கிமிதி மிருணாளினி
கிமிதி மிருணாளினி | |
|---|---|
| பிறப்பு | 1958 சீபுருபள்ளி |
| பணி | அரசியல்வாதி |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| வாழ்க்கைத் துணை | கிமிதி கணபதி ராவ் |
கிமிதி மிருணாளினி (Kimidi Mrunalini)(பிறப்புஃ 5 மார்ச் 1958) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயநகர மாவட்டத்தில் உள்ள சீபுருபள்ளி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மிருணாளினி சீப்புருபள்ளியைச் சேர்ந்தவர். இவர் அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கிமிதி கணபதி ராவை மணந்தார்.[2] இவரது மைத்துனர் கிமிதி கலா வெங்கட ராவ் மற்றும் இவரது மகன் நாகார்ஜுனாவும் அரசியலில் உள்ளனர்.[3][4][5]
அரசியல்
[தொகு]2014ஆம் ஆண்டில் சீபுருபள்ளி சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக மிருணாளினி காங்கிரசு மூத்த தலைவர் போட்சா சத்யநாராயணாவை 20,842 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் 2014 முதல் தெலுங்கு தேசம் அரசாங்கத்தில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்தார். ஆனால் ஏப்ரல் 2017இல் அவரது மைத்துனர் கிமிதி கலா வெங்கட ராவ் அமைச்சராக நியமிக்கப்பட்டபோது நீக்கப்பட்டார்.[6][7][8][9] இவர் முன்னாள் விஜயநகர மாவட்ட பரிசத் தலைவராகவும் இருந்துள்ளார்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kimidi Mrunalini". Electwise (in ஆங்கிலம்). Retrieved 2024-04-20.
- ↑ Pativada, Sreenu Babu (2024-03-29). "Unlike YSRC, TDP chooses young guns over political dynasts in Andhra Pradesh". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-04-20.
- ↑ Rao, K. Srinivasa (2020-10-28). "Govt. burdening people with heavy taxes: TDP" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/govt-burdening-people-with-heavy-taxes-tdp/article32967295.ece.
- ↑ Rao, K. Srinivasa (2024-03-29). "TDP's Kimidi Nagarjuna quits as in-charge of Cheepurupalli over denial of ticket for Assembly elections" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/andhra-pradesh-assembly/tdps-kimidi-nagarjuna-quits-as-in-charge-of-cheepurupalli-over-denial-of-ticket/article68006389.ece.
- ↑ Pativada, Sreenu Babu (2023-09-06). "Young aspirants pose challenge to TDP seniors in Andhra". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-04-20.
- ↑ PTI. "AP Cabinet: Naidu inducts son, 4 YSRC MLAs who switched sides". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2024-04-20.
- ↑ "Make green drive a success: Mrunalini" (in en-IN). The Hindu. 2016-07-28. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/Make-green-drive-a-success-Mrunalini/article14514759.ece.
- ↑ Pativada, Sreenu Babu (2024-03-29). "Unlike YSRC, TDP chooses young guns over political dynasts in Andhra Pradesh". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-04-20.
- ↑ "Reduce misuse of SHG loans, Kimidi Mrunalini to officials". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2015-11-11. Retrieved 2024-04-20.
- ↑ "Cheepurupalli Telugu Desam chief quits". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2024-03-29. Retrieved 2024-04-20.