கியுவியே அலகுடைய திமிங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Rhipidistia
கியுவியே அலகுடைய திமிங்கிலம்
புதைப்படிவ காலம்:Pliocene-recent[1]
Ziphius cavirostris NOAA.jpg
Cuvier's beaked whale size.svg
ஒரு சாராசரி மனிதனின் அளவுடன் ஒப்பீடு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்
படைக்குளம்பி
உள்வரிசை: கடற்பாலூட்டி
குடும்பம்: Beaked whale
பேரினம்: Ziphius
Cuvier, 1823 [2]
இனம்: Z. cavirostris
இருசொற் பெயரீடு
Ziphius cavirostris
கியூவியே, 1823 [2]
Cetacea range map Cuvier's Beaked Whale.PNG
கியுவியே அலகுடைய திமிங்கிலம் வாழும் பகுதி
வேறு பெயர்கள் [3][4]

கியுவியே அலகுடைய திமிங்கிலம் (Cuvier's beaked whale) அல்லது வாத்து மூக்கு திமிங்கிலம் (Ziphius cavirostris) என்பது ஜிபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அலகுடைய திமிங்கில இனம் ஆகும். இது பெரும்பாலும் பலீன் திமிங்கலத்தை விட சிறியது, ஆனால் அலகுடைய திமிங்கலங்களிடையே பெரியது. கியுவியே அலகுடைய திமிங்கிலம் 1,000 அடிகள் (300 m) மேறுபட்ட ஆழத்தில் வாழ்கிறது. உலகில் வாழும் திமிங்கிலங்களில் அதிக ஆழத்தில் முக்குளிக்கும் திமிங்கிலம் இது ஆகும். இது (300 9,816 அடிகள் (2,992 m) ஆழக் கடலில் 222 நிமிடங்கள் வரை அங்கேயே தங்கி இருந்ததற்கான பதிவுகள் உள்ளன. இவை இந்த அசாதாரண ஆழத்திற்கு செல்வதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை. [5] [6] ஆழமான நீர் வாழ்விடத்தில் இருந்தபோதிலும், இது அடிக்கடி கடற்கரைகளில் காணப்படும் திமிங்கலங்களில் ஒன்றாகும். [7]

இதன் விலங்கியல் பெயரான Ziphius cavirostris என்பதில் பேரினத்தைக் குறிக்கும் சொல்லான Ziphius என்பது கிரேக்கச் சொல்லாலான xiphos (வாள்) என்பதில் இருந்து வருகிறது. மேலும் இனத்தைக் குறிக்கும் cavirostris என்ற சொல்லானது cavus (குழாய்) மற்றும் rostrum "அலகு" ஆகிய இலத்தீன் சொற்களின் சேர்க்கையாகும். இது ஊதுகுழல் போன்ற இதன் தலையின் முன்பகுதியைக் குறிக்கிறது. [8]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "Ziphius cavirostris Cuvier 1824 (Cuvier's beaked whale)".
  2. 2.0 2.1 William Perrin (2014). "Ziphius Cuvier, 1823". World Cetacea Database. World Register of Marine Species. பார்த்த நாள் 16 March 2015.
  3. "Ziphius" (en). பார்த்த நாள் 11 April 2021.
  4. "Ziphius cavirostris" (en). பார்த்த நாள் 11 April 2021.
  5. Schorr, Gregory S.; Falcone, Erin A.; Moretti, David J.; Andrews, Russel D. (26 March 2014). "First Long-Term Behavioral Records from Cuvier's Beaked Whales (Ziphius cavirostris) Reveal Record-Breaking Dives". PLOS ONE 9 (3): e92633. doi:10.1371/journal.pone.0092633. பப்மெட்:24670984. Bibcode: 2014PLoSO...992633S. 
  6. Quick, Nicola J.; Cioffi, William R.; Shearer, Jeanne M.; Fahlman, Andreas; Read, Andrew J. (15 September 2020). "Extreme diving in mammals: first estimates of behavioural aerobic dive limits in Cuvier's beaked whales". The Journal of Experimental Biology 223 (18): jeb222109. doi:10.1242/jeb.222109. பப்மெட்:32967976. 
  7. "Cuvier's Beaked Whale (Ziphius cavirostris)". NOAA (15 January 2015). மூல முகவரியிலிருந்து 30 March 2017 அன்று பரணிடப்பட்டது.
  8. "Cuvier's Beaked Whales, Ziphius cavirostris". The MarineBio Conservation Society (MarineBio) (18 May 2017).

வெளி இணைப்புகள்[தொகு]