கியோங்னோசுலா ஆல்பைன் சரணாலயம்
| கியோங்னோசுலா ஆல்பைன் சரணாலயம் Kyongnosla Alpine Sanctuary | |
|---|---|
| அமைவிடம் | கேங்டாக் மாவட்டம், இந்தியா |
| அருகாமை நகரம் | கேங்டாக் |
| ஆள்கூறுகள் | 27°22′37″N 88°44′28″E / 27.377°N 88.741°E[1] |
| பரப்பளவு | 31 km2 (12 sq mi) |
| நிறுவப்பட்டது | 1977 |
கியோங்னோசுலா ஆல்பைன் சரணாலயம் (Kyongnosla Alpine Sanctuary) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் காங்டாக்கு மாவட்டத்தில் உள்ள ஓர் இயற்கை காப்பகமாகும். நாதூ லா சாலையில் உள்ள சோம்கோ (சாங்கு) ஏரியை ஒட்டிய பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து கிழக்கே சுமார் 31 கிமீ (19 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் சுமார் 31 சதுரகிலோமீட்டர் (12 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது, மேலும் 15 ஆவது மைல் காவல் சோதனைச் சாவடியிலிருந்து ரோங் சூ பள்ளத்தாக்கு மற்றும் சோம்கோ ஏரியின் எல்லையில் உள்ள முகடுகள் வரை நீண்டுள்ளது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இரண்டும் இங்கு நிறைந்துள்ளன. அரிய, ஆபத்தான தரை ஆர்க்கிட்டுகளும் கொத்துக் கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறாச் செடி வகைகளும் உயரமான என்றும் பசுமையான புதர்ச் செடி வகைகளும் உயரமான வெள்ளி நிற ஊசியிலை மரங்களும் இங்கு காணப்படுகின்றன.[2] ரோடோடென்ட்ரான் நிவியம் (சிக்கிமின் மாநில மரம்) மற்றும் சைப்ரிபீடியம் திபெடிகம் (அழிவு விளிம்பில் உள்ள தரை கொடி ஆர்க்கிட்டு) ஆகியவையும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கியோங்னோசுலா ஆல்பைன் சரணாலயம் புனித இமயமலை நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். [3][4]
சரணாலயத்தைப் பார்வையிட சிறந்த நேரம் மே, சூன், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் ஆகும், அப்போது காலநிலை இனிமையாகவும், வறண்டதாகவும், சூடாகவும் இருக்கும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sikkim Forest Department: Wildlife
- ↑ O'Neill, A. R. (2019). "Evaluating high-altitude Ramsar wetlands in the Sikkim Eastern Himalayas". Global Ecology and Conservation 20 (e00715): 19. doi:10.1016/j.gecco.2019.e00715.
- ↑ Gurung, C. P.; Maskey, T. M.; Poudel, N.; Lama, Y.; Wagley, M. P.; Manandhar, A.; Khaling, S.; Thapa, G.; Thapa, S. (2006). "The Sacred Himalayan Landscape: Conceptualizing, Visioning, and Planning for Conservation of Biodiversity, Culture and Livelihoods in the Eastern Himalaya" (PDF). In McNeely, J. A.; McCarthy, T. M.; Smith, A.; Whittaker, O. L.; Wikramanayake, E. D. (eds.). Conservation Biology in Asia. Kathmandu: Nepal Society for Conservation Biology, Asia Section and Resources Himalaya Foundation. pp. 10–20. ISBN 99946-996-9-5.
- ↑ O'Neill, A. R.; Badola, H.K.; Dhyani, P. P.; Rana, S. K. (2017). "Integrating ethnobiological knowledge into biodiversity conservation in the Eastern Himalayas". Journal of Ethnobiology and Ethnomedicine 13 (1): 21. doi:10.1186/s13002-017-0148-9. பப்மெட்:28356115.
- ↑ "Kyongnosla Alpine Sanctuary Sikkim | Wildlife Tourism Sikkim". www.tourmyindia.com. Retrieved 2021-06-10.
வெளி இணைப்புகள்
[தொகு]- Envis Team (2006-06-04). "Ecodestination of India-Sikkim Chapter" (PDF). Eco-destinations of India. Envis Centre Sikkim. Archived from the original (PDF) on 2007-06-19. Retrieved 2006-12-01.