கிரண் நாடார் கலை அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரண் நாடார் கலை அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது1 சனவரி 2010; 10 ஆண்டுகள் முன்னர் (2010-01-01)
இயக்குநர்Roobina Karode
வலைத்தளம்knma.in


கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் (Kiran Nadar Museum of Art ) என்பது புது தில்லி மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள ஒரு தனியாரின் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகமாகும். [1] 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது நவீன மற்றும் சமகால கலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் அருங்காட்சியகம் என்ற பெருமையை உடையதாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய சேகரிப்பு சுதந்திர காலத்திற்கு பிந்தைய 20 ஆம் நூற்றாண்டின் ஓவியர்களின் படைப்புகள் ஆகும். இருந்தாலும் இந்த அருங்காட்சியகத்தில் இளைய, சமகால கலைஞர்களின் படைப்புகளும் காட்சியில் உள்ளன. இது ஒரு பன்முக முன்முயற்சியாக அமைந்துள்ளது. [2] இது பொதுத் துறைகளில் கலையை மேம்படுத்த உதவுவதோடு கலைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை ஏற்படுத்தி கலையை மேம்படுத்த உதவுகிறது.

புது தில்லியில் உள்ள இதன் வளாகம் சுமார் 18,000 சதுர அடி கண்காட்சி இடத்தையும், நொய்டாவில் உள்ள வளாகம் 13,000 சதுர அடியையும் கொண்டு அமைந்துள்ளது. [3]

வரலாறு[தொகு]

கலை அதிக அளவில் பொதுமக்களை அணுகவேண்டும் என்ற நோக்கில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இது தீவிர கலை சேகரிப்பாளரும், கொடையாளருமான கிரண் நாடாரால் தூண்டப்பட்டு அமைந்த முயற்சியாகும். நவீன மற்றும் சமகால கலைகளை காட்சிப்படுத்தும் இந்தியாவின் முதல் தனியார் அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான உத்வேகம் குகன்ஹெய்ம், மோமா மற்றும் விட்னி போன்ற நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டதாகும். இவை அனைத்தும் தனியார் அருங்காட்சியகங்களாகத் தொடங்கின. இந்திய கலை மற்றும் பண்பாட்டில் ஒரு சுறுசுறுப்பான மற்றும் புத்திசாலித்தனமான பார்வையாளர்களை உருவாக்குதல் என்பதே இந்த அருங்காட்சியகத்தின் மைய இலக்காக அமைந்தது. அது மட்டுமன்றி தேசிய மற்றும் சர்வதேச அளவில் சமகால கலைஞர்களுக்கு பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துதல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றை ஈடுபடுத்தி கலை பாராட்டு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் நடத்துதல், மேலும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவையும் இதன் இலக்குகளாகும். சிவ் நாடார் அறக்கட்டளையின் அனுசரணையுடன் கூடிய இந்த அருங்காட்சியகம் நொய்டாவில் உள்ள எச்.சி.எல் டெக்னாலஜிஸின் வளாகத்தில் உருவாக்கப்பட்ட கலைக்கூடாமாகத் தொடங்கியது இது ஜனவரி 2010 இல் திறந்த கதவுகள் என்ற பொதுமக்களுக்கான கண்காட்சியுடன் தன் பணியைத் தொடங்கியது. 20 ஆம் நூற்றாண்டின் கலைத் தொகுப்புகளாக கடந்த இரண்டு தசாப்தங்களாக கிரண் நாடார் சேகரித்த அசாதாரண படைப்புகள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. [4] ஒரு வருடம் கழித்து அது தெற்கு கோர்ட் மால் பகுதிக்கு இடமாற்றம் பெற்றது. அப்போது நேரம் என்ற தலைப்பில் அமைந்த, 50 கலைஞர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. [5] ஒரு ஷாப்பிங் மாலில் இதற்கான இடத்தை அமைப்பதற்கான முடிவு, இந்தியா மற்றும் துணைக் கண்டத்திலிருந்து நவீன மற்றும் சமகால கலைகளுக்குத் தெரிவுசெய்வதற்கான அவர்களின் பெரிய நோக்கத்திற்கு பெரிதும் உதவியது. [1] பொதுவாக தொடர்ந்து மால் செல்வோருக்கு இங்கு வந்து பார்ப்பது என்பதானதுஎளிதாகவும் வசதியாகவும் இருந்தது. இவை போன்ற நடவடிக்கைகள் ஆரம்ப காலம் தொடங்கி இயக்குநர் மற்றும் தலைமைக் காப்பாட்சியர் பதவியை வகித்த ரூபினா கரோட் என்பவரின் பெருமுயற்சியாகும். கலைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் அவருடைய பணி அமைந்திருந்தது. 'உரையாடல் மற்றும் நீடித்த தொடர்பு' [6] என்பதை இலக்காகக் கொண்டு அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதில் பல வழிகளை முன்வைத்த அவருடைய பணி பாராட்டுதற்குரியதாகும்.

சேகரிப்புகள்[தொகு]

பல ஆண்டுகளாக கலை சேகரிப்பதில் கிரண் நாடார் கொண்டிருந்த ஆர்வம், தன் தொகுப்பை அதிக அளவிலான பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டியது. இந்தியாவில் இதுபோன்ற, கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்ற, நிறுவனப் நிறுவன இடங்கள் இல்லாததை உணர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது. [1] இந்த தனிப்பட்ட மகிழ்ச்சியின் செயல், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்று வரை 4,500 க்கும் மேற்பட்ட படைப்புகளை உள்ளடக்கிய ஒரு வளர்ந்து வரும் தொகுப்பை அமைக்கக் காரணமாக அமைந்தது. புகழ்பெற்ற இந்திய ஓவியர்களான ராஜா ரவி வர்மா மற்றும் எம்.எஃப். ஹுசைன் முதல் சமகாலத்தைச் சேர்ந்த அனிஷ் கபூர்வரையிலான கலைஞர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் இங்கு உள்ளன.[7] ஏ ராமச்சந்திரன், அர்பிதா சிங், எப்.என். சூசா, ஜாமினி ராய், ஜோகன் சௌத்ரி, கிரிஷேன் கன்னா, மஞ்சித் பாவா, ,என்.எஸ். ஹர்ஷா, ராம் குமார், ராமேஷ்வர் புரூட்டா, எஸ்.எச் ரசா, சுபோத் குப்தா, தியேப் மற்றும் வி.எஸ்.கைடோன்டே போன்ற கலைஞர்களின் படைப்புகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [8] இப்போது அருங்காட்சியகத்தின் நிரந்தர சேகரிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் கிரண் நாடார் கையகப்படுத்திய மிக முக்கியமான இரண்டு ஓவியங்களான சையத் ஹைதர் ராசாவின் ஆரம்பகால படைப்பான சவுராஷ்டிரா இங்கு உள்ளது. இது 2010 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள பிரபலமான கிறிஸ்டிஸில் 16.42 கோடி ($ 3,486,965) பெற்று சாதனை படைத்தது. [9] மற்றொரு படைப்பு 2015 ஆம் ஆண்டில் 26.41 கோடி ஏலத்தில் பெற்ற, எப்.என்.சூசா படைத்த 8 அடிக்கு 4 அடி அளவில் அமைந்த பிறப்பு (1955) என்ற ஓவியமாகும்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]