கிராண்ட் சாக்கோ மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராண்ட் சாக்கோ மக்கள்
கிராண்ட் சாக்கோ பகுதி
மொத்த மக்கள்தொகை
300,000 (est. 2010)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அர்சண்டினா, பிரேசில், பொலிவியா, பராகுவே
மொழி(கள்)
பத்தியை பார்க்கவும்
சமயங்கள்
பாரம்பரிய பழங்குடி மதம், கத்தோலிக், ரோமானிய கத்தோலிக்க மறுப்பாளர்கள், நாத்திகம்

கிராண்ட் சாக்கோ மக்கள் (Gran Chaco people), தென் அமெரிக்காவின் கிரான் சாக்கோவை பிறப்பிடமாக கொண்ட ஏறத்தாழ முப்பதைந்து பழங்குடி குழுக்கள் ஆவார்கள். வட அமெரிக்காவின் மிகப்பெரிய சமவெளிகளைப் போல, அந்நிலப்பரப்பே நாடோடி வாழ்க்கை முறைக்கு இட்டுச் செல்கிறது. வரலாற்றுக்கு முந்தைய தொல்பொருள் ஆதாரம் எதுவும் இவர்களைப் பற்றி இல்லை. தொல்பொருள் புள்ளி விவரங்கள் ஏதும் இல்லாததற்கு காரணம் கற்-கருவிகளுக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறையாகவோ அல்லது நிலையான கட்டமைப்பு மற்றும் மண்ணின் தன்மை, கரிமப் பொருள் பாதுகாப்புக்கு உகந்ததாக இல்லாததாகவோ இருக்கலாம்[1][2].

புவியியல்[தொகு]

கிராண்ட் சாக்கோ மக்களின் உண்மையானகலாச்சாரப் பகுதி புவியியல் கிராண்ட் சாக்கோவிலிருந்து வேறுபட்டது ஆகும். கலாச்சாரப் பகுதியின் வடமேற்கு எல்லையானது பராபெட்டி ஆறு மற்றும் பனாடோஸ் டி இசோசோக் மந்தநிலையின் சதுப்பு நிலங்கள் ஆகும்.அதற்கு அப்பால் கலாச்சாரம் தொடர்பில்லாத சானே மற்றும் சிரிகுவானோ நிலங்கள் இருந்தன. வரலாற்று காலங்களில் கூட கலாச்சார எல்லைகள் நிலையானதாக இல்லை. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் அபா ஆறு மற்றும் மிரண்டா ஆற்றுக்கு நடுவில் இருந்த நிலப்பகுதியை மபாயா படையெடுப்பின் போது கிழக்கில் பராகுவே ஆற்றின் குறுக்கே வரை நிலப்பகுதி விரிவடைந்தது.[3]

மொழிகள்[தொகு]

கிரான் சாக்கோவின் பழங்குடி குழுக்கள் ஆறு மொழிக் குடும்பங்களுக்குள் அடங்கும்.:[4] 1. மடகோயன் மொழிகள் 2. குயகுரன் மொழிகள் 3. லுலி-விலேலா மொழிகள் 4. மாச்காய்யன் மொழிகள் 5. சமுகோயன் மொழிகள் 6. தூப்பி-குவரானி மொழிகள்

பல மொழிகள் சாக்கோ மொழியியல் பகுதியின் ஒரு பகுதியாகும். பொதுவான சாகோ பகுதி அம்சங்களில் எழுவாய்-பயனிலை-செயப்படுபொருள் சொல் வரிசை மற்றும் செயலில்-நிலை வினைச் சீரமைப்பு ஆகியவை அடங்கும்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Combes, Villar & Lowrey 2009, ப. 71
  2. Calandra, Horacio Adolfo; Salceda, Susana Alicia (2008). "Cambio y continuidad en el Gran Chaco: De las historias étnicas a la prehistoria". in Braunstein, José. Liderazgo, representatividad y control social en el Gran Chaco. Corrientes, Argentina: Universidad Nacional del Nordeste. பக். 31–38, pages 32 & 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-950-656-116-1. https://books.google.com/books?id=ISzI6iJoKGYC&pg=PA31. 
  3. Métraux 1946, ப. 197
  4. Combes, Villar & Lowrey 2009, ப. 69
  5. Lyle Campbell; Grondona, Verónica (2012). "Languages of the Chaco and Southern Cone". in Grondona, Verónica; Campbell, Lyle. The Indigenous Languages of South America. The World of Linguistics. 2. Berlin: De Gruyter Mouton. பக். 625–668. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783110255133. 

நூற்பட்டியல்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராண்ட்_சாக்கோ_மக்கள்&oldid=3861577" இலிருந்து மீள்விக்கப்பட்டது