கிரகாம் நிலம்


1 அண்டார்ட்டிக்கா மூவலந்தீவு, 2 ஜேம்ஸ் ராஸ் தீவு, 3 டி'ஊர்வில் தீவு, 4 சொயின்வில் தீவு, 5 டண்டீ தீவு, 6 சினோ ஹில் தீவு, 7 வேகா தீவு, 8 சீமோர் தீவு, 9 ஆண்டர்சன் தீவு, 10 பவ்லெட் தீவு, 11 லொக்கியர் தீவு, 12 ஈகிள் தீவு, 13 யொனசன் தீவு, 14 பிரான்சுஃபீல்டு தீவு, 15 ஆசுத்திரோலாப் தீவு, 16 டவர் தீவு

கிரகாம் நிலம் (Graham Land[1]) என்பது அந்தாட்டிக்கா மூவலந்தீவின் வடக்குப் பகுதியாகும். இது ஜெரமி முனை, அகாசிசு முனை ஆகியவற்றை இணைக்கும் கோட்டிற்கு வடக்கே அமைந்துள்ளது. அண்டார்ட்டிக்கா மூவலந்தீவின் வட பகுதியை கிரகாம் நிலம் என்றும், தென் பகுதியை பால்மர் நிலம் என்றும் அழைப்பதென 1964-ஆம் ஆண்டில் பிரித்தானியாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தீர்மானிக்கப்பட்டது. இங்குள்ள மலைத்தொடர்கள் வட அமெரிக்கா முதல் தென் அமெரிக்கா வரை நீளும் அமெரிக்க கார்திலெரா மலைத்தொடரின் கடைசித் தொடர்ச்சியாகக் கருதப்படுகின்றன. இங்கு லாக்லாவெர், லூயிஸ் பிலிப் உள்ளிட்ட பல பீடபூமிகள் காணப்படுகின்றன.
பெயர்க் காரணம்
[தொகு]கிரகாம் நிலம் என்று இந்த இடத்திற்கு, 1832-ஆம் ஆண்டு இப்பகுதியை ஆய்வு செய்த ஜான் பிஸ்கோ என்பவரால், பிரித்தானியக் கடற்படைத் தளபதியாக இருந்த சர் ஜேம்சு ஆர். ஜி. கிரகாம் என்பவரின் பெயர் சூட்டப்பட்டது. இது அர்கெந்தீனா, பிரித்தானியா, சிலி ஆகிய நாடுகளால் உரிமை கோரப்படும் ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாகவும் உள்ளது.
வருகை
[தொகு]இந்நிலப்பகுதியானது, தென் அமெரிக்காவிற்கு மிக அருகில் அமைந்துள்ள அந்தார்ட்டிகாவின் ஒரு பகுதியாகும். இதன் காரணமாகவே, தென் அமெரிக்காவிலிருந்து அந்தார்டிகாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், ஆய்வாளர்களும் பெரும்பாலும் இப்பகுதியைத்தான் வந்தடைகிறார்கள். 1934-1937 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரித்தானிய கிரகாம் நில ஆய்வுக்கு முன்பு வரை, இது ஒரு தீவுக்கூட்டம் என்று தான் கருதப்பட்டது; பின்னரே இது ஒரு மூவலந்தீவு என்று கண்டறியப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Graham Land, a jagged, glaciated part of Antarctica". Retrieved 6 February 2026.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் கிரகாம் நிலம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.