கியாய்க்டியோ புத்தர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கியாய்க்டியோ பகொடா
தங்கப் பாறை
Golden Rock.JPG
தங்கப் பாறையின் மீது கியாய்க்டியோ பகொடா
தகவல்கள்
மதப்பிரிவு தேரவாத பௌத்தம்
நாடு மியான்மர்
ஆள்கூறுகள் 17°29′00.90″N 97°05′54.34″E / 17.4835833°N 97.0984278°E / 17.4835833; 97.0984278ஆள்கூறுகள்: 17°29′00.90″N 97°05′54.34″E / 17.4835833°N 97.0984278°E / 17.4835833; 97.0984278

Dharma Wheel.svg வலைவாசல்:பௌத்தம்

கியாய்க்டியோ பகொடா அல்லது கியாய்க்டியோ புத்தர் கோயில் ( Kyaiktiyo Pagoda), தங்கப் பாறை என்றும் அழைக்கப்படுகிறது. இது மியான்மர் நாட்டில், மொன் மாநிலத்தில் அமைந்த சிறு புத்தர் கோயில். ரங்கூனிலிருந்து 210 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இப்பாறைக் கோயில் கடல் மட்டத்துக்கு மேல் 3600அடி உயரத்தில் (1100 மீட்டர்) அமைந்துள்ளது. இப்பாறையின் உயரம் 7.3மீட்டர். கின்புன் என்ற கிராமத்திலிருந்து 16 கி. மீ., தொலைவில் தங்கப் பாறை அமைந்துள்ளது. ஆண்கள் மட்டும் இக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு சிறிய இரும்புப் பாலத்தைக் கடந்தே இந்தப் பாறையை அடைய முடியும். மார்ச் மாதத்தில் வரும் பெüர்ணமி அன்று சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் வசிக்கும் புத்த சமயத்தினர் இந்த தங்கப் பாறையை வழிபட வருகின்றனர். இப்பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.[1]

காட்சிகள்[தொகு]

காலையில் தங்கப் பாறை மற்றும் கியாய்க்டியோ புத்தர் கோயிலின் தோற்றம்
மாலையில் கோயிலின் தோற்றம்
இரவில் தங்கப்பாறை மற்றும் பகோடாவின் தோற்றம்

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]