கியோமிசு-டேரா
கியோமிசு-டேரா Kiyomizu-dera 清水寺 | |
---|---|
![]() | |
கியோமிசு கோயிலின் தலைமைக் கட்டடம். | |
தகவல்கள் | |
மதப்பிரிவு | கித்தாஹொசோ |
நிறுவல் | 798 |
முகவரி | கியோட்டோ |
நாடு | சப்பான் |
இணையத்தளம் | http://www.kiyomizudera.or.jp/ |
கியோமிசு-டேரா (Kiyomizu-dera, சப்பானியம்: 清水寺) என்பது சப்பானில் கியோட்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில். இக்கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது[1]. அரண்மனையை ஒட்டியுள்ள இந்தக் கோயில், சப்பானியக் கலைநயத்தின் புகழ் சொல்வதாய் விளங்குகிறது. இதன் முக்கிய பகுதிகள் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன.
வரலாறு[தொகு]
கியோமிசு-டேரா கோயில் ஹையன் காலகட்டத்தைச் சேர்ந்தது[2]. கிபி 798 இல் அமைக்கப்பட்டது. இதன் தற்போதைய கட்டடங்கள் 1633 ஆம் ஆண்டில் டொக்குகாவா யேமிட்சு என்ற இராணுவத் தலைவரின் கட்டளையின் பேரில் மீளக்கட்டப்பட்டது[3]. இக்கட்டட அமைப்பில் எந்தவொரு ஆணியும் பயன்படுத்தப்படவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இக்கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் பெயரை அடியாகக் கொண்டு இக்கோயிலுக்கு இப்பெயர் அமைந்தது. கியோமிசு என்றால் தெளிந்த நீர், அல்லது தூய நீர் எனப் பொருள்[4].
2007-இல், புதிய ஏழு உலக அதிசயங்களின் இறுதிப் பட்டியலின் 21 இடங்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டது[5]. ஆனாலும், புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
காட்சிக் கூடம்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Historic Monuments of Ancient Kyoto (Kyoto, Uji and Otsu Cities)". http://whc.unesco.org/en/list/688/multiple=1&unique_number=814. பார்த்த நாள்: 2008-12-20.
- ↑ Ponsonby-Fane (1956), p. 111.
- ↑ Graham (2007), p. 37
- ↑ "Kiyomizu Temple". 2007-04-07. http://www.pacificfriend.ca/html/kiyomizu_temple.html. பார்த்த நாள்: 2008-12-18.
- ↑ "The Finalists for The Official New 7 Wonders of the World". http://www.new7wonders.com/classic/en/n7w/finalists/. பார்த்த நாள்: 2009-06-01.
வெளி இணைப்புகள்[தொகு]
- தகவல்கள் - (ஆங்கில மொழியில்)
- Kiyomizu-dera Temple at Official Kyoto Travel Guide
ஆள்கூறுகள்: 34°59′42″N 135°47′06″E / 34.99500°N 135.78500°E