உள்ளடக்கத்துக்குச் செல்

கியான்-பாரே நோய்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியான்-பாரே நோய்குறி
Guillain–Barré syndrome
ஒத்தசொற்கள்கியான்–பாரே–இசுத்ரோல் நோய்குறி, லாண்ட்ரியின் பக்கவாதம், தொற்றுக்குப் பிந்தைய பலநரம்பழற்சி, கடுமையான அழற்சி நீக்கும் பலநரம்பு இயக்கக் கோளாறு[1]
பலுக்கல்
சிறப்புநரம்பியல்
அறிகுறிகள்கால்கள் மற்றும் கைகளில் தொடங்கி, பொதுவாக மேலே செல்லும் தசைப் பலவீனம்.[3]
சிக்கல்கள்சுவாசப் பிரச்சினை, இதய, இரத்த அழுத்தப் பிரச்சினைகள்[1][3]
வழமையான தொடக்கம்விரைவானது (மணிநேரங்கள் முதல் வாரங்கள் வரை)[3]
காரணங்கள்பொதுவாக ஒரு தொற்றுநோயால் தூண்டப்படுகிறது; எப்போதாவது அறுவை சிகிச்சை மூலம்
நோயறிதல்அறிகுறிகளின் அடிப்படையில், நரம்பு கடத்தல் ஆய்வுகள், முதுகுத் தண்டுவட துளையிடுதல்[3]
சிகிச்சைதுணைப் பராமரிப்பு, நரம்பு வழி நோய் எதிர்ப்புப் புரதம், ஊன்நீர் நீக்கம்
முன்கணிப்புகுணமடைய வாரங்கள் முதல் ஆண்டுகள் வரை[3]
நிகழும் வீதம்ஆண்டுக்கு 100,000 பேருக்கு இருவர்[3][4]
இறப்புகள்7.5%[1]
Campylobacter jejuni என்ற கிருமியின் அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி படம். இக்கிருமியால் தாக்கப்பட்ட 30% நபர்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது.[5]
இந்நோயின் பல்வகைமை

கியான்-பாரே நோய்குறி (Guillain–Barré syndrome; அஃகுப்பெயர்: "GBS") என்பது பக்கவாத நரம்பு மண்டல செயலிழப்பு நோயினைக் குறிக்கிறது. இது மனித உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படுகிறது. இதனால் புற நரம்பு மண்டலம் பெரிதும் தாக்கம் அடைந்து, இயல்பு நிலையை இழக்கிறது. அதாவது நரம்பு மண்டலத் தொடரானது, இடையிடையே துண்டிப்புகளை அடைகிறது.

காரணிகள்

[தொகு]

இந்நோய் பரவலுக்கான முக்கிய காரணமாக, சுகாதாரம் பேணாமை என கண்டறியப்பட்டுள்ளது.[6] நோயாளின் நோய் எதிர்ப்புதிறனுக்கு ஒப்ப இதன் வகைகள் வேறுபட்டு காணப்படுகின்றன.[7]

  • AIDP
  • AMSAN
  • AMSAN
  • MFS

தடுப்பு முறைகள்

[தொகு]
  • நன்கு கொதிக்க வைத்த நீரினைப் பருகுதல்.[8]
  • இறைச்சி உணவுகளை உண்ணும் போது, குளிர்பதனப் பெட்டிகளில், நீண்ட நாட்கள் பக்குவப்படுத்தப்படாத உணவுகளைத் தேர்ந்தெடுத்து, நன்கு வேகவைத்து உண்ண வேண்டும்.

மருத்துவம்

[தொகு]
  • அதிக செலவாகும், உடல் குருதியினை தூய்மைப்படுத்தும் முறை. (plasmapheresis) [9] [10]
  • மருந்து வில்லைகளை மருத்துவரின் மேற்பார்வையோடு எடுத்துக் கொள்ளுதல்.

பரவல்

[தொகு]
  • இந்நோய் பாதிப்பு உ ஒருவரிடம் இருந்து, மற்றொருவருக்கு எளிதில் பரவாது.
  • 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவின் புனே நகரில் அதிக உயிரிழப்புகள் நடந்துள்ளது.[11][12]
  • 2025 ஆம் ஆண்டு ஆந்திராவிலும் இந்நோய் தாக்கம் ஏற்பட்டது.[13]
  • தமிழ்நாட்டில் மேற்கூறிய ஆண்டில் சென்னையில் ஒரு நோயாளி இறந்ததாக செய்தித்தாள் கூறுகிறது.[14]
  • 2005-2020 இடைப்பட்ட ஆண்டுகளில், ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இது குறித்த ஆய்வு தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டது.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Ferri FF (2016). Ferri's Clinical Advisor 2017: 5 Books in 1 (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 529. ISBN 9780323448383. Archived from the original on 2016-08-21.
  2. "Definition of GUILLAIN-BARRÉ SYNDROME". www.merriam-webster.com (in ஆங்கிலம்). Retrieved 2023-01-27.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Guillain–Barré Syndrome Fact Sheet". NIAMS. June 1, 2016. Archived from the original on 5 August 2016. Retrieved 29 August 2022.
  4. "Population incidence of Guillain-Barré syndrome: a systematic review and meta-analysis". Neuroepidemiology 36 (2): 123–33. 2011. doi:10.1159/000324710. பப்மெட்:21422765. 
  5. https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC11633169/
  6. https://www.webmd.com/brain/what-is-guillain-barre
  7. https://www.medicalnewstoday.com/articles/types-of-guillain-barre-syndrome#amsan
  8. https://www.who.int/news-room/fact-sheets/detail/guillain-barr%C3%A9-syndrome
  9. https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3152164/
  10. https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6464100/
  11. https://www.news18.com/explainers/whats-behind-the-guillain-barre-syndrome-outbreak-in-pune-explained-9203722.html
  12. https://www.thehindu.com/news/national/maharashtra/11-die-of-suspected-guillain-barr%C3%A9-syndrome-in-maharashtra/article69240120.ece
  13. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/17-persons-undergoing-treatment-for-guillain-barre-syndrome-in-andhra-pradesh-says-official/article69219731.ece
  14. https://www.bbc.com/tamil/articles/cx2m49grzpzo
  15. https://www.webology.org/data-cms/articles/20220216104943pmwebology%2018%20(5)%20-%2069%20pdf.pdf

வெளி இணைப்புகள்

[தொகு]
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியான்-பாரே_நோய்குறி&oldid=4213274" இலிருந்து மீள்விக்கப்பட்டது