கிப்லி கடிகாரம்

ஆள்கூறுகள்: 35°39′51″N 139°45′36″E / 35.66407°N 139.75994°E / 35.66407; 139.75994
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிப்பிலி கடிகாரம் (நிப்பான் தொலைக்காட்சி கடிகாரம்)
ஓவியர்அயாவோ மியாசாகி
நிறைவு தேதி2006
ஆக்கப் பொருள்செம்பு மற்றும் எஃகு
பரிமானங்கள்12 m × 18 m (470 அங் × 710 அங்)
நிலைகாட்சிப் பொருள்
இடம்நிப்பான் தொலைக்காட்சி கோபுரம், நிப்பான், டோக்கியோ மாநகராட்சி, மினாட்டோ வட்டம், (டோக்கியோ), மினாட்டோ வட்டம்
ஆள்கூற்றுகள்35°39′51″N 139°45′36″E / 35.66407°N 139.75994°E / 35.66407; 139.75994
உரிமையாளர்நிப்பான் தொலைக்காட்சி குழுமம்

கிப்லி கடிகாரம் (Ghibli Clock) சப்பானில் தோக்கியோ நகரத்திலுள்ள மினாடோ பகுதியின் நிட்டெரி கோபுரத்திற்கு வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒரு கடிகாரம் ஆகும். நிப்பான் தொலைக்காட்சி கோபுரம்[1] என்றும் அயாவோ மியாசகி என்பவரால் வடிவமைக்கப்பட்ட காரணத்தால் அயாவோ மியாசாகி நிப்பான் தொலைக்காட்சி பெரிய கடிகாரம் என்றும் நிட்டெரி மணிகூண்டு என்றும்[2] பல பெயர்களால் இக்கடிகாரம் அழைக்கப்படுகிறது. செப்பு மற்றும் எஃகு ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தி இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.[3][4] கடிகாரம் சுமார் 12 மீ உயரமும் 18 மீ அகலமும் கொண்டதாகும். 32 இயந்திர அச்சு மற்றும் ஒலி பொறிகளை கொண்டு தானியங்கி முறையில் இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒலி பொறிகள் திங்கள் முதல் வெள்ளி வரை 5 தடவைகளும் (12:00, 13:00, 15:00, 18:00, 20:00), சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 6 தடவைகளும் (10:00, 12:00, 13:00, 15:00, 18:00, 20:00), 3 நிமிடங்கள் அளவுக்கு ஒலியெழுப்புகின்றன.

வரவேற்பு[தொகு]

டைம் அவுட் டோக்கியோ இதழின் ஆசிரியர்களான மாட் சுக்லே மற்றும் கைலா இமாடா ஆகியோர் தோக்கியோ நகரத்தின் "சிறந்த பொது கலை சிற்பங்கள்" என்ற பட்டியலில் 2019 ஆம் ஆண்டு இக்கடிகாரத்தையும் உள்ளடக்கியுள்ளனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "日テレ大時計". 日本テレビ放送網. பார்க்கப்பட்ட நாள் 2020-05-10.
  2. "宮崎駿デザインの日テレ大時計". 乃村工藝社. Archived from the original on 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2020-05-10.
  3. "Tokyo's Only Vaudeville–Cuckoo Clock–Steampunk–Victorian Curio Cabinet Timepiece". Slate Magazine (in ஆங்கிலம்). 2016-11-24. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "Hayao Miyazaki Designed An Awesome Clock". Geek.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-11-26. Archived from the original on 2019-07-19. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  5. "Best public art sculptures in Tokyo". Time Out Tokyo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்லி_கடிகாரம்&oldid=3716694" இலிருந்து மீள்விக்கப்பட்டது