கியான்பூர்
கியான்பூர் | |
---|---|
![]() கியான்பூர் ஹரிஹர்நாத் சிவன் கோயில் | |
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கியான்பூர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°21′N 82°28′E / 25.35°N 82.47°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | கியான்பூர் பேரூராட்சி மன்றம் |
ஏற்றம் | 81 m (266 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,808 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
• வட்டார மொழி | அவதி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 221304 |
வாகனப் பதிவு | UP-66 |

கியான்பூர் (Gyanpur), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்து ரவிதாஸ் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும் நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கே 275.கிலோ மீட்டர் தொலைவிலும்,கோரக்பூருக்கு தெற்கே 86.5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகைப் பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 11 வார்டுகளும், 2,024 குடியிருப்புகளும் கொண்ட கியான்பூர் பேரூராட்சியின் மக்கள் தொகை 12,808 ஆகும். அதில் 6,908 ஆண்கள் மற்றும் 5,900 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 854 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.3% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,167 மற்றும் 19 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 77.66%, இசுலாமியர் 22.09% மற்றும் பிற சமயத்தினர் 0.16% வீதம் உள்ளனர்.[2]
போக்குவரத்து
[தொகு]தொடருந்து நிலையம்
[தொகு]கியான் ரோடு தொடருந்து நிலையம்[3]கோரக்பூர் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 10 December 2019.
- ↑ Gyanpur Population, Religion, Caste, Working Data Sant Ravidas Nagar, Uttar Pradesh - Census 2011
- ↑ "Gyanpur Road railway station", Wikipedia (in ஆங்கிலம்), 2024-08-01, retrieved 2025-04-02