கிம் கியுன் யுங்
கிம் கியுன் ஜூங் | |
---|---|
பிறப்பு | 김현중 சூன் 6, 1986 சியோல், தென் கொரியா |
பணி | பாடகர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | தெரியவில்லை (m. 2022) |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
Official Website Official Youtube Official Facebook
Kim Hyun-Joong's signature |
கிம் கியுன் யுங் (ஆங்கில மொழி: Kim Hyun-joong, 김현중) (பிறப்பு: ஜூன் 6, 1986) என்பவர் ஒரு தென் கொரிய நாட்டு நடிகர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 'எஸ்.எஸ்501' என்ற ஆண் இசைக்குழுவில் உறுப்பினராக உள்ளார் மற்றும் கொரிய நாடகங்களான பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் (2009) மற்றும் பிளேஃபுல் கிஸ் (2010) ஆகியவற்றில் நடித்துள்ளார்.
இவர் 2005 இல் 'எஸ்.எஸ்501'என்ற இசைக்குழுவுடன் அறிமுகமான பிறகு, கிம் தனது முதல் கொரிய தனி ஆல்பமான பிரேக் டவுனை 2011 இல் வெளியிட்டார், மேலும் இவரது முதல் ஜப்பானிய தனி ஆல்பமான அன்லிமிடெட் என்ற பாடலை 2012 இல் வெளியிட்டார். இவரது வணிக வெற்றியின் காரணமாக, இவர் தென் கொரியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகக் 2010 களின் முற்பகுதியில் கருதப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]இவர் ஜூன் 6, 1986 அன்று சியோலில் பிறந்தார். இவர் இசை சார்பில் ஒரு தொழிலைத் தொடர உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது உயர்நிலைப் பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்று கியோங்கி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். வேலையில் கவனம் செலுத்துவதற்காக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பிறகு, இவர் 2011 இல் மேடை தயாரிப்பு மேலாண்மை படிப்பதற்காக சுங்வூன் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கிம்மின் முதல் மகன் 2015 இல் இவரது முன்னாள் காதலியுடன் பிறந்தது.[1] பின்னர் பிப்ரவரி 27, 2022 அன்று ஒரு கச்சேரியின் போது, கிம் தனது பிரபலம் அல்லாத காதலியுடன் தனது திருமணத்தை அறிவித்தார். பின்னர், கிம்மின் நிறுவனம் செய்தியை உறுதிப்படுத்தியது.[2][3]
இவரது நிறுவனத்தின்படி, இவர்கள் திருமண விழா நடத்தாமல், தங்கள் திருமணத்தைத் தொடர்ந்தனர்.[4] ஜூலை 21, 2022 அன்று, கிம்மின் மனைவி கர்ப்பமாக இருப்பதை அவர்களின் நிறுவனம் உறுதி செய்தது. [5]பின்னர் இவரது இரண்டாவது மகன் ஜூலை 29, 2022 அன்று பிறந்தார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kim Hyun Joong Accused of Not Paying Child Support for 8 years". allkpop.com (in கொரியன்). November 29, 2022.
- ↑ Lee Woo-joo (February 27, 2022). "김현중, 비연예인과 결혼 "힘든 시기 지켜줘, 결혼식은 생략" (공식)[전문]" [Kim Hyun-joong, married to a non-celebrity "Protect me during difficult times, skip the wedding" (Official)[Full text]]. Sports Chosun (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் February 27, 2022.
- ↑ Jo Eun-mi (February 27, 2022). "[공식]김현중, 콘서트서 결혼 발표 "힘들던 시기 곁을 지켜준 분"" [[Official] Kim Hyun-joong announces marriage at concert "The person who protected me during difficult times"]. Herald POP (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் February 27, 2022 – via Naver.
- ↑ Kim Bo-ra (April 6, 2022). "[단독] '일반인♥' 김현중, 결혼식 생략 후 신접살림 차렸다" [[Exclusive] 'People ♥' Kim Hyun-joong, after skipping the wedding, started a new life] (in கொரியன்). OSEN. பார்க்கப்பட்ட நாள் April 6, 2022 – via Naver.
- ↑ Lee Ha-na (July 21, 2022). "김현중 아빠 된다 "비연예인 아내 임신, 설렘 속 새 생명 기다려"[공식]" [Kim Hyun-joong becomes a father “I am pregnant with my non-celebrity wife, waiting for a new life in excitement” [Official]] (in கொரியன்). Newsen. பார்க்கப்பட்ட நாள் July 21, 2022 – via Naver.
- ↑ Kang, Da-yun (October 29, 2022). "[단독] 김현중, 아들 출산…비연예인 아내 득남했다" [[Exclusive] Kim Hyun-joong gives birth to a son... Non-celebrity wife gave birth]. My Daily (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் October 29, 2022 – via Naver.