உள்ளடக்கத்துக்குச் செல்

கிம் இல் சுங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1960ல் கிம் இல் சுங்

கிம் இல் சுங் (Kim Il Sung) (15 ஏப்ரல் 1912 – 8 சூலை 1994) வட கொரியாவின் முதல் அதிபர் ஆவார்.[1] கொரிய அரசியல்வாதி மற்றும் வட கொரியா நிறுவனத் தலைவர் ஆவார். இவர் வட கொரியாவின் பிரதம அமைச்சராக 1948 முதல் 1972 முடியவும், பின்னர் வட கொரிய அதிபராக 1972 முதல் 1994ல் இறக்கும் வரை ஆட்சி செய்தார். மேலும் இவர் வட கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக 1949 முதல் 1994 முடிய பதவியில் இருந்தவர்.

கொரியாவில் ஜப்பானின் ஆட்சி (1910-1945) முடிந்த போது, கிம் இல் சுங் 1950ல் தென் கொரியா மீது படையெடுத்தார். கொரியப் போரில் (1950-1953) தென் கொரியாவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக ஐக்கிய அமெரிக்கப் படைகளும், வட கொரியாவுக்கு ஆதரவாக சோவியத் படைகளும் போரிட்டது.

கிம் இல் சுங் தன்னை வழிபடும் முறையை வட கொரியா மக்களிடத்தில் பரப்பினார். 1980ல் தனது மூத்த மகன் கிம் ஜொங்-இல்லை கொரியத் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் தலைவராக தேர்வு செய்ய உதவினார். மேலும் கிம் ஜொங்-இல்லை தனது அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்தார்.

கிம் இல் சுங்கின் மறைவிற்கு பிறகு அவரது மூத்த மகன் கிம் ஜொங்-இல் 9 ஏப்ரல் 1993 அன்று வட கொரியா அதிபராக பதவியேற்றுக் கொண்டார். கிம் ஜொங்-இல் வட கொரியாவின் அதிபராக பொறுப்பேற்றதும், தனது தந்தையும், முன்னாள் வட கொரிய அதிபரான கிம் இல் சுங்கின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கொண்டாடுவதற்கு வசதியாக வட கொரியா முழுவதும் பொது விடுமுறை அறிவித்தார். 1998ல் கிம் இல் சுங்கின் மறைவிற்கு 4 ஆண்டுகள் கழித்து கிம் இல் சுங் கொரியக் குடியரசின் நித்திய அதிபர் என அறிவிக்கப்பட்டார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Encyclopaedia Britannica Kim il-sung". encyclopaedia Britannica.com. Encyclopaedia Britannica Holding S.A.,Encyclopædia Britannica, Inc. 3 January 2022. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 3 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_இல்_சுங்&oldid=3714087" இலிருந்து மீள்விக்கப்பட்டது