கிரகலட்சுமி (இதழ்)
| வகை | மகளிர் இதழ் |
|---|---|
| இடைவெளி | மாதமிருமுறை |
| தொடங்கப்பட்ட ஆண்டு | 1979 |
| நிறுவனம் | மாத்ருபூமி குழுமம் |
| நாடு | இந்தியா |
| அமைவிடம் | கோழிக்கோடு |
| மொழி | மலையாளம் |
| வலைத்தளம் | mathrubhumi.com |
கிரகலட்சுமி (Grihalakshmi-magazine) என்பது மாத்ருபூமி குழுமத்தால் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ஓர் இந்தியப் பத்திரிகை. திசம்பர் 2013 நிலவரப்படி, ஐஆர்எஸ் கணக்கெடுப்பு 2013-இன் படி, இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய பிராந்திய மொழி இதழாகும். சராசரியாக 826,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன.[1]
வரலாறு
[தொகு]மலையாளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பெண் பத்திரிகையான கிரகலட்சுமி 1979ஆம் ஆண்டு[2][3] மாதாந்திர வெளியீடாகத் தொடங்கப்பட்டது. இது 2013-இல் மாதம் இருமுறை வெளியாகும் இதழாக மாறியது. கிரகலட்சுமி பத்திரிகை மாத்ருபூமிக்குச் சொந்தமானது. மேலும் இது கோழிக்கோட்டைத் தளமாகக் கொண்டு வெளியிடப்படுகிறது.[3]
பெண்களுக்கான மராத்தான்
[தொகு]சனவரி 30, 2016 அன்று, கிரகலட்சுமி கேரளாவின் கொச்சியில் பெண்களுக்கான நள்ளிரவு பாதி-நெடுந்தொலைவு ஓட்டத்தினை ஏற்பாடு செய்தது. இந்தியாவில் இதுபோல நடைபெறுவது இது முதல் முறையாகும். பிரபல மலையாள நடிகை மம்தா மோகன்தாசு, ஒலிம்பிக் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், சமூக சேவகி சுனிதா கிருஷ்ணன் ஆகியோர் இந்த நிகழ்வின் தூதர்களாக இருந்தனர்.[4]
பெண்மையைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நெடுந்தொடர் ஓட்டத்தின் நோக்கம், இரவு நேரங்களிலும் தெருக்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானவை, சுதந்திரமானவை என்ற செய்தியைப் பரப்புவதாகும். இந்த நெடுந்தொட்டர் ஒட்டத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். அப்போதைய உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இந்த நெடுந்தொட்டர் ஓட்ட போட்டி சனவரி 30ஆம் தேதி இரவு 10:30 மணிக்குத் தொடங்கி சனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இது இரண்டு நாள் மாரத்தானாக மாறியது.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New IRS 2013: Dainik Jagran tops dailies list". exchange4media.com. 29 January 2014.
- ↑ "Of recipes and G-spots: On India's 'magazine era'". http://www.dnaindia.com/lifestyle/report-of-recipes-and-g-spots-on-india-s-magazine-era-2105879.
- 1 2 The Far East and Australasia 2003. Psychology Press. 2002. p. 491. ISBN 978-1-85743-133-9.
- ↑ "Grihalakshmi to Hold Women's Marathon". newindianexpress.com. 24 January 2016. Archived from the original on 24 January 2016.
- ↑ "Midnight Half Marathon: they ran to fulfill the dream". mathrubhumi.com. 31 January 2016.