கியோர்கெசு குசேனைரே
கியோர்கெசு குசேனைரே Georges Cuisenaire | |
---|---|
பிறப்பு | பெல்ஜியம் | செப்டம்பர் 7, 1891
இறப்பு | துயின், பெல்ஜியம் | திசம்பர் 31, 1975
தேசியம் | பெல்ஜியம் |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | குசேனைரே கோல்கள் |
கியோர்கெசு குசேனைரே (Georges Cuisenaire) (1891–1975) பெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர். இவர் இசை மற்றும் கணித ஆசிரியராவார். கணிதத்தை எளிதாகப் புரிந்துகொண்டு கற்க உதவும் குசேனைரே கோல்கள் இவரது கண்டுபிடிப்பாகும். இவர் எமிலி கியோர்கெசு குசேனைரே (Emile-Georges Cuisenaire) எனவும் அழைக்கப்பட்டார்,[1]
வாழ்க்கை
[தொகு]பெல்ஜியத்திலுள்ள மான்சு நகரின் 'ராயல் கன்சர்வேட்டரி ஆஃப் மியூசிக்' கல்லூரியில் இசைத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். அங்கு, வயலின் இசையில் முதல் பரிசைப் பெற்றார். 1912 ஏப்ரல் 26 முதல் பெல்ஜியத்தின் துயின் கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
குசேனைரே கோல்கள்
[தொகு]1945 இல் தனது பல ஆண்டுகள் அனுபவத்தையும் சோதனைகளையும் பயன்படுத்திக் கணிதத்தை விளையாட்டாகக் கற்றுக்கொள்ளக்கூடிய குசேனைரே கோல்களைக் கண்டுபிடித்தார். இக்கோல்கள் வெவ்வேறு வண்ணம் தீட்டப்பட்ட வெவ்வேறு நீளங்கள் கொண்ட மரக்கோல்களாகும். 1951 இல் பெல்ஜியத்தில் இக்கோல்களைப் பயன்படுத்தும் முறைகளடங்கிய கையேட்டின் (எண்களும் நிறங்களும்-Numbers and Colours)
இக்கோல்கள் கணிதத்தைக் கற்கும் முறைகுறித்த விழிப்புணர்வையும் மாற்றத்தையும் கல்வியாளர்களிடம் ஏற்படுத்தியது. பல நாடுகளில் ஆயிரக்கணக்கானா ஆசிரியர்கள் இக்கோல்களைத் தமது வகுப்பறைகளில் பயன்படுத்தலாயினர்.[2] [3][4]
சிறப்புகள்
[தொகு]ஜனவரி 11, 1968 இல் குசேனைரேவுக்கு பெல்ஜியத்தின் பழம்பெரும் சிறப்பு விருதான "ஆர்டர் ஆஃப் லியோபோல்டு" வழங்கப்பட்டது. 1973 இல் குசேனைரே கோல்களைக் கணிதம் கற்க உதவும் கருவியாகப் பரிந்துரைத்ததோடு, கணிதக் கல்வித் திட்டங்களை இம்முறையை அடிப்படையாகக்கோண்டு சீரமைக்கவும் கேட்டுக்கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Slates, Sliderules and Software". National Museum of American History. சிமித்சோனிய நிறுவனம். Retrieved 19 October 2012.
- ↑ "Cuisenaire® Rods Come To America". Etacuisenaire.com. Archived from the original on 2013-01-23. Retrieved 2013-10-24.
- ↑ Gregg, Simon. "How I teach using Cuisenaire rods". mathagogy.com. Archived from the original on 13 September 2014. Retrieved 22 April 2014.
- ↑ "Teaching fractions with Cuisenaire rods". Teachertech.rice.edu. Archived from the original on 2018-02-08. Retrieved 2013-10-24.
வெளியிணைப்புகள்
[தொகு]- The Cuisenaire Company: registered UK trademark holder, with background to Georges Cuisenaire