கிமு 490

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 1-ஆம் ஆயிரமாண்டு கிமு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:

ஆண்டு கிமு 490 (490 BC) என்பது யூலியன் நாட்காட்டிக்கு முன்னரான உரோமை நாள்காட்டியில் ஓர் ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு கமேரினசு, பிளாவசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு (Year of the Consulship of Camerinus and Flavus) எனவும் சில வேளைகளில் பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 264" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 490 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

நிகழ்வுகள்[தொகு]

கிரேக்கம்[தொகு]

  • ஏதெனியர்களையும் எரேத்திரியர்களையும் தாக்கும் பொருட்டு முதலாம் டேரியசு தனது கடற்படைகளை ஏஜியன் கடலை நோக்கி அனுப்பினான்.
  • ஆசிய மைனரின் இயோனியக் கிரேக்கர்கள் பாரசீகர்களுக்கு எதிராக கிமு 499 இல் கிளர்ச்சியைத் தொடங்கிய போது, எரேத்திரியா ஏதென்சுடன் இணைந்து கிளர்ச்சியாளர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கியது. இதற்குப் பழிவாங்கும் முகமாக டேரியசு கிரேக்கத்தை முற்றுகையிட்ட போது எரேத்திரியா நகரைச் சூறையாடி, தீயிட்டு அழித்தான். அங்கிருந்த மக்களை அடிமைகளாக்கினான்.
  • செப்டம்பர் 12மாரத்தான் போர் இடம்பெற்றது. 20,000 இற்கும் அதிகமான படையினருடன் பாரசீக இராணுவம் கிரேக்கத்தின் மாரத்தான் குடாவில் தரையிறங்கியது.
  • பைடிப்பிடசு என்பவன் தூதுவனாக உதவி கோரி ஏதென்சில் இருந்து எசுபார்த்தா வரை ஓடித் திரும்பினான். இவ்வாறு மொத்தம் 480 கிமீ தூரம் ஓடியதாக கிரேக்க-பாரசீகப் போர்கள் குறித்த ஆவணங்களைத் தந்த முக்கிய கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசு குறிப்பிடுகிறார்.[1][2] போர் முடிந்தது அவன் வெற்றிச் செய்தியைப் பரப்புவதற்கு ஏதென்சுக்குத் திரும்ப ஓடி அங்கு இறந்தான்.
  • பாரசீகர்களின் தோல்வியை அடுத்து, இப்பியாசு லெம்னோசில் இறந்தான்.

ஐரோப்பா[தொகு]

  • அண்ணளவான நாள்
    • இமில்க்கோ என்ற கார்த்தாசீனிய மாலுமி நடுநிலக் கடலில் இருந்து ஐரோப்பாவின் வடமேற்குக் கரையை அடைந்த முதலாவது நாடுகாண் பயணி ஆவார்.

பிறப்புகள்[தொகு]

இறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிமு 490
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமு_490&oldid=3882603" இலிருந்து மீள்விக்கப்பட்டது