உள்ளடக்கத்துக்குச் செல்

கிரஹாம் ரீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரஹாம் ரீட் முன்னாள் ஆஸ்திரேலியா ஹாக்கி விளையாட்டு வீரராவார். இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக 2019 ஆம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்ட இவர் சிறப்பான செயல்பாட்டின் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். 40 ஆண்டுகளில் இந்திய அணி ஒலிம்பிக்கில் பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். [1]

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2023 ஹாக்கி உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 9வது இடமே பிடிக்க முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ஜனவரி 30, 2023ல் ராஜினாமா செய்தார். இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக அதிக காலம் நீடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. [2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரஹாம்_ரீட்&oldid=3649574" இலிருந்து மீள்விக்கப்பட்டது