உள்ளடக்கத்துக்குச் செல்

கிரகாம் கூச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரகாம் கூச்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரகாம் கூச்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 461)சூலை 10 1975 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 3 1995 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 118 125 581 614
ஓட்டங்கள் 8,900 4,290 44,846 22,211
மட்டையாட்ட சராசரி 42.58 36.98 49.01 40.16
100கள்/50கள் 20/46 8/23 128/217 44/139
அதியுயர் ஓட்டம் 333 142 333 198*
வீசிய பந்துகள் 2,655 2,066 18,785 14,314
வீழ்த்தல்கள் 23 36 246 310
பந்துவீச்சு சராசரி 46.47 42.11 34.37 31.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 3 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/39 3/19 7/14 5/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
103/– 45/– 555/– 261/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, டிசம்பர் 7 2007

கிரகாம் கூச் (Graham Gooch, பிறப்பு: சூலை 23, 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 118 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 581 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 614 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975 - 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 67,057 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்தார்.[1]

கூச் லண்டனின் லெய்டன்ஸ்டோனில் உள்ள விப்ஸ் கிராஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்தார். அவர் கல்வி பயின்றார் பாய்ஸ் நார்லிங்டன் பள்ளி மற்றும் லேடனில் உள்ள லேடன் கண்ட்ரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கூச் 1973 முதல் 1997 வரை முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அவரது நேர்மையான நிலைப்பாடு,அதிரடியாக ஆடும் திறன் மற்றும் கனமான மட்டை போன்றவற்றினால் இவர் பரவலாக அறியப்பட்டார். மேலும் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.நவம்பர் 8, 2011 அன்று, கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் கவுரவ விருதைப் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

1990 களின் நடுப்பகுதியில், கூச் லண்டனை தளமாகக் கொண்ட மருந்தகத்திற்கும் , ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட மேம்பட்ட ஹேர் ஸ்டுடியோவிற்கும் முடி மாதிரிகளை விளம்பரப்படுத்தத் தொடங்கினார்.ஆடியோஜெனிக்கினால் இரண்டு உரிமம் பெற்ற கணினி விளையாட்டுகளை ,வெளியிட்டார். 1985 ஆம் ஆண்டில் கிரஹாம் கூச்சின் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 1993 இல் கிரஹாம் கூச் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்டம் ஆகிய இரு விளையாட்டுக்காஇ வெளியிட்டார். . ஜூலை 47 இல், தனது 47 வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு, தி பார்க்ஸில் நியூசிலாந்து அ துடுப்பாட்ட அணிக்கு எதிராக மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்தின் (எம்.சி.சி) தலைவராக இருந்தபோது, அவர் முதல் தர துடுப்பாட்டப் போட்டியில் மீண்டு விளையாடினார்.அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

2007 ஆம் ஆண்டில் கர்ட்னி வால்ஷின் அணி மற்றும் ஆலன் பார்டர் அணிக்கு எதிராக பீச் துடுப்பாட்டப் போட்டியில் பங்கேற்க தனது விருப்பத்தை அறிவித்தார். 2011 இல் கூச் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார். கிரஹாம் கூச் ஒரு வெஸ்ட் ஹாம் யுனைடெட்டின் ஆதரவாளர் ஆவார். 2014 ஆம் ஆண்டில், தி ராப் ஜார்ஜ் அறக்கட்டளையின் புரவலராக இவர் நியமிக்கப்பட்டார் .

சாதனை[தொகு]

இங்கிலாந்துக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 8,900 ரன்களுடன் 2 ஆம் இடத்ஹில் இருந்தார். ஓய்வு பெறும் போது 9 ஆவது இடத்தில் இருந்தார்..தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஒரு ஆட்டப் பகுதியில் 333 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம அதிக தனிநபர் ஓட்டங்களில் இங்கிலாந்து வீரர்களில் இவர் 3 ஆவது இடத்தில் உள்ளார். முதல் இரண்டு இடங்களில் லென் ஹட்டன் மற்றும் வாலி ஹம்மண்ட் ஆகியோர் உள்ளனர்.இலார்ட்சு மைதானத்தில் 1990 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு தெர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளார் ( 456). இங்கிலாந்துக்கான தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை 20 முறை அடித்த 8 வது வீரர் ஆவார்.அதிஅக் முறை அரை நூறுகள் அடித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையினைப் படைத்தார்.


சான்றுகள்[தொகு]

  1. "Records / Combined First-class, List A and Twenty20 / Batting records / Most runs in career". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகாம்_கூச்&oldid=3007022" இலிருந்து மீள்விக்கப்பட்டது