கிமு 25-ஆம் நூற்றாண்டு
Appearance
ஆயிரமாண்டுகள்: | 3-ஆம் ஆயிரமாண்டு கிமு |
---|---|
நூற்றாண்டுகள்: | 26-ஆம் நூற்றாண்டு கிமு · 25-ஆம் நூற்றாண்டு கிமு · 24-ஆம் நூற்றாண்டு கிமு |
பத்தாண்டுகள்: | கிமு 2490கள் கிமு 2480கள் கிமு 2470கள் கிமு 2460கள் கிமு 2450கள் கிமு 2440கள் கிமு 2430கள் கிமு 2420கள் கிமு 2410கள் கிமு 2400கள் |
கிமு 25-ஆம் நூற்றாண்டு (25th century BC) என்பது கிமு 2500 முதல் கிமு 2401 வரையான நூற்றாண்டுக் காலப்பகுதியாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- அண். கிமு 2900 – கிமு 2334: பண்டைய அரசகுலக் காலத்தில் மெசொப்பொத்தேமியாப் போர்கள்
- அண். கிமு 2686: இரண்டாவது எகிப்திய அரசகுல க் காலம் நிறைவடைந்து, மூன்றாவது அரசகுலக் காலம் ஆரம்பம். எகிப்தியப் பிரமிதுகள் அமைக்கப்பட்டன.
- அண். கிமு 2560: கிசாவின் பெரிய பிரமிடு கட்டி முடிக்கப்பட்டது.
- அண். கிமு 2500: குறியீட்டு முறைப் பாடசாலைகள் சுமேரியாவில் ஆரம்பிக்கப்பட்டன.
- அண். கிமு 2500: அசிரியா நிறுவப்பட்டது.
- அண். கிமு 2500: ஸ்கேரா பிரே (இன்றைய இசுக்கொட்லாந்து, ஓர்க்னி தீவுகளில்) புதிய கற்காலக் குடியிருப்புகள் 600-ஆண்டுகள் குடியிருப்புகள் கைவிடப்பட்டன.
- அண். கிமு 2500 – கிமு 2000: அண்ணளவாக 7 சதுரமைல் பரப்பளவு மொகெஞ்சதாரோவில் மக்கள் தொகை 20,000 முதல் 50,000 வரையாகும்.
- கிமு 2492: ஆர்மீனியா அயிக் என்பவரால் நிறுவப்பட்டது.
- அண். கிமு 2400 – கிமு 2200: ஸ்டோன் ஹெஞ்ச் கட்டுமானம் ஆரம்பம்.
- பெருங்கற்காலம் ஐரோப்பா மற்றும் மேற்கு நடுநிலக்கடல் பகுதிகளில் பரவியது.
- தென்கிழக்கு எசுப்பானியாவில் நடுநிலக்கடல் பகுதியில் இருந்து மக்கள் குடியேற்றம்.
- அமோரிட்டு, கானான் மக்கள் சிரியா, மற்றும் லெபனானில் குடியேறினர்.
கண்டுபிடிப்புகள், அறிமுகங்கள்
[தொகு]- சிந்துவெளி நாகரிகம், தனது அதியுயர் நிலையில், கிட்டத்தட்ட 480,000 கிமீ² (298 258.172 மைல்²) பரப்பளவைக் கொண்டிருந்தது. இதன் முக்கிய பகுதி பாக்கித்தானில் சிந்து ஆற்றில் அமைந்திருந்தது. ஆனாலும் பல குடியேற்றங்கள் பலுச்சிசுத்தானம், ஆப்கானித்தான், கிழக்குn பஞ்சாப், கட்ச், சௌராட்டிரம் போன்ற பிரதேசங்களிலும் பரவியிருந்தது. சிந்து நாகரிகம் அரப்பா, மொகெஞ்சதாரோ, காளிபங்கான், தோலாவிரா, லோத்தல் போன்ற பல நகரங்களிலும் பரவியிருந்தது. பண்ணைகளுக்கு நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தினர், நகரங்களைக் கட்டியெழுப்பினர்.
- சுமேரியர்கள் கழுதைகளை போர் இரதங்களுக்குப் பயன்படுத்தினர்.