கியூபிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசை, சிற்றின்பக் காதல், ஈர்ப்பு மற்றும் பாசத்திற்கான கடவுள் கியூபிட்

கியூபிட் (Cupid) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் உரோமக் காதற் கடவுளான வீனசின் மகன் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் எரோஸ் ஆவார்.[1] இவர் உரோமத் தொன்மவியலுக்கு அமைவாக ஆசை, சிற்றின்பக் காதல், ஈர்ப்பு மற்றும் பாசத்திற்கான கடவுள் ஆவார். இவருடைய பெற்றோர்கள் மார்ஸ் மற்றும் வீனஸ் ஆவர். இவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்கள் வில்லும் அம்பும் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cupido
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபிட்&oldid=3265351" இலிருந்து மீள்விக்கப்பட்டது