கிராட்டோனைட்டு
Appearance
கிராட்டோனைட்டு Gratonite | |
---|---|
கிராட்டோனைட்டு, முதன்மைச் சுரங்கம், செரோ டி பாசுக்கோ, பெரு, அமைவிட வகை - 1.7 x 1.6 x 1.5 செ.மீ. | |
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்பு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | Pb9As4S15 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முக்கோணம் |
கிராட்டோனைட்டு (Gratonite) என்பது Pb9As4S15. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமத்தை ஈயம்-ஆர்சனிக் சல்போவுப்பு கனிமம் என்று வகைப்படுத்துகிறார்கள். பெரு நாட்டில் உள்ள செரோ டி பாசுக்கோ நகரில் அமைந்திருக்கும் முதன்மைச் சுரங்கத்தில் 1939 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.[1] 1880 -1970 காலப்பகுதியில் வாழ்ந்த புவியியலாளர் எல்.சி.கிராட்டனை கௌரவிக்கும் வகையில் அப்புதிய கனிமத்திற்கு கிராட்டோனைட்டு எனப் பெயரிடப்பட்டது. கிராட்டன் நீண்ட காலத்திற்கு செரோ டி பாசுக்கோ சுரங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்.[2]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிராட்டோனைட்டு கனிமத்தை Gtn[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palache, C. and Fisher, D.J. (1940). "Gratonite - A new mineral from Cerro de Pasco". American Mineralogist 25: 255-265.
- ↑ Calvo Rebollar, Miguel (2003). Minerales y Minas de España. Vol. II. Sulfuros y sulfosales [Minerals and mines of Spain] (in ஸ்பானிஷ்). Vitoria, Spain: Museo de Ciencias Naturales de Alava. pp. 590–591. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-7821-543-0.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.