கியூபானைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூபானைட்டு
Cubanite
கியூபெக்கின் சிபகாமவு சுரங்கங்கத்திலிருந்து கிடைத்த அடுக்கு, சுழற்சி - இரட்டை கியூபானைட்டு படிகங்கள். (அளவுகள்: 1.5 x 1.3 x 1.0 செ.மீ)
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுCuFe2S3
இனங்காணல்
நிறம்வெங்கலம் முதல் பித்தளை வரையிலான மஞ்சள்
படிக இயல்புதடிமனான படிகங்கள் நீளமான மிகப்பெரிய படிகங்கள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்{110} இல் பொதுவான இரட்டைத் தளங்கள் சோடிகளாக, நான்கு மற்றும் ஆறு குறுகலான இணைப்பு போலி அறுகோணம்
பிளப்பு{110} மற்றும் {130} இல் பிளவு
முறிவுசங்குரு
மோவின் அளவுகோல் வலிமை3.5-4
மிளிர்வுஉலோகம்
கீற்றுவண்ணம்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.0-4.2
ஒளியியல் பண்புகள்மெருகூட்டப்பட்ட மேற்பரப்பில் தெளிவான திசைமாற்றம்
பிற சிறப்பியல்புகள்வலிமையான காந்தம்
மேற்கோள்கள்[1][2][3]
சிபவுகாமாவிலிருந்து கிடைத்த பரந்த மற்றும் அதிக பளபளப்பு கொண்ட பித்தளை-மஞ்சள் கியூபானைட்டு படிகம், kiyUpek (அளவு: 1.7 x 1.0 x 0.7 cm)

கியூபானைட்டு (Cubanite) என்பது CuFe2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரம், இரும்பு, கந்தகம் ஆகிய தனிமங்கள் கலந்துள்ள இக்கனிமம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது [3].

கியூபா நாட்டில் ஓரியண்ட் மாகாணத்தின் மாயாரி-பராகோவா பட்டையில் 1843 ஆம் ஆண்டு முதன்முதலாக கியூபானைட்டு கண்டுபிடிக்கப்பட்டது [1].

உயர் வெப்பநிலையில் நீர்வெப்ப படிவுகளில் கியூபானைட்டு தோன்றுகிறது. இக்கனிமத்துடன் பைரோடைட்டு, பெண்டியண்டைட்டு சால்கோபைரைட்டு உள்ளிட்ட கனிமங்களுடன் சேர்ந்து கியூபானைட்டு கிடைக்கிறது. சால்கோபைரைட்டின் உருகிய பாறை பிரிவிலிருந்து 200 முதல் 210° செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் கியூபானைட்டு தோன்றுகிறது [2]. கரிமப்பாறை வேதியெரிகல் விண்வீழ் கற்களிலிருந்தும் கியூபானைட்டு கனிமம் கிடைப்பதாக கருதப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபானைட்டு&oldid=2938221" இலிருந்து மீள்விக்கப்பட்டது