கிரண் நவ்கிரே
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கிரண் பிரபு நவ்கிரே | ||||||||||||||
| பிறப்பு | 18 செப்டம்பர் 1994 சோலாப்பூர், மகாராட்டிரம், இந்தியா | ||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||
| பங்கு | மட்டையாளர் | ||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||
| நாட்டு அணி |
| ||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 71) | 10 செப்டம்பர் 2022 எ. இங்கிலாந்து | ||||||||||||||
| கடைசி இ20ப | 10 அக்டோபர் 2022 எ. தாய்லாந்து | ||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||
| ஆண்டுகள் | அணி | ||||||||||||||
| 2018/19–2019/20 | மகாராட்டிரம் | ||||||||||||||
| 2021/22–தற்போது | நாகாலாந்து | ||||||||||||||
| 2022–2023 | ஐபிஎல் வெலோசிட்டி | ||||||||||||||
| 2023–தற்போது | உபி வாரியர்சு | ||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||
| |||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 10 அக்டோபர் 2022 | |||||||||||||||
கிரண் பிரபு நவ்கிரே (Kiran Prabhu Navgire பிறப்பு: செப்டம்பர் 18,1994) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1][2][3] இவர் தற்போது இந்தியப் பெண்கள், நாகலாந்து பெண்கள் அணிக்காக விளையாடுகிறார்.[4] 2022ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக நாகாலாந்திற்காக ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்கள் எடுத்தபோது, மகளிர் மூத்தோர் இருபது 20 தொடரில் அதிக தனிநபர் ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[5] ஒரு இருபது20 போட்டியில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[6]
கிரண் நவகிரியின் தந்தை ஒரு விவசாயி, இவரது தாயார் ஒரு இல்லத்தரசி. இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர் .[7] துடுப்பாட்ட வீரராகத் தொடர்வதற்கு முன்பு, இவர் ஆரம்பத்தில் தடகளப் போட்டிகளில் கவனம் செலுத்தினார். சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்ற போது இவர் முதன்முதலில் துடுப்பாட்டம் விளையாடினார். இவர் எந்த முறையான பயிற்சியும் இல்லாமல் 2013-14 முதல் 2015-16 பருவங்களில் பல்கலைக்கழகத் துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[8] ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 100 மீட்டர் போட்டிகளில் புனே பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[7] புனேவில் உள்ள அசாம் வளாகத்தில் தனது முதல் முறையான பயிற்சியைப் பெற்றார், அங்கு இவர் உடற்கல்வியில் இரண்டு ஆண்டு படிப்பில் சேர்ந்தார்.
இவர் மகாராட்டிரா 2018-19 மூத்தோர் மகளிர் ஒருநாள் தொடரில் உள்ளூர்ப் போட்டிகளில் அறிமுகமானார்.[9] நாகாலாந்துக்காக விளையாடும் போது, இவர் 15 ஏப்ரல் 2022 அன்று குவஹாத்தி பர்சபாரா அரங்கத்தில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 76 பந்துகளில் 162 ஓட்டங்கள் எடுத்தார், இது இருபது20 ஆட்டப்பகுதியில் 150 + ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kiran Navgire Profile". ESPNcricinfo. Retrieved 2023-03-05.
- ↑ "Six players to watch out for". ESPN (in ஆங்கிலம்). 2022-05-22. Retrieved 2022-05-23.
- ↑ "Kiran Prabhu Navgire profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo. Retrieved 2022-05-23.
- ↑ Raj, Pratyush (2022-08-21). "Kiran, once a javelin gold medalist, picked for India women's tour of England". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/sports/cricket/kiran-once-a-javelin-gold-medlist-picked-for-india-womens-tour-of-england-8100596/.
- ↑ Penbugs (2022-04-15). "Kiran Navgire smashed unbeaten 162 in Senior T20 Trophy". Penbugs (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 15 April 2022. Retrieved 2022-05-23.
- ↑ .
- 1 2 "From Winning Medals in Athletics to Winning Hearts in Cricket - Story of Kiran Navgire". Female Cricket (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-21. Retrieved 2022-05-23.
- ↑ "Dhoni fan Kiran Navgire hopes to be a big hit in the Women's T20 Challenge". ESPN (in ஆங்கிலம்). 2022-05-23. Retrieved 2022-05-23.
- ↑ "Match scorecard". www.cricketarchive.com. Retrieved 2022-05-23.
- ↑ "THE BOARD OF CONTROL FOR CRICKET IN INDIA". www.bcci.tv (in ஆங்கிலம்). Retrieved 2022-05-23.
- ↑ Sohinee (2022-04-15). "Nagaland's Kiran Prabhu becomes first Indian to cross 150 runs in a T20 match". thebridge.in (in ஆங்கிலம்). Retrieved 2022-05-23.