கியுநெய்த்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கியுநெய்த்ரா

கியுநெய்த்ரா

இது சிரியா நாட்டிலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் தென்மேற்கு சிரியாவில் பாழடைந்த நிலையில் உள்ளது. இது கோலான் குன்றுகள் பள்ளத்தாக்கில் 1010 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[1] இது அரேபிய மொழியில் "சிறிய பாலம்" (The Little Bridge) என்று பொருள்படுகிறது.

கியுநெய்த்ரா உதுமானியப் பேரரசு ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நகரம் டாமாஸ்கசுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. அதன்பிறகு 20,000 பேர் கொண்ட அரண்மனையைப் பாதுகாக்கும் காவற்படை நகரமாக மாறியது. 1946-ல் சுதந்திர சிரிய குடியரசின் ஒரு பகுதியாகவும் ரிஃப் டீமாஸ்க் ஆட்சிக்குட்பட்டதாகவும் மாறியது.1964-ல் பிரிந்த கியுநெய்த்ரா ஆட்சிப்பகுதியின் தலைநகராக மாறியது. 1967 ஜூன் 10-ஆறு நாள் யுத்தத்தின் இறுதி நாளில் கியுநெய்த்ரா இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.1973-ல் யாம் கிப்பூர் போரில் சிரியா இந்நகரை மீட்டது. ஆனால் மறுதாக்குதலின் போது இஸ்ரேல் மீண்டும் கியுநெய்த்ராவை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.1974-ல் இஸ்ரேல் இந்நகரத்தை விட்டு வெளியேறும் முன் இந்நகரத்தை மீண்டும் கட்ட மறுத்தது.அங்கு மக்கள் சென்று குடியேற சிரியா ஆதரவுதரவில்லை மறுத்தது.அங்கு ,மக்கள் சென்று குடியேற சிரியா ஆதரவுதரவில்லை. இந்நகரத்தை அழித்ததற்காக ஐக்கிய நாடுகள் சபையால் இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கப்பட்டது. அதேநேரத்தில் இந்நகரத்தை மறுசீரமைக்காததற்கு சிரியாவை இஸ்ரேல் கண்டித்தது. சிரிய உள்நாட்டுப்போரின் போது, கலகக்காரர்களும்,சிரிய-அரேபிய இராணுவத்திற்கும் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

கியுநெய்த்ராவுக்குச் செல்லும் வழி


2004-ல்,இந்நகரத்தின் மக்கள்த்தொகை 153 பேராக கணக்கிடப்பட்டது.4000-த்திற்கும் அதிகமானோர் இந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.தற்போது கியுநெய்த்ரா-வை ஐக்கிய நாடுகள் சபை, இராணுவம் அனுமதிக்கப்படாத பகுதியாக அறிவித்தது. இது சிரியாவின் எல்லைக்கும் இஸ்ரேலின் கோலான் குன்றுகளிற்கும் இடையில் அமைந்துள்ளது.சட்டரீதியாக இது சிரிய எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களே இங்கு வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Geoffrey William Bromiley. "Golan", in International Standard Bible Encyclopedia: E-J, p. 520. Wm. B. Eerdmans Publishing, 1994. ISBN 0-8028-3782-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியுநெய்த்ரா&oldid=3523097" இலிருந்து மீள்விக்கப்பட்டது