உள்ளடக்கத்துக்குச் செல்

கிம் காங்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் காங்டே
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
10 மார்ச்சு 1998 – 26 ஏப்ரல் 1999
தொகுதிவெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 அக்டோபர் 1963 (1963-10-30) (அகவை 62)
சுராசந்த்பூர் மாவட்டம், மணிப்பூர், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2017–2019)
பிற அரசியல்
தொடர்புகள்
பணிஅரசியல்வாதி, கல்வியாளர், பத்திரிகையாளர், சமூகப் பணியாளர்

கிம் காங்டே (Kim Gangte; பிறப்பு 30 அக்டோபர் 1963) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், கல்வியாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் சமூகப் பணியாளரும் ஆவார். இவர் வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 1998 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மணிப்பூரிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பையும், ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபைச் சமயத்தைச் சேர்ந்த முதல் மக்களவை உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றவர்.[2][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

கிம் காங்டே 30 அக்டோபர் 1963 அன்று மணிப்பூர், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள உயுங்மகோங் என்ற இடத்தில் வும்கோசெய் காங்டே என்பவருக்கு மகளாகப் பிறந்தார்.[1] இவரது தந்தை வும்கோசெய் காங்டே, ஷில்லாங்கில் ஆரம்பக் கல்வி பெற்ற பின்னர் விவசாயியாக வாழ்ந்தார். இவரது தாயார் கிம்சி சித்லோவ் குடும்பத் தலைவியாக இருந்தார். பொருளாதார சிரமங்களுக்கு மத்தியிலும் பெற்றோர் தங்கள் ஏழு குழந்தைகளுக்கும் கல்வி வழங்கினர். கிம் அவர்கள் குடும்பத்தின் மூத்த குழந்தை ஆவார்.[2] இவர் தனது பள்ளிக் கல்வியை ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் பள்ளி, ஷில்லாங்-இல் முடித்தார். பின்னர் குவகாத்தி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், வரலாறு மற்றும் கல்வியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றார். தொடர்ந்து புனே பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். மேலும் ஐதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் நிறுவனத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் பயிற்சி பெற்றார். பின்னர் இம்பாலில் உள்ள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[2]

அரசியல் மற்றும் சமூகப் பணி

[தொகு]

எம்.பில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் புனேயில் உள்ள ஸ்பைசர் மெமோரியல் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார். மேலும் அகில இந்திய வானொலி, இம்பால் நிலையத்தில் ஆங்கில நிகழ்ச்சிகள் மற்றும் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளுக்கான பகுதி நேர அறிவிப்பாளராகப் பணியாற்றினார். அதே நேரத்தில் ஈஸ்டர்ன் பனோரமா இதழில் செய்தியாளராகவும் பணியாற்றினார்.[2] 1998 ஆம் ஆண்டு 12வது மக்களவை தேர்தலில் மணிப்பூர் மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 1999 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஹோல்கோமாங் ஹவ்கிப்பிடம் தோல்வியடைந்தார்.[4] பின்னர் குக்கி பெண்கள் மனித உரிமை அமைப்பு மற்றும் குக்கி மாணவர் அமைப்பின் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.[2] 2017 ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.[5] 2019 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார்.[6]

ஆர்வங்கள்

[தொகு]

கிம் காங்டே தியானம், தோட்டக்கலை மற்றும் சமையலில் ஆர்வம் கொண்டவர். தனது ஓய்வு நேரங்களில் அரசியல், சமூக, கல்வி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை குறிப்பாக பெண்கள், ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களிடையே ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". Retrieved 20 February 2014.
  2. 1 2 3 4 5 "Biographical Sketch of Kim Gangte". Retrieved 20 February 2014.
  3. Dorothy Eaton Watts. "Kim Gangte: Dialogue with an Adventist member of parliament in India". College and University Dialogue. Retrieved 30 August 2018.
  4. "Gangte finds her feet in Manipur minefield". The Telegraph. 12 April 2004.
  5. "2 former Manipur Congress MLAs switch to BJP".
  6. Ngangbam Indrakanta Singh (29 March 2019). "Kim Gangte quits BJP, joins NPP".
    "https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_காங்டே&oldid=4614783" இலிருந்து மீள்விக்கப்பட்டது