உள்ளடக்கத்துக்குச் செல்

கிப்சாக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுகன்சுக்கில் ஒரு 12ஆம் நூற்றாண்டு முன்னோர் கல்வெட்டில் கிப்சாக் சிலை.

கிப்சாக்குகள் என்பவர்கள் நடுக்காலத்தில் ஐரோவாசியப் புல்வெளியின் பகுதிகளில் இருந்த ஒரு துருக்கிய நாடோடி மக்கள் மற்றும் கூட்டமைப்பு ஆகும். இவர்கள் கிப்சாக் துருக்கியர்கள் அல்லது போலோவிதிசியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் முதன்முதலில் இரண்டாவது துருக்கிய ககானரசின் பகுதியாக 8ஆம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அல்த்தாய் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. பின் வந்த நூற்றாண்டுகளில் பிற பகுதிகளுக்கும் விரிவடைந்தனர். முதலில் கிமேக் கானரசின் பகுதியாகவும், பிறகு குமன்களுடன் இருந்த கூட்டமைப்பின் பகுதியாகவும் விரிவடைந்தனர். கிப்சாக் குழுக்கள் பாண்டிக்-காசுப்பியப் புல்வெளி, சீனா, சிர் தாரியா மற்றும் சைபீரியா ஆகிய பகுதிகளில் காணப்பட்டனர். 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குமன்-கிப்சாக் கூட்டமைப்பானது மங்கோலியர்களால் வெல்லப்பட்டது.[1][2][3][4]  

உசாத்துணை

[தொகு]
  1. Clauson, Gerard (1972). An Etymological Dictionary of Pre-13th Century Turkish. Oxford University Press. p. 581.
  2. Julian Baldick, Animal and Shaman: Ancient Religions of Central Asia, p.55.
  3. Golden, Peter B. (1992). An Introduction to the History of the Turkic People. Wiesbaden: Otto Harrassowitz. p. 271
  4. Golden, Peter B. The Turkic world of Mahmud al-Kashgari. p. 522
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்சாக்குகள்&oldid=3459824" இலிருந்து மீள்விக்கப்பட்டது