மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிராண்ட் கன்யன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு
கிராண்ட் கன்யன் வழிப்பாயும் கொலராடோ ஆற்றின் ஓரிடத்திலிருந்து (Mohave Point) காணும் தோற்றம்.
மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு is located in Arizona
மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு
மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு
அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
Floor elevation தோராயமாக. 2,600 feet (800 m)
Long-axis length 277 miles (446 km)
Width 4-18 மைல்கள் (6.4-29 கிமீ)
Coordinates 36°06′N 112°06′W / 36.1°N 112.1°W / 36.1; -112.1ஆள்கூற்று: 36°06′N 112°06′W / 36.1°N 112.1°W / 36.1; -112.1

கிராண்ட் கன்யன் அல்லது மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு (Grand Canyon) என்பது அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளமாகும். கொலராடோ ஆற்றின் போக்கில் அமைந்துள்ள இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் இயற்கையாக அமைந்த ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த 2 பில்லியன் ஆண்டுகளில் கொலராடோ ஆறு இப்பள்ளத்தினை உருவாக்கியுள்ளது. 350 கிமீ நீளமுள்ள கிராண்ட் கன்யன் ஒரு மைல் வரை சில இடங்களில் ஆழமுள்ளது.

இதனைப் பார்க்க உலகெங்குமிலிருந்து மக்கள் வருகின்றனர். கொலராடோ ஆற்றில் படகுகளில் பயணித்துக் கொண்டும் இதனைக் கண்டு களிக்கலாம். சிலர் இங்கு நடைப்பயணம் மேற்கொள்வதையும் விரும்புகின்றனர். கிராண்ட் கன்யன் வடக்குப்பகுதியில் உள்ள நிலம் வடக்கு விளிம்பு (North Rim) என அழைக்கப்படுகிறது. தென்பகுதி தெற்கு விளிம்பு எனப்படுகிறது. இந்த விளிம்புகளிலிருந்து அடிப்பகுதிக்குச் செல்ல பாதைகள் உள்ளன. இவை முடிவடையும் அடிப்பாகம் பான்டம் ரான்ச் (Phantom Ranch) எனப்படுகின்றன. இங்கு நடைப்பயணிகள் இரவு தங்க வசதிகள் உள்ளன.