கிம்மனே ரத்னாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம்மனே ரத்னாகர்
தீர்த்தஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
4 சூன் 2008 – 16 மே 2018
முன்னையவர்ஆரக ஞானேந்திரா
பின்னவர்ஆரக ஞானேந்திரா
தொகுதிதீர்த்தஹள்ளி, சிவமொக்கா[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கிம்மனே ரத்னாகர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி

கிம்மனே ரத்னக்கர் (Kimmane Rathnakar) இவர் கர்நாடகவின் முன்னால் அமைச்சரும், தொழில்முறை வழக்கறிஞரும் மற்றும் சிவமொக்கா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமாவார்.[2] இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் கர்நாடக அரசில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர், தீர்த்தஹள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் கர்கலாவின் புவனேந்திர கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். 1966 இல், பி.எம்.எஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் முடித்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

18 சூன் 2016 வரை கர்நாடக அரசின் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சராக இருந்தார். 2013 ஆம் ஆண்டில், இவர் (இந்திய தேசிய காங்கிரஸ்) ஆர்.எம்.மஞ்சுநாத கௌடாவை (கே.ஜே.பி) 1343 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். ஆனால், 2018 ல் ஆரக ஞானேந்திராவிடம் (பிஜேபி) 21,679 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

துணிச்சலான செயல்[தொகு]

17 செப்டம்பர் 2013 அன்று, சிவமொக்கா அருகே பெகுவல்லி ஏரியில் மூழ்கிய 6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தை இவர் காப்பாற்றினார்.[2] இவர் தனது சொந்த ஊரான தீர்த்தஹள்ளியில் இருந்து பெங்களூருக்கு திரும்பி வந்தபோது, ஒரு வாகனத்தில் சிலர் உதவி வேண்டி நிற்பதைக் கண்டார். அமைச்சரின் மெய்க்காப்பாளரும் ஓட்டுநரும் ஏரியில் குதித்து தைரியமாக குடும்பத்தை காப்பாற்றினர். அவர்களுடைய மருத்துவ சிகிச்சையையும் இவர் ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு தனது ஆடைகளையும் பகிர்ந்து கொண்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 15 June 2012. பார்க்கப்பட்ட நாள் 23 October 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. 2.0 2.1 "Meet Kimmane Ratnakar, a Minister turned into National Hero". பார்க்கப்பட்ட நாள் 18 September 2013.
  3. "Karnataka minister, staff jump into lake, save 6 in sinking car". 18 September 2013. https://timesofindia.indiatimes.com/india/Karnataka-minister-staff-jump-into-lake-save-6-in-sinking-car/articleshow/22671954.cms?. பார்த்த நாள்: 11 November 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்மனே_ரத்னாகர்&oldid=3926584" இலிருந்து மீள்விக்கப்பட்டது