "Grand Hyatt Mumbai Hotel". Cleartrip.com.
  3. "Grand Hyatt Hotel". Times City.
  4. "Grand Hyatt Mumbai enters record books for longest lunch table". Event FAQS. 14 March 2012.
  5. Divrina, Dhingra (08 Jun 2011). "Culture & Entertaining Grand Art at the Grand Hyatt". Vogue India. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "Grand Hyatt Mumbai: Art gallery with pillows". CNN Travel.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராண்ட்_ஹயாத்_மும்பை&oldid=3928888" இலிருந்து மீள்விக்கப்பட்டது