கிரகாம் ஆன்கோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரகாம் ஆன்கோக்
Graham Hancock
Graham-Hancock.jpg
பிறப்பு2 ஆகத்து 1950 (1950-08-02) (அகவை 72)
எடின்பரோ, இசுக்கொட்லாந்து
தேசியம்பிரித்தானியர்
குடியுரிமைபிரித்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்டர்காம் பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுஎழுத்தாளர்

கிரகாம் ஆன்கோக் (Graham Hancock, பிறப்பு: 2 ஆகத்து 1950) என்பவர் பிரித்தானிய எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் தொன்ம நம்பிக்கைகள், நினைவுக் கற்கள், பண்டைய வானியல்/சோதிடத் தரவுகள்[1] போன்ற வழமைக்கு மாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர்.[2]

ஹான்கோக் தனது படைப்புகளின் பெரும்பாலும் பண்டைக்கால மர்மங்கள், புராணக் கதைகள், வானியல் போன்றவற்றின் பின்னணியில் அமையப் பெற்றுள்ளன. மேலும் இவரின் கூற்றுப்படி இன்றைய கண்டுபிடிப்புகளான நாகரிகங்கள் அனைத்திற்கும் முதலில் ஒரு நாகரிக அமைப்பு இவ்வுலகில் அமைந்திருத்தல் வேண்டுமெனவும் மேலும் தனது பல ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடித்த கிமு 10,500 ஆம் ஆண்டில் புவியில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருத்தல் வேண்டுமெனவும் இவர் தெரிவிக்கும் அதே வேளை ஆராய்ச்சியாளர்கள் பலர் இவரது கண்டுபிடிப்பான கிமு 10,500 நம்பகத்தன்மை இல்லையென்பதனையும் உணர்த்தியுள்ளனர். மேலும் எது எவ்வாறிருப்பினும் இவ்வாண்டைக் குறிக்கும்படி எகிப்திய பிரமிடுக்களும், கம்போடியாவில் அமையப் பெற்றுள்ள கோயில்களும் வானில் உள்ள விண்மீன் அமைப்புகளிற்கு ஏற்றவாறு அமைக்கப்பெற்றுள்ளது என இவர் கூறுகின்றார். அதேசமயம் இவ்வாறு அமையப்பெற்றுள்ள விண்மீன் குடும்ப அமைப்புகளினை ஆராயும் பொழுது அவை அனைத்தும் கி.மு 10,500 ஆண்டினையே அடையாளம் காட்டுகின்றன. அதனால் இவர் மனித நாகரிகங்கள் கடவுள் போன்ற சக்தியினைக் கொண்டவர்களால் உருவாக்கம் பெற்றிருக்கலாம் எனவும் கூறுகின்றார்.

வாழ்க்கை[தொகு]

இசுக்கொட்லாந்து எடின்பரோ நகரில் பிறந்த ஆன்கோக் தனது சிறுவயது முதல் இந்தியாவில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட தனது தந்தையுடன் வாழ்ந்தார். டர்காம் பல்கலைக்கழகத்தில் 1973 ஆம் ஆண்டு சமூகவியலில் முதன்மைப் பட்டம் பெற்றார். பத்திரிகையாளராக த டைம்ஸ், த சண்டே டைம்ஸ், த இண்டிபெண்டண்ட் மற்றும் த கார்டியன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். மேலும் நியூ இண்டெர்னேஷனலிஸ்ட் இதழில் 1976 முதல் 1979 வரையிலும், த எக்கோனோமிஸ்ட் பத்திரிகையின் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிற்கான கிளையில் 1981 முதல் 1983 வரையிலும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "...the belief of Hancock and other writers in a lost civilisation that passed its wisdom on to ancient Egypt or the Maya repeats the theme of Atlantis: the antediluvian world popularised by Ignatius Donnelly from 1882." Kevin Greene, Tom Moore, Archaeology: An Introduction, page 252 (Routledge, 2010 edition). ISBN 978-0-203-83597-5
  2. Brian Regal, Pseudoscience: A Critical Encyclopedia (Greenwood Publishing Group, 2009). ISBN 0-313-35507-X

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகாம்_ஆன்கோக்&oldid=3459594" இருந்து மீள்விக்கப்பட்டது