கிமு 3 - கிபி 12 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிமு 3 - கிபி 12 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் என்பது சங்க காலம் தொடக்கம், தற்போது விரிவான இலக்கியச் சான்றுகள் கிடைக்கும் 13 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சார்ந்த ஈழத்து தமிழ் இலக்கியம் ஆகும். ஈழத்து இலக்கிய பாகுபாட்டில் இக் காலத்தின் தொடக்கப் பகுதியை சங்ககாலம் அல்லது மகாவம்ச அரசர் காலம் என்பர். இக்காலப்பகுதியைச் சார்ந்த முழுமையான இலக்கியப் படைப்புக்கள் கிடைப்பெறவில்லை. பிற தமிழ்/சிங்கள இலக்கியங்களில் இடம்பெறும் குறிப்புக்கள், பதிகங்கள், பாடல்கள், சிங்கள/பாளி இலக்கியங்களில் இடம்பெறும் தமிழ் மொழியின் தாக்கங்கள், வாய்மொழி/நாட்டார் இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் சாசனங்களைக் கொண்டு ஆய்வாளர்கள் மீட்டுருவாக்க முயற்சிகளைச் செய்துள்ளார்கள்.[1]

விரிவான சிங்கள இலக்கிய சான்றுகள் கிபி 12 நூற்றாண்டிலேயே கிடைக்கத் தொடங்குகின்றது. இந்தக் காலத்துக்கு முந்திய படைப்புக்கள் அந்நியர் படைப்யெடுப்புக்களினால் அழிந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதே போன்ற காரணங்களால் தமிழ் இலக்கியங்களும் அழிந்திருக்கலாம் என்று ஆ. வேலுப்பிள்ளை தனது ஆய்வில் சுட்டுகிறார்.[2]

கால வகைப்பாடு[தொகு]

  • அனுராதபுர காலம் (கிமு 377 - கிபி 993)
  • சங்க காலம்/மகாவம்ச அரசர் காலம் (கிமு 300 - கிபி 300)
  • முந்திய சோழர் ஆட்சி
  • சோழர் காலம் (கிபி 993 - 1077)

சான்றுகள்[தொகு]

கிபி 12 ஆம் நூற்றாண்டு - பதவியா கல்வெட்டுச் செய்யுள் [3][தொகு]

உத்தமர்தங் கோயில் வலகழி எனலும்
நித்தநியமம் நெறிவளர்
சித்தமுடன் சீரிளமை சேர்ந்த
பதியில் விளையாரம்ப பேரிளமையார்த்துகள்
போதா வாயிரங் கொண்டுரைப்பர் திரு
சூத்தமாக முயன்றான் முயன்ற திரு.

கிபி 9/10 ஆம் நூற்றாண்டு - நாலுநாட்டார் கல்வெட்டு - அனுராதபுரச் செய்யுள் [4][தொகு]

போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந்
தீதி வருள்சுரக்குஞ் சிந்தையா – னாதி
வருதன்மங் குன்றாத மாதவன்மாக் கோதை
யொருதர்ம பாலனுளன்.

கிபி 7 ஆம் நூற்றாண்டு - சம்பந்தரின் திருக்கேதீச்சரம் பதிகம்[தொகு]

தென்னிலங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்னலங்கெட அடர்த்து அவற்கருள் செய்ததலைவனார் கடல்வாயப்
பொன்னிலங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னியன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மனோன்மணி சண்முகதாஸ் (2012). இலங்கைத் தமிழியியல் - சில பதிவுகள். குமரன் புத்தக இல்லம். 
  2. மனோன்மணி சண்முகதாஸ் (2012). இலங்கைத் தமிழியியல் - சில பதிவுகள். குமரன் புத்தக இல்லம். 
  3. மனோன்மணி சண்முகதாஸ் (2012). இலங்கைத் தமிழியியல் - சில பதிவுகள். குமரன் புத்தக இல்லம். 
  4. ஆ.வேலுப்பிள்ளை (1986). "தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்". பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]