கிரண் பிஸ்டா
| சுய தகவல்கள் | |||
|---|---|---|---|
| முழுப் பெயர் | கிரண் பிஸ்டா | ||
| பிறந்த நாள் | 16 ஆகத்து 2001 | ||
| பிறந்த இடம் | சத்தீசுகர்,இந்தியா | ||
| ஆடும் நிலை(கள்) | முன்கள வீரர் | ||
| கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | ஒடிசா | ||
| முதுநிலை வாழ்வழி* | |||
| ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
| –2022 | பெண்கள் மாதா ருக்மணி | ||
| 2022 | கேரளா பிளாசுடர்சு | ||
| 2023 | சேது | ||
| 2023–2024 | டைனமோ ஜாக்ரெப் | 5 | (1) |
| 2024– | மகளிர் லீக் கிளப் ஒடிசா | ||
| பன்னாட்டு வாழ்வழி | |||
| 2022– | இந்திய பெண்கள் தேசிய கால்பந்து அணி | 4 | (0) |
| *கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. | |||
கிரண் பிஸ்டா (Kiran Pisda) ஓர் இந்திய கால்பந்து வீரர் ஆவார். இவர் இந்தியாவில் உள்ள சத்தீசுகர் மநில்த்தில் 2001 ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 16 ந் தேதி பிறந்தார். கிரண் பிஸ்டா இந்திய மகளிர் லீக் கிளப் ஒடிசா மற்றும் இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணிக்காக முன்கள வீராங்கனையாக விளையாடி வருகிறார்.[1][2]சத்தீஸ்கரில் இருந்து இந்திய சீனியர் தேசிய அணிக்காக விளையாடிய முதல் வீராங்கனை இவர்தான் என்பது குறிப்பிடதக்கது ஆகும்.[3]
தொழில் ம்ற்றும் வாழ்க்கை
[தொகு]பிஸ்தா சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு பழங்குடி குடும்பத்தில் பிறந்தார். இவர் துர்க் அணிக்காக விளையாடுவதன் மூலம் தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். சத்தீஸ்கரின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையின் பயிற்சியாளர்களின் மேற்பார்வையின் கீழ் பெண்கள் கால்பந்து அகாடமியில் பிஸ்தா தனது பயிற்சியைப் பெற்றார். கிரண் பிஸ்டா பல்வேறு மாநில லீக் போட்டிகளில் ராய்ப்பூருக்காக விளையாடீருக்கிறார். மேலும் தேசிய லீக்குகளில் சத்தீஸ்கர் அணிக்காகவும் விளையாடி உள்ளார்.[4] 2022 ஆம் ஆண்டில், கிரண் பிஸ்டா புதிதாக தொடங்கப்பட்ட பெண்கள் அணியின் ஒரு பகுதியாக கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[5][6][7]
2023 ஆண்டு, நவம்பர் மாதம், 8ம் தேதி அன்று, கிரண் பிஸ்டா எம். கே. காஷ்மினாவுடன் என்பவருடன் சேர்ந்து, குரோஷிய மகளிர் லீக் கிளப்பான டினாமோ ஜாக்ரெப்பில் ஒரு வருட ஒப்பந்தத்தில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[8]
சர்வதேச போட்டிகள்
[தொகு]2022 ஆண்டு, செப்டம்பர் மாதம் மகளிர் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இந்திய அணியின் இறுதி 23 அணியில் கிரண் பிஸ்டா சேர்க்கப்பட்டார்.[4][9][10]
தொழில் புள்ளிவிவரங்கள்
[தொகு]சர்வதேசம்
[தொகு]- 26 February 2025. அன்று இருந்த தகவல்களின் படி
| சர்வதேச வரம்புகள் மற்றும் இலக்குகள் | ||
|---|---|---|
| ஆண்டு | வரம்புகள் | இலக்குகள் |
| 2022 | 4 | 0 |
| 2023 | 0 | 0 |
| 2024 | 0 | 0 |
| 2025 | 2 | 0 |
| மொத்தம் | 6 | 0 |
கௌரவங்கள் மற்றும் பட்டங்கள்
[தொகு]குரோசிய மகளிர் கால்பந்து கோப்பை 2023–24[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Behera, Partha Sarathi (2022-09-04). "Chhattisgarh's tribal girl Kiran Pisda to represent India at SAF Championship - Raipur News". The Times of India. Archived from the original on 13 October 2022. Retrieved 2022-10-13.
- ↑ "Kerala Women's League: Kerala Blasters drub SB FA 10-0". OnManorama. 2022-08-13. Archived from the original on 12 August 2022. Retrieved 2022-10-13.
- ↑ Khwaza, Afroz (2022-09-04). "Chief Minister congratulates Ms. Kiran Pisda for her selection in the Indian team – Ayan News : ayannews.in". Ayan News. Archived from the original on 13 October 2022. Retrieved 2022-10-13.
- 1 2 "State's Tribal Girl Kiran Pisda To Represent India At Saf Tourney - Raipur News". The Times of India. 2022-09-05. Archived from the original on 13 October 2022. Retrieved 2022-10-13.
- ↑ "Kiran Pisda – Kerala Blasters FC". Kerala Blasters FC. 2014-05-27. Archived from the original on 13 October 2022. Retrieved 2022-10-13.
- ↑ Menon, Anirudh (2022-09-28). "ISL giants to IWL hopefuls - Inside Kerala Blasters' many challenges to start a women's football team". ESPN. Archived from the original on 13 October 2022. Retrieved 2022-10-13.
- ↑ "राष्ट्रीय फुटबॉल टीम में छत्तीसगढ़ की बेटी किरण पिस्दा का चयन, पाकिस्तान के खिलाफ खेलेगी पहला मुकाबला.. खेल मंत्री उमेश पटेल ने दी बधाई व शुभकामनाएं » Kelo Pravah". Kelo Pravah. 2022-09-04. Archived from the original on 13 October 2022. Retrieved 2022-10-13.
- ↑ Mathew, Alen Philip (8 November 2023). "Kashmina, Kiran Pisda sign for Croatian club ŽNK Dinamo Zagreb". khelnow.com. Archived from the original on 8 November 2023. Retrieved 8 November 2023.
- ↑ Biswas, Joseph (2022-09-04). "India announce squad for SAFF Women's Championship 2022". Khel Now. Archived from the original on 17 October 2022. Retrieved 2022-10-12.
- ↑ देवांगन, डिलेश्वर (2022-09-05). "सक्सेस स्टोरीः भारतीय फुटबॉल टीम में बालोद की किरण का चयन, पाकिस्तान और बांग्लादेश से होगा मुकाबला". News18 हिंदी (in இந்தி). Archived from the original on 13 October 2022. Retrieved 2022-10-13.
- ↑ "HNKŽ 23/24, Finale". semafor.hns. Retrieved 13 July 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- Kiran Pisda at All India Football Federation