கியாரா அத்வானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியாரா அத்வானி
2018இல் கியாரா அத்வானி
பிறப்புஆலியா அத்வானி[1]
31 சூலை 1992 (1992-07-31) (அகவை 31)[2]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014 முதல் தற்போது வரை
உறவினர்கள்அசோக் குமார் (முபாட்டனார்)
சயீத் ஜாஃபரி (பெரிய மாமா)
ஜூஹி சாவ்லா அத்தை)[2]

கியாரா அத்வானி (Kiara Alia Advani) [3] 1992 ஜூலை 31 அன்று பிறந்த இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஒரு இந்திய நடிகை ஆவார். 2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான பிறகு, அத்வானி எம். எஸ். தோனி, நெற்ஃபிளிக்சில் வெளிவந்த மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சிப் படமான லஸ்ட் ஸ்டோரிஸ் (2018), மற்றும் தெலுங்கு அரசியல் படமான பரத் அனே நேனு (2018) போன்ற பல்வேறு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

சிந்தி குடும்பத்தைச் சார்ந்த ஜகதீப் அத்வானி மற்றும் ஜெனீவ் ஜாப்ரிக்கு கியாரா அத்வானி மகளாகப் பிறந்தார்.[4] ஜகதீப் அத்வானி ஒரு தொழிலதிபர், மேலும் பஞ்சாபி, இசுக்கொட்லாந்து, ஐரியர், போத்துக்கீசர், மற்றும் எசுபானிசு வம்சாவளியைச் சார்ந்தவர்.[5][6][7] தனது முதல் பெயரான அலியா அத்வானியாக பிறந்த இவர் புகலி படத்தில் தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றினார்.[1] இவருக்கு மைஷாலைப் எனும் இளைய சகோதரர் உள்ளார். இவரிடைய தாய்வழி குடும்பத்தின் மூலம் பல பிரபலங்கள் இவருக்கு உறவினர் ஆவார்கள். நடிகர்கள் அசோக் குமார் மற்றும் சயீத் ஜாஃப்ரி ஆகியோர் முறையே, இவரது தாத்தா பாட்டியும் பெரிய மாமாவும் ஆவார், அதே போன்று ஷாஹீன் ஜாஃப்ரி மற்றும் நடிகை ஜூஹி சாவ்லா இவருடைய அத்தையாவார்கள்.[2]

தொழில்[தொகு]

அத்வானி 2014இல் வெளிவந்த கபீர் சதானந்த் இயக்கிய புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் புதியவர்களான மோகித் மார்வா, விஜேந்தர் சிங் பெனிவால் , அர்பி லம்பா மற்றும் ஜிம்மி ஷெர்கில் ஆகியோருடன் நடித்திருந்தார், இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதேசமயம், தனது நடிப்புக்காக பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார்.[8] அத்வானி, நடிகர் ராம் சரண் உடன் "வினயா வித்யா ராமா" என்ற ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார்.[9]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Salman Khan renamed Fugly actress as Kiara Advani". India Today. 3 June 2014. https://www.indiatoday.in/movies/bollywood/story/salman-khan-kiara-advani-alia-advani-alia-bhatt-fugly-195562-2014-06-03. 
  2. 2.0 2.1 2.2 Gupta, Priya (5 May 2014). "My father saw '3 Idiots' and decided to let me do what I wanted to: Kiara Advani". Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. https://www.instagram.com/kiaraaliaadvani/
  4. Kiara Advani's unseen side
  5. "Kiara Advani's Unknown Facts Photos". The Times of India (in ஆங்கிலம்). 27 September 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.
  6. Agrawal, Stuti (26 May 2014). "Having a film background can only get you to meet the right people: Kiara Advani". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.
  7. "Gene Junction: Kiara Alia Advani". Verve Magazine. 2 February 2016. பார்க்கப்பட்ட நாள் 2 February 2016.
  8. Taran Adarsh (13 June 2014). "Movie Review: 'Fugly' (2014)". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014.
  9. "Ram Charan-Boyapati Srinu’s upcoming film is slated for a Pongal release". The Times of India. 16 June 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/ram-charan-boyapati-srinus-upcoming-film-is-slated-for-a-pongal-release/articleshow/65009545.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kiara Advani
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாரா_அத்வானி&oldid=3753594" இலிருந்து மீள்விக்கப்பட்டது